புதுத்தெருவை சேர்ந்த சி ந மூ. அப்துல் காதர். மு அ. அப்து மஜித் இவர்களின் பேரனும் இக்பால் அவர்களின் மகனும் ஹாரிஸ், ஷஃபி. ராஜிக். இவர்களின் தம்பியுமான அப்துல் காதர் (24) இன்று இந்திய நேரப்படி அதிகாலை 3.00 மணி அளவில் சென்னையில் காலமாகிவிட்டார்கள். இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னரின் ஜனாசா இன்று(05.03.2010 வெள்ளிக்கிழமை) இஷா தொழுகைக்குப்பின் தக்வாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.இறந்த அன்னாரின் மஃபிரத்திற்க்காக துஆ செய்யவோமாக.ஆமீன்!
சகோதரர் அப்துல் காதர் அவர்கள் சமூக அக்கறையும் ஆர்வமும் கொண்டவர்.
சிரித்த முகம், அமைதியான பேச்சும், அண்டை வீட்டாருக்கு முகம் சுழிக்காமல் உதவி செய்யும் தன்மை...இப்படி நற்காரியங்கள் மூலம் தனது 24வயது வரை நன்மைகளை சம்பாதித்தார்!
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான். பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான். மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான். இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 2:28)
Unknown
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்