காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுதேர்வில் முதல் இடம் பிடித்த மாணவி சகோதரி
ஏ.ஜெ.ஆய்ஷா அவர்கள் பெற்ற மதிப்பெண்
1065 .
அந்த மாணவியின் தந்தை உ. ம.அப்துல் ஜப்பார் அவர்கள் நடுத்தெருவை சேர்ந்தவர்.தற்போது உலக வணிகத்தலைநகர் நியூயார்க்கில் வசித்து வருகிறார்.
அவரிடம் இந்த வெற்றி குறித்து அதிரை எக்சுபிரசுக்காக கேட்ட போது
,"இந்த வெற்றி தந்த அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.என் மகள் சதா நேரமும் படிப்பும்,தொழுகையுமாகத்தான்(குப்பாயமுமாக-ஹிஜாப்) இருப்பார்.என் மகளுக்கு மார்க்க கல்வி கற்கவே மிக விருப்பம்,எனவே மார்க்க கல்வியுடன் கூடிய பொதுக் கல்வியும் கொண்ட பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியாக தேடிக்கொண்டிருக்கின்றேன்,மேலும் என் மற்ற மகள்களும் கூட பள்ளியிலேயே முதலாவதாக வந்தவர்கள்தான்.இதை பள்ளி நிர்வாகம் பலமுறை சிலாகித்துப் பேசியுள்ளது"என்று முடித்துக் கொண்டார்.அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நாமும் வாழ்த்து சொன்னோம்.
மார்க்கத்தை,ஹிஜாபை பேணி ஒழுகும் இந்த நல் மங்கை மட்டுமல்ல,அவரது பெற்றோரும் பாராட்டத்தக்கோர் எனில் அது மிகை அல்ல.
குறிப்பு :மார்க்கக கல்வியுடன் கூடிய முஸ்லிம் பெண்கள் கல்லூரிகள் எவைகள் என்பது குறித்து எக்ஸ்பிரஸ் வாசகர்கள் பின்னூட்டம் இடும்படி வேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்