Breaking News
recent

அமெரிக்காவில் அத்வானி கைது

நியூயார்க்: உயரே பறந்து கொண்டிருந்த விமானத்தில் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக அமெரிக்கவாழ் இந்தியர் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு ஒரு ஆண்டு சிறையும், 10 ஆயிரம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் அத்வானி (65) .ஹாங்காங் நகரிலிருந்து, அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நியூவார்க் நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தனது பக்கவாட்டு இருக்கையில் ஒரு பெண் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ரமேஷ் அத்வானி முறை தவறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அப்பெண்ணிடம் சிலுமிஷ வேலைகளிலும் இறங்கினார். ஒரு கட்டத்தில் வரம்பு மீறி போகவே, பெண் சக பயணிகளிடம் புகார் கூறினார்.இதைத்தொடர்ந்து அத்வானி மீது சக பயணிகள் தர்ம அடி கொடுத்தனர். இது தொடர்பாக அமெரிக்காவின் நியூவார்க் மாவட்டகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த நீதிபதி ரமேஷ் அத்வானிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் டாலர் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இவர் கடந்த மே மாதம் இதே போன்று ஹாங்காங்க் நகரிலிருந்து நியூவார்க் நகரில் லிபர்டி விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த கான்டினட்டல் விமானத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறப்பட்டது. அப்போது இவர் கோர்டால் எச்சரித்துவிடப்பட்டார்.
Unknown

Unknown

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைகும்,
    அத்வானி கைது என்றதும் நம்ம அத்வானி என்ரு நினைத்தென்
    ஆனால் (ரமேஷ் அத்வானி) என்ரு ஏமற்றீ விட்டீர்ஹல் இன்ஷாஅல்லாஹ்
    ஒரு நாள் நம்ம அத்வனியும் கைது செய்யப்படுவான்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.