Breaking News
recent

சகோ . அஸ்லம் அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு!


நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றதேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சகோதரர் அஸ்லம் அவர்கள் மற்றும் 21 வார்டு உறுப்பினர்களும் இன்று  (25-10-2011) காலை பதவிப் பிரமாணம் ஏற்க உள்ளனர் .

நமதூர் சகோதரர்கள் அனைவரும் பணிநிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ளனர். இன்னும் தேர்தல் நேரத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய சகோதர்கள் எனக்காக துஆ செய்த நல் உள்ளங்கள் என எனது வெற்றிக்காக அல்லும் பகலும் அயாரது உழைத்த அன்பர்கள் அனைவரையும் நேரில் அழைப்பு கொடுக்க எண்ணினாலும் போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் நமதூர் இணையதளங்களில் வாயிலாக அழைப்பு கொடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளேன்.

எனவே அன்புள்ளம் கொண்ட அதிரை நகர பொதுமக்கள், வாக்காளர்கள், கழகத் தோழர்கள், நண்பர்கள் அனைவரும் இதனையே எனது நேரடி அழைப்பாக ஏற்று நாளை காலை நடைபெற இருக்கும் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சிக்கு தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். 

வஸ்ஸலாம்.
என்றும் மக்கள் நலப்பணியில் . 
SH.அஸ்லம்

நன்றி : K.Shafeeq Ahamed
Unknown

Unknown

1 கருத்து:

  1. அன்பார்ந்த அதிரை எக்ஸ்பிரஸ் இனையதளத்திற்க்கு அஸ்ஸலாமு அலைக்கும் தேர்தலுக்கு முன்பு நம் சம்சுல் இஸ்லாம் சங்கம் துனைசேர்மனும் நாமே என்று எடுத்த நிலைப்பாடு அதற்க்கு பிறகு அதிரை எக்ஸ்பிரஸின் கட்டுரை அதற்க்கு மேலும் உரமூட்டியது இது என்னை மிஹவும் கவர்ந்தது மரைக்காபள்ளியில் சம்சுல் இஸ்லாம் சங்க துனைதலைவர் சகபுதீன்காக்காவும் கண்ணியத்த்ற்க்குரிய ஆலீம் ஜனாப் லத்தீப் ஆலீம்சா அவர்களும் அனைத்து முஹல்லாவையும் கூட்டி சம்சுல் இஸ்லாம் சங்கம் இரண்டு,தாஜுல் இஸ்லாம் சங்கம் இரண்டு, கடல்கரைதெரு சுயேட்சை ஒன்று, நெசவுதெரு சுயேட்சை ஒன்று ஆக ந்ம் அனைத்து முஹல்லா கையில் ஆறு வார்டு உறுப்பினர்கள்.தி மு க வார்டு உறுப்பினர்கள் 5, அ தி மு க ஒன்று. காங்கிரஸ் ஒன்று ஆக மொத்தம் 13 உறுப்பினர்கள் இன்னும் நான்கு தினங்கள் உள்ளன கூடி ஒரு முடிவு எடுத்தால் துனைசேர்மனும் நாமே தாஜுல் இஸ்லாம் சங்க உறுப்பினர்கள் இருவரும் பெண்களாக இருப்பதால் சம்சுல் இஸ்லாம் சங்க உறுப்பினர் இப்ராஹீம் அனைவருக்கும் பொதுவானவர் அனுபவசாலி என்பது என் தாழ்மையான வேண்டுகோள்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.