Breaking News
recent

தமுமுக தொண்டர் மீது கொலைவெறித்தாக்குதல்;பள்ளிவாசலை உடைக்க சதி; அச்சத்தில் அதிரை மக்கள்


இன்று (22-05-2012) மாலை காட்டுப்பள்ளி கந்தூரியின்போது மேலத்தெருவைச் சேர்ந்த நால்வரால், நடுத்தெருவை சேர்ந்த,19 ஆவது வார்டு உறுப்பினர் சகோதரி சவ்தாவின் கணவரும் த.மு.மு.க. தொண்டருமான சகோதரர் அஹ்மது ஹாஜா தாக்கப்பட்டார்.

நமதூரில் கந்தூரிகள் களையிழக்கத் தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில், அல்லாஹ்வின் இல்லமான பள்ளிவாயில்களைக் கடக்கும்போது, தாரை தப்பட்டை டான்ஸு போன்றவை இருக்கக்கூடாது என்று மேலத்தெரு தவ்ஹீதுச் சகோதரர்களால் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு, ஆர்.டி.ஓ. முன்னிலையில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி, அதிரையில் உள்ள பள்ளிகளுக்கு முன்னும் பின்னும் நூறு நூறு மீட்டர்களுக்குள் எவ்விதை ஓசையும் இருக்கக்கூடாது என்று ஆர்.டி.ஓ. உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவு மேலத்தெரு பாக்கியாத் ஸாலிஹாத் பள்ளியில் கடைபிடிக்கப்பட்டு, கந்தூரி ஊர்வலம் மௌன ஊர்வலமாகச் சென்றது. தக்வாப் பள்ளிக்கு ஊர்வலம் வரும்போது மக்ரிபுத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாயிலில் கடைபிடிக்கப்பட்ட அமைதியை கந்தூரி ஊர்வலத்தினர் தக்வாப் பள்ளி அருகில் கைவிட்டனர்.

மக்ரிபுத் தொழுகை முடிந்து ஸலாம் கொடுக்கும்போது வழக்கமான முழக்கங்களுடன் கந்தூரி ஊர்வலம் கடப்பதைக் கண்ட சகோதரர் அஹ்மது ஹாஜா, ஊர்வலத்தை மேற்பார்வையிட வந்து, தக்வாப்பள்ளிக்குப் பின்புறம் நின்றிருந்த நமதூர் இன்ஸ்பெக்டர் செங்கமலக் கண்ணனிடம் சென்று புகார் செய்தார். 

இன்ஸ்பெக்டர் அங்கிருந்து அகன்று மேள-தாளக்காரர்களிடம் சென்று பாட்டு-தாளங்களை நிறுத்துமாறு சொல்வதற்காகச் சென்றுவிட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட கந்தூரி போதையினர், சகோதரர் அஹ்மது ஹாஜாவைத் தக்வாப் பள்ளிக்குப் பின்புறமுள்ளஅவரது வீட்டுச் சந்தை அடுத்த சந்துக்குள் தள்ளிச் சென்று கீழே தள்ளி, அவரது நெஞ்சிலும் இடுப்பிலும் மாறி, மாறி கால்களால் உதைத்தும் கைகளால் தாக்கியும் நையப் புடைத்துள்ளனர். 

அத்துடன் சிலர் தக்வா பள்ளிவாசலை சூரையாடும் நோக்கத்தோடு உள்ளே செல்ல முயன்றதாகவும் சிலர் தடுத்ததின் பேரில் பின் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. ”இவர்களுக்கு எந்த அளவு வெறி இருக்குமானால், அல்லாஹ்வின் இல்லத்தையே சூரையாட முனைந்திருப்பார்கள்? இவர்களுக்கு அந்தளவு வெறியூட்டியது எது? இறையில்லத்தை தகர்த்துவிட்டு,முஸ்லிம்களை கொலை செய்துவிட்டு இவர்கள் எதைதான் சாதிக்க போகிறார்கள்..? ” என்ற கேள்விதான் பலர் கேட்கிறார்கள்.


