Breaking News
recent

டெங்கு காய்ச்சல்: தகவலும் எச்சரிக்கையும்!

டெங்கு காய்ச்சல் (Dengue fever) அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால்ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலிதலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள்ஏற்படும். 


தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்குகுருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இந்நோய் 200 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டுள்ளது.
Aedes எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த பல இனங்கள் இந்த நோயின் நோய்க்காவியாகும். தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிசு (Aedes) வகைக் கொசுக்களால் குறிப்பாக ஏடிசு எகிப்தியால், இந்நோய் பரவுகிறது, ஆனால் இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம் பரவுவதில்லை. 

நோய் பாதித்தவரைக் கடித்த (குத்திய) கொசு மற்றொருவரை கடிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது, சில சந்தர்ப்பங்களில் குருதி மாற்றீடு மூலமும் பரவலாம். இக்கொசுக்கள் பொதுவாக பகலிலேயே மனிதர்களைக் கடிக்கின்றன. பொதுவாக விடியற்காலையிலும் பிற்பகலிலும் இக்கொசு கடிக்கின்றது. 

இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோயாகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும். இந்த நோய் பெரும்பாலும் வறண்ட, உலர் வெப்ப வலயங்களில் பெருகும்.
நோயின் அறிகுறிகள்

தீவிர கண்வலி (கண்ணிற்குப் பின்)
கடும் தலைவலிகடுமையான மூட்டு மற்றும் தசை வலிவாந்திதோல் சிவத்தல் (rash)வெள்ளை அணுக்கள், இரத்தவட்டுகள் குறைதல்மிதமான இரத்தப்போக்கு வெளிப்பாடு (மூக்கில் இரத்தப்போக்கு, இரத்தப்புள்ளிகள்அடி முட்டிகளில் பொதுவாகவும், சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்அறிகுறிகள் இல்லாத காய்ச்சல் நிலைஆரம்ப நிலை டெங்கிக் காய்ச்சல் நிலைஇரத்தப் பெருக்குடன் கூடிய டெங்கிக் காய்ச்சல் நிலை

வீட்டு மருத்துவம் கை கொடுக்கும்!


டெங்கு காய்ச்சல் எம்மாத்திரம் என்று எகத்தாளமாய் நினைப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி இந்த காய்ச்சலுக்கு தடுப்பு ஊசியோ தடுப்பு மருந்தோ கிடையாது என்பதுதான். அதிர்ச்சியாகிவிட்டீர்களா? வந்த பின் தவிப்பதை விட டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம் என்கின்றனர் மருத்துவர்கள்.

தண்ணீர் தேங்க விடாதீங்க

மழைக்காலங்களில்தான் டெங்கு காய்ச்சல் வரும் என்ற நிலை மாறி கோடையிலும் வந்து மக்களை வாட்டி வதைக்கிறது டெங்கு காய்ச்சல். இதற்கு காரணம் கோடையிலும் நல்ல மழை பெய்து ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதுதான். வீட்டை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இந்த கொசு பகல்நேரத்தில்தான் கடிக்கும். உடல்வலி, முதுகுவலி, காய்ச்சல், திடீர் குளிருடன் காய்ச்சல், உடலில் சிவப்பு புள்ளிகள் போன்றவை இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும்.

கொசு உற்பத்தியாவதை தடுக்க வீட்டைச்சுற்றி தண்ணீர் தேங்காமல் தடுக்க வேண்டும் என்கின்றனர் சுகாதாரத்துறையினர். கொசு கடிக்காதவகையில் நன்கு மூடப்பட்ட பருத்தி ஆடைகளை அணியுங்கள். குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.

நீர்ச்சத்து தேவை

டெங்கு காய்ச்சல் தாக்கியதற்கான அறிகுறி தென்பட்டால் தாமதமின்றி மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளவும். டெங்கு தாக்கினால் உடலின் நீர்ச்சத்தை குறைத்து விடும். ரத்தத்தட்டுகளில் (பிளேட்லெட்ஸ்) எண்ணிக்கை குறையும். தொடக்கத்திலேயே காய்ச்சலை கவனிக்காமல் விட்டால் நுரையீரல், வயிறு, சிறுநீர்ப்பாதை என பல இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த நோய்க்கும் குட் பை சொல்லி விடலாம். டெங்கு தாக்கியதனால் உடலில் நீர் இழப்பு குறையாமல் இருக்க இளநீர், கஞ்சி, உப்பு கரைசல் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும். காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடன் சுயமாக மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆரஞ்சு ஜூஸ்

பன்றிக்காய்ச்சலைப் போல இருமல், தும்மல் மூலம் பரவாது என்பதுதான் ஒரே ஆறுதலான விசயம். டெங்கு காய்ச்சல் தாக்கியவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சோர்வடையாமல் தடுக்கும்.

பப்பாளி இலையை அரைத்து நன்கு சாறு எடுத்து தினசரி இரண்டு டீ ஸ்பூன் வீதம் பருகலாம். அதேபோல் மூலிகை டீ சாப்பிடலாம். பசிக்கும் போது துளசி, இஞ்சி, கொத்தமல்லி, கருப்பட்டி கலந்த மூலிகை டீ தயாரித்து அதில் ப்ரெட், அல்லது பிஸ்கட் தொட்டு சாப்பிடலாம். பசி அடங்கும் டெங்கு காய்ச்சலும் கட்டுப்படும்.

Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.