Breaking News
recent

பிறைக் கொடித் தோழர்களுக்கு...

 அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹம...
அல்லாஹ்வின் பேரருள் பொழிய வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு பிறைக் கொடித்தோழர்களுக்கு...
முஸ்லிம் லீக் பேரியக்கத்திற்க்கு ஒவ்வொரு தேர்தல் சமயமும் மிகப்பெரும் சவாலான போர்க்களம் எனபதை நாம் பல்லாண்டு காலமாக கண்டு வருகிறோம்.
முதன் முதலில் முஸ்லிம் லீகிற்கு இரண்டு தொகுதிகள் என்கிற அதிர்ச்சியான அத்தியாயத்தை மறைந்த நம் சந்தனத் தமிழறிஞர் சிராஜுல் மில்லத் அவர்களின் காலத்திலேயே ஜெயலலிதா துவக்கி வைத்து விட்டார்.அந்த முஸீபத் இப்பவும் நம்மை ஆட்டிப்படைக்கிறது. இது அல்லாஹ்வின் சோதனையோ என்கிற சிந்தனையை அனைவரின் உள்ளத்திலும் உண்டாக்கி விட்டிருக்கிறது.
முஸ்லிம் லீகின் வளர்ச்சி அபாரமாக இருக்கும் இவ்வேளையில் இடியாய் இரண்டு செய்தி்கள்:
1, தொகுதி பங்கீட்டில் மூன்று தான் என்றும் அதுவும் உதய சூரியன் சின்னம் தான் என்பதும் உள்ளங்களை கிழித்தெடுத்தது
2,கொடுக்கப்பட்டிருந்த மூன்றில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது.( நம்மிடமிருந்து ஒரு தொகுதி திமுகவால் பறிக்கப்படது என்பது உண்மையில்லை, நமது அகில இந்திய தலைவர் தலையீட்டில் நாமாகவே விட்டுக்கொடுத்தது என்பது தான் சரி)
இந்த இரண்டும் ஒவ்வொரு தாய்ச்சபையின் அடிமட்டத் தொண்டனுக்கும் இடியாய் வந்தது என்றால் அது மிகையில்லை.”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பதை போலவே நமது தலைமையும் அதிக தொகுதிகளுக்காகவும்,தனி சின்னத்திற்க்காவும் எவ்வளவு போராடியது என்பது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 நமக்கு இருக்கும் அக்கறையை விட பன்மடங்கு ஆர்வமும்,அக்கறையும் நமது தலைவர்களுக்கு இருக்கிறது என்பது மறுக்க முடியாத ஒன்று!
கால சூழலில் அதற்க்கேற்ற வகையில் முடிவுகளை அறிவிக்கும் அதைகாரத்தையும் நம் தலைமைக்கு நாம் அளித்துள்ளதால் அவ்வாறாகவே நடந்திருக்கிறது.
 நடந்தது நன்மையா தீமையா என்பதை ஆராய வேண்டிய தருணத்தில் நாம் இல்லை இப்பொழுது.!
இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி சிலர் முஸ்லிம் லீகை துண்டாட துடிக்கின்றனர்,இதற்க்கு நாம் எப்பொழுதும் இடமளித்து விடக்கூடாது.
கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களால் இனம் காட்டப்பட்ட தலைவர் சிராஜுல்மில்லத். அவர்களால் வழி நடத்தப்பட்ட, நம் தலைவர் முனீருல்மில்லத் பேராசிரியர். அவர்களின் முடிவு நம்மை நன்மையின் பக்கம் அழைத்துச் செல்லும் என்பதை திடமாக நம்புவோம்.இதற்க்கு முன் நடந்த சம்பவங்களையும் நெஞ்சிலேந்தி, அல்லாஹ்வின்  சோதனையை வெல்லும் அழகிய பொறுமையையும் நாம் கையாள வேண்டிய தருணத்தில்   இருக்கின்றோம் என்பதை மாநில மாவட்ட நிர்வாகிகள் முதல். நகர பிறைமரி நிர்வாகிகள் உறுப்பினர்கள் வரை உணர்ந்து அமைதி காப்போம். தாய்ச்சபையின் கண்ணியம் காப்போம்!
நம்மை நோக்கி வரும் விமர்சனங்கள் எல்லாம் நெஞ்சை கத்தியால் கீறு்வதைப்போல் இருக்கின்றது;எல்லாவற்றிர்க்கும் இறுதித் தீர்வு கண்டிப்பாக ஒன்று இருக்கின்றது.அந்தத் தீர்வை தேர்தல் முடிந்தபின் நமது பொதுக்குழுவிலே தீர்ப்பாக பெறுவோம் இன்ஷா அல்லாஹ்!
கடல் கடந்து வாழும் தாய்ச் சபையின் சேவகர்களுக்கும் அவர்களின் தூய தொண்டுகளுக்கும் அல்லாஹ்வின் நற்கூலி கிட்டட்டும்! வெற்றி நிச்சயம்! இன்ஷா அல்லாஹ்....  
அன்புடன்- இப்னு ஷஃபீக்-

BISMILLAH IR RAHMAN IR RAHEEM.
 
ASSALAMU ALAIKUM DEAR IUML PARTY MEMBERS.
 
I PRAY THIS MAIL FINDS YOU ALL IN THE BEST OF HEALTH,
HAPPINESS,PROSPERITY AND HIGH ISLAMIC SPIRITS,INSHALLAH,
AAMEEN.
 
IT IS WITH UTMOST PAIN,ANGER AND AGITATION I WRITE THIS MAIL
 
YOU ALL ARE AWARE ABOUT THE RECENT POLITICAL
DEVELOPMENTS IN TAMILNADU.
 
