அதிரைப்பட்டினத்தில் பல வலைப்பூக்கள் உள்ளன. .அதிரையோடு தொடர்புடைய பெயர்ப் பஞ்சம் ஏற்படும் அளவு ஒவ்வொன்றும் பெயர்பதிவு செய்யப்பட்டுவிட்டது.
அதனால்தான் இப்போது எண்களிலும் கூட வலைப்பூ பதிவு செய்யப்படுகின்றது! அந்த வலைப்பூக்காரர்கள் (வலைஞர்கள்) அவரவரிடம் உள்ள தகவலுக்கேற்பச் செய்திகளை வெளியிடுகிறார்கள். தனி நபர்கள் தமக்குப் பிடித்தமான பெயரில் இயங்குகிறார்கள்; சில இயக்கங்கள் அவர்களின் தலைமை, கிளை அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடம் அனுமதி பெற்று இயக்கப் பெயர்களில் நடாத்துகிறார்கள். இவை எல்லாவற்றையும் நாம் வரவேற்கிறோம்.
ஆனால், சில தினங்களாக 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்' http://www.samsulislamsangam.
கடந்த மாதம் சங்கத்தில் ஏற்பட்ட பரபரப்பு ஒரு வழியாக அறிஞர் பெருமக்களால் தீர்த்து வைக்கப்பட்டு, இப்போதுதான் பெருமூச்சு விட்டுள்ளது. இந்த நிலையில் வலைப்பூ வழியில் மீண்டும் சோதனை வந்துள்ளது. வலைப்பூ மட்டுமின்றி, மின்னஞ்சல் முகரியும் துவக்கியுள்ளார்கள்.
எனவே, ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் இந்த வலைப்பூவிற்கும் அறவே சம்மந்தமில்லை என்பதை அதிரைப்பட்டின வாசிகளுக்கும் ஏனையவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வதாக ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசி ஒருவர் தெரிவித்தார். தேவையானால் இந்த வலைப்பூ இயக்குனர்கள் வேறு பெயரைத் தேர்வு செய்துக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.
இந்த வலைப்பூவிற்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் தொடர்பில்லை என்பதை சங்கம் அதிகாரப்பூர்வமாகத் தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும். ஏனெனில், சங்கம் முறையாகப் பதிவு செய்யப்பட அமைப்பாகும். சங்கம் மறுப்புத் தெரிவிக்காவிடில், அந்த வலைப்பூவில் வரும் செய்திகள் சங்கத்திற்கெதிராகவே திரும்ப வாய்ப்புள்ளது.
அதிரைப் பெருங்குத்தூசி

கண்டிப்பா சங்கம் நடவடிக்கை எடுக்கனும்
பதிலளிநீக்கு