Breaking News
recent

அதிரையில் கல்வி விழிப்புணர்ச்சி மாநாடு!

கல்வி விழிப்புணர்ச்சி  மாநாடு
அதிராம்பட்டினம்
அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்.  இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் அரையாண்டுத் தேர்வு விடுமுறையின்போது, டிசம்பர் இறுதியில், நமதூரில் கல்வி விழிப்புணர்ச்சி மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறோம்.  அதுபோது, கல்வியாளர்கள், இஸ்லாமியச் சிந்தனையாளர்கள், மார்க்க அறிஞர்கள் ஆகியவர்களை வரவழைத்து, கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த நாடியுள்ளோம்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட 'இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை' என்ற அமைப்பொன்று முழுமையாகச் செயல்படாமல் இருக்கின்றது.  எனவே, அதற்கு மீண்டும் உயிர் கொடுத்து, அவ்வமைப்பின் கீழ் இம்மாநாட்டை நடத்தத் தீர்மானித்துள்ளோம். 

இதுவரை, மூன்று அமர்வுகளில் கருத்துப்  பரிமாற்றம் செய்துள்ளோம்.  அவற்றில்,
  • General Lectures
  • Career Guidance
  • Educational Workshop
  • Exam Tips
  • Educational Exhibition

போன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.  இது பற்றிய உங்கள் அனைவரின் ஆலோசனைகளை எமக்குத் தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இம்மாநாட்டை உங்களைப் போன்ற NRI களின் முழுமையான பொருளுதவியால் நடத்தத் தீர்மானித்துள்ளோம்.  உங்கள் மேலான கருத்துகளையும் பரிந்துரைகளையும் ஒத்துழைப்பையும் தருமாறு அன்புடன் கோருகின்றோம்.

அதிரை அஹ்மது (convener )
adiraiahmad@gmail.com
0091 98 94 98 92 30
Unknown

Unknown

2 கருத்துகள்:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.