திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை சம்மந்தமாக ரயில்வே நிர்வாகத்தி டமிருந்து கிடைக்க பெற்ற ஏமாற்றம் அளிக்கும் பதில் உங்கள் கவனத்திற்கு !
கடந்த பல வருடங்களாக முயற்சித்து வந்த திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை சம்பந்தமாக பல முயற்சிகளை மேற்கொண்டோம். அப்போதைய ரயில்வே அமைச்சர் திரு வேலு அதன் பின் வந்த E அஹமது மற்றும் ரயில்வே Genarail Managaer போன்றவர்களை சந்தித்து நமது கோரிக்கையை சமர்பித்தோம். ஏன் முத்துபேட்டை சேர்த்த அப்துல் ரஹ்மான் M.P அவர்களிடமும் பல முறை M.S. தாஜுதீன் அவர்கள் பேசி வந்தார்கள். என்ன பயன் ? ஏமாற்றமே !
நாம் ஓன்றுபட்டு தீவிரமாக முற்சி செய்தால் மட்டுமே அகல ரயில் பாதை திட்டம் நம் வட்டார மக்களுக்கு கிடைக்கும். புதிதாக அமைந்து இருக்கும் மாநில அரசின் ஒத்துழைப்போடு முயற்சிகள் மேற்கொண்டால் வரும் ஆண்டின் ரயில்வே RAILWAY BUDGET சேர்க்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே கேட்டுக்கொண்டபடி வெளி நாடு அதிரை வாசிகள் INDIAN EMBASSY மூலமாக தொடர்ந்து PRIME MINISTER OF INDIA மற்றும் RAILWAY MINISTER & CHEIF MINISTER OF TAMILNADU இவர்களுக்கு கோரிக்கை அனுப்பிவைக்க கேட்டுகொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் நிச்சயம் அகல ரயில் பாதை திட்டம் செயல் வடிவம் பெரும் , ஒன்றுபட்டு முயற்சிப்போமாக !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்