Breaking News
recent

அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பதற்கான 13 ஆவணங்கள்

உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பதற்கான 13 ஆவணங்கள் எவை என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


ஆவணங்கள் அனைத்தும் 31.12. 2009க்கு முன்னர் பெறப்பட்டவையாக இருக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.



 உள்ளாட்சித் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



 இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பதற்காக மாநிலத் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள 13 ஆவணங்கள் விவரம்:



 1. பாஸ்போர்ட்



 2. ஓட்டுநர் உரிமம்.



 3. வருமான வரி அடையாள அட்டை.



 4. மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பொதுத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட 
நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள்.


5. பொது நிறுவன வங்கிகள் மற்றும் தபால் அலுவலக பாஸ் புத்தகங்கள். விவசாயிகளுக்கான கிஸôன் பாஸ் புத்தகங்கள்.



 6. ஓய்வூதிய ஆவணங்கள் (ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், முன்னாள் ராணுவ வீரர்

 ஓய்வூதிய ஆவணங்கள், விதவை ஓய்வூதியம் பெறுவதற்காக வழங்கப்பட்ட ஆணைகள் இதற்குள் வரும்.)


 7. புகைப்படத்துடன் கூடிய சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான அடையாள அட்டைகள்.



 8. வீட்டு மனை பட்டா மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள்.



 9. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தோர் என்பதற்கான சான்றிதழ்கள்.



 10. மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்கள்.



 11. ஆயுதம் வைத்திருப்பதற்கான உரிமங்கள்.



 12. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் வழங்கப்பட்ட பணியாளர் அடையாள அட்டைகள்.



 13. மத்திய தொழிலாளர் நலத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள்.



 இந்த ஆவணங்கள் அனைத்தும் புகைப்படத்துடன் கூடியதாகவும், 31.12.2009-க்கு முன்னர் பெறப்பட்டதாகவும் இருக்க வேண்டும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


குடும்பத் தலைவரின் ஆவணம்: இந்த ஆவணங்களில் ஏதாவது ஒன்றை குடும்பத் தலைவர் காட்டினால், அவரின் மொத்த குடும்பத்தாரும் தனித்தனியாக அடையாள அட்டைகள் காட்டாமல் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.