Breaking News
recent

இலண்டன் தமிழ்சங்க மாநாட்டில் உமர்தம்பி அவர்கள் பற்றி ஒரு கோரிக்கை சொற்பொழிவு!

1)இந்திய தமிழ் முஸ்லிம் நற்பணி சங்கம் என்னும் அமைப்பு பிரட்டனில் மிகவும் பயனுள்ள வகையில் செயல்பட்டு வருகிறது.
அதன் தலைவராக சகோ. Dr. M. அஹ்மது கபீர் அவர்கள் (அதிரை EPM SCHOOL முஹம்மத் அபுல் ஹசன் அவர்களின் மருமகன்) செயலாற்றி வருகிறார்கள்.

2)இலண்டன் தமிழ் சங்கத்தின் 50வது  பொன்விழா 24/04/2010 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் இந்திய தமிழ் முஸ்லிம் நற்பணி சங்கம் சார்பாக அதன் தலைவர் Dr. M. அஹ்மது கபீர் அவர்கள் வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டுள்ளார்கள் என்னும் தகவல் அன்று காலை நமக்கு (அதிரை போஸ்ட்) கிடைத்தது!

3)உடனே இந்திய தமிழ் முஸ்லிம் நற்பணி சங்க தலைவர் Dr. M. அஹ்மது கபீர் அவர்களை தொடர்புக்கொண்டு "உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைவேண்டும்" என்று அதிரை சகோதரர்களும் உண்மையான தமிழ் ஆர்வளர்களும் முழுவீச்சில் வலைப்பூ,வலைத்தளம் உள்ளிட்ட பல முனைகளில் கருத்துரைப்பரப்பியும் சந்திப்பின் மூலமாகவும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்நிலையில் தாங்கள் கலந்துக்கொள்ளும் மாநாட்டை பயன் படுத்திக்கொள்ள வேண்டும்" என அன்பு கோரிக்கை வைத்து "உமர்தம்பி"காக்கா அவர்களைப்பற்றிய செய்திகள், தகவல்கள் உள்ள வலைப்பூ, வலைத்தளம் சுட்டிகளை அவர்களின் பார்வைக்கு கொடுத்தோம்!

4)"உமர்தம்பி"காக்கா அவர்களைப்பற்றிய குறிப்புகளை தயார் செய்து; "உமர்தம்பி"காக்கா அவர்களைப்பற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட மாநாட்டில் மிகவும் அருமையான ஒரு சொற்​பொ​ழிவை நிகழ்த்தி "கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்க வேண்டும்  என்ற கோரிக்கையை இலண்டன் தமிழ் சங்கம் தமிழக அரசுக்கு வைக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இதனை அந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆமோதித்தனர்.அல்ஹம்துலில்லாஹ்!

5)இலண்டன் தமிழ் சங்கத்தின் விழா வழி ஆயிரக்கணக்கான மக்களுக்கு நேரடியாக சென்றடைந்த‌து மட்டுமின்றி அய்ரோப்பிய தமிழ் மக்களால் மிகவும் விரும்பி பார்க்கப்ப‌டும் "தீபம் தொலைக்காட்சி"யிலும் காட்டப்பட உள்ளது!

6)தீபம் தொலைக்காட்சியைத்தொடர்ந்து கும்பக்கோணம் பகுதி கேபிள் டிவிகளிலும் ஒளிபரப்பப்பட உள்ளது; அதன் வீடியோ பதிவை விரைவில் பெற்று உங்களின் பார்வைக்கும் தர முயன்று வருகிறேன்.இன்ஷா அல்லாஹ்!
Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. நன்றி சகோதரரே, இந்த செய்தியை படிக்கும் போது உண்மையில் மிக்க மகிழ்ச்சி. நம்பிக்கை பலமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. அனைவரது ஒவ்வொரு முயற்சிக்கும் பலன் கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.