சென்னை ராஜா அண்ணாமலைபுரம் குட்டி கிராமணி தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது தாயார் கமலா (வயது 77). சம்பவத்தன்று கமலா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கறுப்பு நிற பர்தா அணிந்து வந்த பெண் வீட்டிற்குள் நுழைந்தார். மூதாட்டி கமலாவை தாக்கி அவர் காதில் அணிந்திருந்த கம்மலை பறிக்க முயன்றார்.
முடியாமல் போகவே கழுத்தில் அணிந்து இருந்த 2 தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பி விட்டார். இதுகுறித்து மயிலாப்பூர் துணை கமிஷனர் புகழேந்தி கோட்டூர்புரம் அரசு உதவி ஆணையாளர் சிவசங்கரன் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். கமலா குடும்பத்தினருக்கு நன்கு தெரிந்த பெண்ணே இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தீவிர விசாரணையில் அந்த பெண் பெரம்பூர் ரெயில் நிலையம் அருகில் சிக்கினாள். அவளது பெயர் நந்தகுமாரி கணவர் முத்துவேல் மூலம் கமலா குடும்பத்துக்கு நெருக்கமானவர். பெரம் பூரைச் சேர்ந்த அவளிடம் இருந்து திருட்டு போன நகைகள் மீட்கப்பட்டது. கைதான நந்தகுமாரி 23-வது பெருநகர குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்