Breaking News
recent

www.tnstc.in இணையதளம்- செல்போன் மூலம் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு!


தமிழ்நாடு அரசு விரைவு பஸ்களில் இணையதளம் மற்றும் செல்போன் மூலம் முன்பதிவு செய்வதற்கான வசதியை, தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே விடியோ கான்பரன்சிங் முறை
இணையதளம் மற்றும் செல்போன் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
 ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து துறைகளில் இணையதளம் மூலம் பயணிகள் முன்பதிவு செய்வது போன்றே முதல் முறையாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் இணையதளம் மற்றும் செல்போன் வழியாக பயணச்சீட்டு முன்பதிவு செய்ய (www.tnstc.inஎன்ற இணையதள முகவரி மூலம் இ-டிக்கெட் முன்பதிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 அரசு பஸ்களில் பயணிகள் முன்பதிவு செய்யும் வசதியினை எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் இணையதளம் மூலமாகவும், செல்போன் வழியாகவும் 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
 பயணிகள் எவ்வித சிரமும் இன்றி தங்களது பயணச்சீட்டினை இணையதளம் வழியாக
 கிரெட் கார்டு, டெபிட் கார்டு மூலம் முன்பதிவு செய்து கொள்ளவும் தாங்கள் விருப்பப்பட்ட பஸ்களையும், இருக்கைகளையும் தேர்வு செய்து கொள்வதுடன் பஸ் கட்டணம், புறப்படும் நேரம் மற்றும் இதர விவரங்களையும் அறிந்து கொள்ள இயலும்.
 இணையதளத்திலேயே தகவல்: அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இப்போது செயல்பட்டு வரும் 50 முன்பதிவு மையங்களுடன் கூடுதலாக புதிய முகவர்களை நியமித்து 300 முன்பதிவு மையங்களாக அதிகரிக்கப்படும். இந்த அதிகரிக்கப்பட உள்ள முன்பதிவு மையங்களுக்கு பயணிகள் நேரடியாக சென்று இணையதள வசதியுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
 பயணிகள் இ-டிக்கெட் மூலம் பயணச்சீட்டினை முன்பதிவு செய்தவுடன் அவர்களது செல்போனுக்கு பணப் பரிவர்த்தனை குறித்த எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
 தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பயணம் செய்வதற்கு இணையதளம் மற்றும் செல்போன் மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் வசதியை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.