AS PER THE DECISION MADE DURING THE GENERAL COUNCIL OF
IUML TAMILNADU HELD ON 24 / 02/ 2011 AT NAGORE THE PARTY
DECIDED TO ACCEPT NOT LESS THAN 3 SEATS FROM ALLAINCE
DMK PARTY AND TO CONTEST IN OUR INDEPENDANT SYMBOL.
 
AFTER THIS DURING THE TALKS WITH DMK LEADERS IUML
PARTY PRESIDENT PROF K.M.K AND GEN SEC MR.ABUBACKER
ACCEPTED 3 SEATS FROM DMK BUT AGRRED TO CONTEST IN THE
DMK SYMBOL,WHICH WAS AGAINST THE DECISION OF THE PARTY.
 
MOREOVER THE TALKS WITH CONGRESS DMK ALLAINCE AND THE
CONFUSION THEREAFTER,WE FIND TO OUR UTTER DISMAY AND
HUMILIATION THAT OUR LEADERSHIP HAS GIVEN AWAY 1 SEAT
FROM THE 3 SEATS ALLOTTED TO IT.
 
THIS UNILATERAL DECISION HAS COME AS A RUDE SHOCK AND
HAS ANGERED THE RANK AND FILE OF IUML PARTY CADRES OF
TAMILNADU.THE VEHEMENT FEELING AMONGST THE PARTY IS:
 
1.THE IUML LEADERSHIP OF TAMILNADU HAS LOST ALL RESPECT
   AND TRUST OF THE PARTY CADRES.
 
2.THE IUML LEADERSHIP HAS ACTED UNILATERALLY NOT TAKING THE
   COMMUNITY OR PARTY'S WELFARE IN CONCERN.
 
3.THE IUML LEADERSHIP HAS IS NO POLITICAL FORESIGHT OR COURAGE.
 
 
THE PARTY WANTS CHANGE IN LEADERSHIP.
 
THE PARTY WANTS TO CONTEST IN ITS OWN SYMBOL IN NOT LESS
THAN 3 SEATS.
 
INSHALLAH LET US ALL UNITE TO FIGHT FOR JUSTICE.
 
LET US UNITE TO REGAIN THE LOST GRACE AND ESTEEM OF OUR PARTY.
 
LET US RESTORE THE RIGHTS OF OUR UMMAH!
 
LET US STRIVE FOR OUR HONOURABLE EXISTANCE!
 
WILL KEEP YOU POSTED,
 
WASSALAM
 
YOUR SISTER IN ISLAM
 
FATHIMA MUZAFFER
 
STATE ORGANISOR
 
IUML WOMEN'S WING
 
TAMILNADU.
Unknown

Unknown

4 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,

    நல்லாத்தான் இருக்கு வழக்கம்போல் உள்ள அறிக்கை.

    எத்தனை நாளைக்கு இப்படி அவமானப்பட்டுக்கொண்டே இருப்பது. அனைத்து முஸ்லீம்களும் தனித்து நின்று நம் பலத்தை காட்ட தைரியம் என்று வரும் என்பதை பிறைக்கொடி தோழர்களின் தலைமையே சொல்லுங்களேன். அடகு வைத்த சுயமரியாதையை என்று மீட்கப்போகிறோம் எனப்தை சொல்லுங்களேன்.

    கருணாநீதி 2 சீட்டு கொடுத்ததுக்கு ஜெயலலிதா கொடுத்ததுக்காட்டியது என்று சொல்லுவதற்கு வெட்கம் இல்லாமல் போய்விட்டதே பிறைக்கொடி நண்பர்களுக்கு..

    கலிமா சொன்ன முஸ்லீமிடம் கூட்டுவைத்துக்கொள்வதை ஊக்கப்படுத்தமல், இறைமறுப்பாளிடம் மட்டுமே கூட்டுவைத்து திரியும் போக்கு என்றைக்கு மாற்றப்போகிறீர்கள் பிறைக்கொடி நண்பர்களே.... பேராசிரிய பெருமக்களே.....

    பதிலளிநீக்கு
  2. //எல்லாவற்றிர்க்கும் இறுதித் தீர்வு கண்டிப்பாக ஒன்று இருக்கின்றது.அந்தத் தீர்வை தேர்தல் முடிந்தபின் நமது பொதுக்குழுவிலே தீர்ப்பாக பெறுவோம் //

    தேர்தல் முடிந்த பிறகு நீங்கள் பொதுக்குழு கூட்டினால் என்ன கூட்டாவிட்டால் யாருக்கு என்ன பலன். தீர்வு இப்போதே உள்ளது, திமுக கூட்டனியிலிருந்து வெளிவருவதே உங்களின் மக்கள் ஆதரவு பெருக ஒரு வாய்ப்பாக அமையும்.

    பதிலளிநீக்கு
  3. நடந்தது சரியா தவறா என்பதை சிந்திக்க வேண்டிய சரியான உடனடி தருணம் தான் இது.தேர்தல் முடிந்து பொதுக்குழுவில் விவாதிக்கலாமென்பது முஸ்லிம் லீக் வளர்ச்சியை,முன்னேற்றத்தை ஐந்தாண்டுக்கு தடுத்து நிறுத்தி வைப்பதற்கு சமம்.

    பதிலளிநீக்கு
  4. ஃபாத்திமா முஸ்ஸப்பர் போன்ற துணிச்சல் மிக்க முடிவை எடுக்க தவறிய காதர் முகைதீனை தலைவர் பதவியிலிரிந்து தூக்கி எறியப்படவேண்டும் என்பது பெரும்பாலான முஸ்லிம் லீக்கர்களே விரும்புகின்றனர். இதன் எதிரொலியாக தமிழக அரசியலில் புதிய விடியலை ஏற்படுத்தும் பொழுது இஸ்லாமியர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் .

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.