Breaking News
recent

அதிரையில் நாளை சுகாதார திருவிழா-இலவச மருத்துவ முகாம்

                                         இம்முகாமில்
  • நாளை காலை 08-00 மணி முதல் மாலை 04-00 மணி வரை நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற உள்ளது.
  • இதில் இ.சி.ஜி,எக்ஸ்ரே,எக்கோ,இரதம் மற்றும் சிறுநீர் ஆய்வக பரிசோதனைகள் கர்ப்பபை, புற்று நோய் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் BMI பரிசோதனைகள்.
  • இதயம்,நுரையிரல்,சிறுநீரகம்,நரம்பியல்,குடல்,எலும்பு,மருத்துவம்,கண்,பல்,காது,மூக்கு, தொண்டை மகளிர் நலம்,குழந்தைகள் நலம்,மனநலம்,முதியோர் நலம் புற்றுநோய் மற்றும் தோல்நோய் ஆகியவற்றுக்கான சிறப்பு மருத்துவர்கள் மூலம் மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக அளிக்கபடுகிறது.
  • மேலும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பிட்டு திட்ட பயனாளிகளை  தேர்வு செய்து குளோபல் மருத்துவமனை சென்னை,விநாயகா மிசன்  மருத்துவமனை சேலம்,மகாத்மா காந்தி கண் மருத்துவமனை திருச்சி. மேலும், தஞ்சாவூரை சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
  • மருத்துவ கண்காட்சி,இரத்ததான முகாம் மற்றும் கண்கவர் காலை நிகழ்சிகளும் நடைபெற உள்ளன. தகுதியுடைய மாற்று திறனாளிகளுக்கும் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் மூலம் இலவச உபகரணங்கள் வழங்க பதிவு செய்யப்படும்.
  • பொது மக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி உயர் ரக மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை இலவசமாக பெற்று நலமுடன் வாழ கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்கும் தலை முதல் பாதம் வரை இலவசம்.



   
 
நிகழ்ச்சி நிரல்:
தலைமை : உயர் திரு. ம.சு.சண்முகம்.அவர்கள் 
                       (மாவட்ட ஆட்சி தலைவர்,தஞ்சாவூர்)
                      உயர்  திரு. N.R.ரெங்கராஜன்,M.L.A
                      உயர் திரு. ப.பாலசுப்ரமணியன்,EX. M.L.A
                      ஹாஜி. M.M.S.அப்துல் வாஹாப்.அவர்கள்(பெருந்தலைவர் அதிரை பேரூராட்சி மன்றம்)
 இராம. குணசேகரன். (து.தலைவர் அதிரை பேரூராட்சி) 
                                   
                               இவர்களின் முன்னிலையில்
                    மத்திய நிதித்துறை இணை அமைச்சர்
                 மாண்புமிகு.சு.சு.பழநிமாணிக்கம். அவர்கள்
துவக்கி வைத்து விழா பேருரையாற்ற உள்ளார்கள். 
அதிரை மக்கள் அனைவரும் பங்கு பெற்று பயனடைய வேண்டுகிறோம்.               
muslimmalar

muslimmalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.