கான்பூர்: ஹிந்து மத சாமியார் சத்ய சாய்பாபாவின் சீடர் ஹிந்து சாமியார் சிவ் முரத்திவேதி கோவில் சுரங்க அறையில் இளம் பெண்களை மிக நூதனமாக ஏமாற்றி விபசார தொழிலில் ஈடுபடுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. குடும்பத்தை பிரிந்து தனிமையில் இருக்கும் பெண்களை கணவனை பிரிந்தவர்கள் என இவர்களை இணையத்தளம் மூலம் தேடி கண்டு பிடித்து, அவர்களிடம் பண ஆசை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தினார்..
இதன் மூலம் லட்சக் கணக்கில் பணம் கிடைத்ததால் கல்லூரி மாணவிகள், விமானப்பணிப் பெண்கள் என பல பெண்கள் அவர் விரித்த வலையில் விழுந்து விட்டனர். ஹிந்து மத சாமியார் சிவ்முரத் திவேதியிடம் டெல்லி போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் ஒவ்வொரு நாளும் புது புது தகவல்களாக வெளியானபடி உள்ளது.
நேற்று சாமியாரிடம் போலிஸார் நடத்திய விசாரணையில் டெல்லியில் 5 இடங்களில் விபசார மையம் வைத்திருந்த தகவலை போலீசாரிடம் ஹிந்து மத சாமியார் சிவ்முரத் திவேதி வெளியிட்டார். டெல்லியில் பணக்காரர்கள் வசிக்கும் சி.ஆர்.பார்க், செக்டார் 3 ஆ.கே.புரம், பிகாஜி காமா பிளேஸ் (முகம்மத்பூர்), சப்தர்ஜங் என்கிளேவ் (ஹியூமான்பூர்), மற்றும் தேவ்லி (ஜவகர் பார்க்) ஆகிய 5 இடங்களில் சிவ்முரத் திவேதி விபசார விடுதி வைத்திருந்தார். இந்த 5 இடங்களுக்கும் போலீசார் சீல் வைத்துள்ளனர்.
டெல்லி தவிர தன்னிடம் சிக்கும் பெண்களை உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சிம்லாவுக்கு அனுப்பி ஹிந்து மத சாமியார் சிவ்முரத் திவேதி பணம் சம்பாதித்துள்ளார். இது பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். விபசார தொழில் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை கொண்டு புனே, வாரணாசி, லக்னோ, பெங்களூர் நகரங்களில் ஹிந்து மத சாமியார் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அவற்றையும் போலீசார் முடக்கி வருகிறார்கள். சாமியாரிடம் விசாரணை நடத்த தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்