சகோதரர் அஹ்மது ஹாஜாவைத் தாக்கிய கயவர்கள் நான்கு பேர் என்பதால் நிலைகுலைந்து பலத்த காயமடைந்த அவர், தற்போது பட்டுக்கோட்டை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனிப்பட்ட முன்விரோதம் ஏதுமில்லாத இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதல், சிலரின் தூண்டுதலால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் என்பதே நடுநிலையாளர்களின் ஐயமாகும்.

சகோதரர் அஹ்மது ஹாஜாவைத் தாக்கிய நால்வரின் பெயர்களைக் குறிப்பிட்டு, நகர த.மு.மு.கவினர் திரளாகச் சென்று, அதிரை நகரக் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அதற்கான சான்றிதழைத் த.மு.மு.கவினருக்கு வழங்கியுள்ளனர். அத்துடன், எஃப் ஐ ஆர் பதிவு செய்து, குற்றவாளிகளை நாளைக்குள் கைது செய்து விசாரிக்கப் போவதாக உறுதியளித்துள்ளனர். 

த.மு.மு.கவின் மாநிலச் செயலாளர் தமீமுன் அன்ஸாரி, டி எஸ் பியிடம் தொலைபேசி வாயிலாக புகார் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக நகர த.மு.மு.கவினர் நாளைக் காலை பத்து மணிக்கு அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளனர்.

குற்ற நிகழ்வு, நகர காவல்துறைக் கண்காணிப்பாளர் செங்கமலக் கண்ணன் ஸ்பாட்டில் இருக்கும்போது நடந்தேறியது என்பதால் குற்றவாளிகள் நிச்சயம் தப்பித்துவிட முடியாது.

கந்தூரி எனும் இழிவிலிருந்து நமதூர் என்றைக்கு விடுபடுகிறதோ அன்றைக்குத்தான் அதிரை முஸ்லிம்களின்  மானம் காக்கப்படும்.
நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ் உதவியுடன் அதிரை போஸ்ட்
Unknown

Unknown

9 கருத்துகள்:

 1. இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக மக்கள் ஒன்றாய் இருந்து - ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்,இந்த செயல் தெரு பிரிவினையை ஊட்டாதிருக்க வேண்டும்.முதலில் கந்தூரிகள் தடை செய்தால்தான் நாட்டுக்கு நல்லது.சங் பரிவாரும்,தர்ஹா கோஷ்டியும் ஒண்ணுதான்.

  பதிலளிநீக்கு
 2. அஸ்ஸலாமு அலைக்கும். மச்சான் அஹமது ஹாஜாவை தாக்கியவர்களும் நம் சகோதரர்கள் என்பது நினைத்து மிக வேதனையாக இருக்கிறது. இது காட்டுமிராண்டித்தனம். அல்லாஹ்தான் நம்மவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவானாக. மச்சான் குணம் பெற அல்லாஹ்வை வேண்டுகிறேன். ஆமீன்.
  கிரன்&குடும்பத்தினர்.

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. அஹ்மத் ஹாஜாவை தாக்கியவர்கள் கண்டனதுகுரியவர்கள் ....அனாசாரத்தை
  தடுக்க முயன்ற அஹ்மத் ஹாஜா உண்மையிலே ஒரு வீரமான ஆண்மகன் .அவரை தாக்கியவர்கள் நிச்சயமாக ஆண்களாக இருக்க முடியாது .

  ஓரளவுக்கு மார்க்கம் ,ஷிர்க் பற்றி விரிவாக அறிந்த இந்த காலத்திலும் இந்த மாதிரி மூடர்கள் இன்றும் தெளிவு பெறாமல் இருப்பது வேதனையானது .
  அல்லாஹ் அந்த மூடர்களுக்கு ஹிதாயத்தை அளிப்பானாக ..ஆமீன்

  பதிலளிநீக்கு
 5. இந்த வன்முறைத் தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது. கந்தூரி எனும் நச்சு மரத்தின் வேரைப் பிடுங்காமல் வெறும் இலை-கிளைகளை அகற்ற முயல்வது பயனற்றதாகும்.

  கந்தூரி எனும் புற்றுக்குப் பால் வார்ப்பவர்களாக இருக்கும் தலைமைத்தனம் பெற்று இருப்பவர்களது பதவிகள் பறிக்கப்பட வேண்டும்.

