இது ரொம்பவும் சீரியஸான மேட்டர்!!! முழுசா படிக்காம தப்பா நினைச்சிங்க......................... அப்புறம் இருக்கு உங்களுக்கு!!!
ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்க! அவங்க, தன்னோட நாளாந்த வாழ்கையை கொண்டு நடாத்துறதுக்காக வடை சுட்டு வாழ்கையை நடாத்தி வந்தாங்களாம்! அவங்க எப்பவுமே தொழிலில கண்ணும் கருத்துமா இருப்பாங்களாம்!
ஒருநாள் பாட்டி இப்படியே வடை சுட்டுட்டு இருக்கும் போது, அந்த வழியாக வந்த காகம் இந்த காட்சியை பார்துதாம். உடனே அதுக்கு பாட்டி சுடுற வடையை சுடணும் எண்டு ஒரு ஜடியா வந்துதாம்! மெல்ல காகம் மரத்து மேல உட்கார்ந்து தருணம் பார்த்து இருந்துதாம். வடை சுட்டுட்டு இருந்த பாட்டி கொஞ்சம் அசந்த சமயம் பார்த்து, ஒரு சுட்டு வச்ச வடையை சுட்டுட்டு ஓடி போச்சாம்! ஓடி போன காகம் அத காட்டுல இருந்த மரத்துல வச்சுகிட்டு சாப்பிட தயாராகிட்டு இருக்கும் போது,
அந்த வழியா ஒரு நரி வந்துகிட்டு இருந்துதாம். அந்த நரி இந்த காகத்தையும் அதன் வாயிலிருந்த வடையையும் பார்த்துதாம். பார்த்த உடனேயே அதுக்கு எப்படியாவது வடையை சுடனும் எண்டு எண்ணியதாம். உடனே, நரி காகத்தை பார்த்து, “காக்கா காக்கா அழகானா காக்கா உன்னை போலவே உன் குரலும் அழகாகவே இருக்கும். எனவே, ஒரு பாட்டு பாடேன்.” என்று சொல்லியதாம்.
கிளைமாக்ஸ் – 01
நரியின் வஞ்சக புகழ்ச்சியை கேட்டு ஏமாந்த அறியா காகமோ, பாட்டு பாட எத்தனிக்க வாயிலிருந்த வடை தவறி கீழே விழுந்தது. அதை உடனே நரி எடுத்து கொண்டு ஓடி விட்டதாம். உடனே, காகம் தந்து அறியாமையையும், நரியின் வஞ்சகத்தையும் எண்ணி நொந்து கொண்டதாம். பிறகு எப்போதுமே நரியை கண்டால் காகம் காண்டாகிடுமாம்.
கிளைமாக்ஸ் – 02
நரியின் வஞ்சக புகழ்ச்சியை கேட்ட அறிவுள்ள காகமோ, வடையை தனது வாயிலிருந்து காலுக்கு இடம்மாற்றி, “கா,கா,கா,கா,” என்று பாடியதாம். இதை பார்த்த நரி தனது திட்டம் நிறைவேறாது போகவே வெட்கத்தில் காட்டுக்குள் ஓடி விட்டதாம். அது முதல் காகத்தை எங்காவது நரி பார்த்தால் காண்டாகிவிடுமாம்.
கதையின் நீதி –
இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது. சும்மா இருந்த ஜ்ந்தறிவு காகத்துக்கும் சரி, நரிக்கும் சரி ஆறறிவு இருக்கிற மனுஷ பயலுவ நாம கண்டு பிடிச்ச வடையாலதான் பிரச்சனையே!! இங்க மட்டுமில்ல எங்கயுமே எங்களால்தான், எங்களால கண்டுபிடிக்க பட்டவற்றால்தான் எல்லோருக்கும் பிரச்னை. இதை உணர்ந்து சிந்தித்து வாழுவோம்!!!
நன்றி:ஆடுகளம்
கிளைமாக்ஸ் 03: அந்தக் காகம் வாயில வடைய வச்சுகிட்டே ஹம்மிங்க்தான் பாடிச்சாம் !
பதிலளிநீக்குசமூக நீதி : வாயில கொளக்கட்டையா வச்சிருக்கேன்னு மூணாவது நீதிபதி கேட்டாராம், வடையக் கூட கொளக் கட்டையா பார்க்கிறவர் என்பதனாலே.
காக்கா நல்ல தீர்ப்பு;
பதிலளிநீக்குஉங்கள் சங்கடம் முந்தைய கதை நீக்கம்!
கவனத்தில் எட்டியது !
பதிலளிநீக்குநன்மையை நாடியே !
உங்களின் கதையில் இலங்கை தமிழ் வாடை வருகின்றதே ஏன்
பதிலளிநீக்கு"வடை சுட்டு" "பாட்டி சுடுற வடையை சுடணும்" "வடை சுட்டுட்டு இருந்த பாட்டி" "எப்படியாவது வடையை சுடனும் எண்டு"
பலசுடணும் வந்ததால் இலங்கை தமிழை சேர்த்து விடீர்களா!
இப்போது அங்கு சுடல் இல்லை
ரஜினி ஒருதடவ சொன்ன 100 தடவ சொன்னமாதிரி
பதிலளிநீக்குநீங்க ஒரே விஷயத்தை 200 தடவக்கு மேலே செல்லி அசத்திடீங்க
உங்களுக்கு ப்பு மாலைதான் போடணும்