  கந்தூரியில் ஈடுபடுபவர்கள், அதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைத்து முஹல்லாவின் பொறுப்புக்கு வரமுடியாத ஒரு பைலாவை அனைத்து முஹல்லா அமைவதற்கு அரும்பாடுபட்டவர்கள் ஏற்படுத்தவேண்டும்.

  தீமையிலிருந்து நன்மை என்பதற்கேற்ப, இந்த வன்முறை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, பல அமைப்புகளில் பணியாற்றும் கந்தூரி எதிர்ப்பாளர்கள் ஒன்றுசேர வேண்டும்; கந்தூரிக்கு எதிராக உரக்கக் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

  குர்ஆன்-ஹதீஸ் எனச் சொல்ல ஆரம்பித்தாலே சிலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. அதற்காகச் சொல்லாமல் இருக்கமுடியாது:
  "மார்க்கம் அறியாத மடையர்கள் மக்களுக்குத் தலைவர்களாவார்கள். மடையர்களான அவர்கள் தாமும் வழிகெட்டு, மக்களையும் வழிகெடுப்பார்கள். அது, மறுமைநாள் அண்மிவிட்டது என்பதற்கான அடையாளங்களுள் ஒன்றாகும்" - நபிமொழி

  பதிலளிநீக்கு
 6. மதம் மாறியும் மனம் மாறவில்லை ..

  இறந்து போன ஒருவரின் நினைவு

  நாளுக்காக உயிரோடு இருப்பவரை கொள்ள

  நினைக்கும் மூடர்கள் ..என்றோ ஒருவர் மதம் மாறி

  இஸ்லாத்திற்கு வந்தாலும் மனம் மாறாமல் கோவில்

  கலா சாரத்தை அப்படியே தர்கா வலிபாட்டுமூலம்

  தொடர்ந்து செயல் படுத்தி வருவது வன்மையாக

  கண்டிக்க தக்கது ,,இவர்கள் பெயரளவில் முஸ்லீம்கள்

  மதம் மாறினாலும் இவர்கள் மனம் மாறவில்லை

  என்று இவர்கள் செவிக்குஎன்றுதான் எட்ட போகிறதோ தெரியவில்லை

  முஸ்லீம்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதில் புண்ணியம் இல்லை

  இறை மறை குர் ஆண் நபி (ஸல் ) போதனை ..,இவைகளை

  கடை பிடிக்கும் சிறு கூட்டத்தார் இருந்தால் கூட சக்தி படைதவர்களாகவும்

  விண்ணில் மின்னும் நட்சதிரங்கலாகவும் மின்னுவார்கள்

  அஹமது ஹாஜாவை அடித்த கரத்தினை இறைவன் இம்மையிலும்

  மறுமையிலும் அல்லாஹ் தண்டிப்பனாக ஆமீன் ஆமீன் ..,

  பதிலளிநீக்கு
 7. அஸ்ஸலாமு அலைக்கும்.


  'கந்தூரி போதை' எனும் தலைப்பில் அதிரை வலைதளங்களில் வெளியான செய்தியில் கட்டுரையாளரின் கீழ்க்கண்ட பகுதி நீக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. அவை அபேத-வின் நலனில் அக்கறையுடனும், கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகள் தொடரக் கூடாது என்ற நன்நோக்கத்திலும் சேர்க்கப்பட்டது என்பது கவனத்திற்குரியது. தவறுகள் ஏற்படுவது இயல்பு. அதைச் சுட்டிக் காட்டாத சமுதாயமும் திருத்திக் கொள்ளாத தலைவர்களும் உருப்பட்டதாகச் சரித்திரமில்லை. யாரையும் இழிவுபடுத்தாத, கண்ணியமான அந்த நீக்கப்பட்ட பகுதி சேர்க்கப்பட வேண்டும்.


  Quoted

  > இச்சம்பவத்தில் நடுநிலை வகிக்க வேண்டிய அதிரை நகரத் தலைவர் அஸ்லம், கந்தூரிக் கோஷ்டியினருக்கு வெளிப்படையான ஆதரவாளராகத் தன்னை இனங்காட்டிக் கொள்வதும் குற்றவாளிகளுக்குப் பரிந்து பேசுவதற்காகக் காவல்நிலையம்வரை வருவதும் அவரது தூய சேவைகளுக்கு இழுக்கைத் தேடித் தருவனவாகும்.>
  Unquote

  பதிலளிநீக்கு
 8. அஸ்ஸலாமு அலைக்கும். மார்க்கம் தெளிவாக வரையறுக்கப்பட்ட பின்பும். கூட்டுக்கு பின்னால் வரும் கூத்தாடிகளுக்கு ஊட்டச்சத்து கொடுத்து காப்பாற்றி வரும் தெளிவற்ற தலைப்பாகைகளை களைவது துரிதமாக எடுக்க வேண்டிய முடிவு.

  பேரூராட்சித் தலைவர் இந்த கூத்தாடிகளுக்கு வக்காலத்து வாங்கினார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. அரசியலில் பல்வேறு தரப்பினர் பலவேறு கொள்கைகளை கொண்டிருந்தாலும், நீதி, மார்க்கம் என்ற விடயங்களில் நல்லவர்கள் ஒரே கட்சியில்தான் இருக்கவேண்டும். குடும்பமும், தெருவும் அவர்களை பிரிக்கக்கூடாது.

  யாருக்கு யார் சிபாரிசு செய்கிறார்கள் என்பதைக் கொண்டே அவர்கள் எந்த கொள்கையை சார்ந்தவர் என்றும், எப்படிப்பட்ட குணத்திற்குரியவர் என்றும் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஒரு ஊருக்கு தலைவர் என்பவர் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை நியாயம் செலுத்துவதில் திணிக்கக்கூடாது. அநியாயங்களுக்குத் துணை போகக்கூடாது.

  நடந்த நிகழ்வுகளுக்கு அநியாயம் செய்யப்பட்டவரிடம் சுய விளக்கம் அளித்து அல்லது தனது தரப்பில் தவறு நடந்திருந்தால் மன்னிப்புக் கேட்டு நீதியுடன் நடப்பதே சிறந்த செயலாகும்.

  அனைத்து முஹல்லா கூட்டத்தில் கே.கே. ஹாஜா அவர்கள் பேரூராட்சி தலைவரை தாழ்த்தி பேசியதில் ஏற்பட்ட அமளியில் தனக்கு சாதகமாக பேசிய இருவர் சகோ அகமது ஹாஜாவை தாக்கிய பொட்டைக் கும்பலில் இருந்தனர் என்பதற்காக மொத்தக் கும்பலுக்கும் வக்காலத்து வாங்கியும், சகோ. அகமது ஹாஜா அவர்கள் மேல் வலுக்கட்டாயமாக FIR போடவைததும் பேரூராட்சி தலைவர்தான் என்பதையும் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

  அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன எடுக்கப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  முஹம்மத் தமீம்

  பதிலளிநீக்கு
 9. அதிரையில் கந்தூரி ஊர்வலத்தில் வன்முறை
  செய்தியை பார்த்து ஆச்சரியம் பட்டேன். காரணம்
  அதிரை, காயல்பட்டினம் போன்ற ஊர்களில் எஹததுவ பள்ளிவாசல்கள் , சகோதர்கள் இருந்தாலும் தவ்ஹீத் பணிகள் பல காலங்கள் பயங்கர மந்தமாக தான் இருக்கிறது, இந்த ஊர் தலைவர்கள் நாங்கள் ஆரம்ப கால தவ்ஹீத் வாதிகள் என்று பெருமை பேசுவதுண்டு. ஆனால் ஊரில் நடக்கும் அனாசாரம், பித்அத், மற்றும் கைக்கூலி திருமணங்களில் கலந்து கொள்வது உண்டு. கேட்டால் உப்பு சப்பு இல்லாத உலக காரணங்களை முன்வைக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் தர்கா, ஷிர்க் இவைகளுக்கு எதிராக வழக்கு, சிறைகளை சந்தித்தவர்கள்,ஆனால் இப்போது மிக தெளிவாக நகன்று விட்டார்கள். தங்களுக்கு என்று ஒரு மஸ்ஜித் கிடைத்த உடன் தங்கள் குடும்ப பள்ளி [போன்று ஆக்கி, வெள்ளி மேடைகளில் யாருக்கும் மனம் நோகாத அளவுக்கு ஜும்மாவில் பேசுவதுண்டு.. இந்த பட்டியலில் கீழக்கரையும் சேரும்.. அடி மட்டமக்களுக்கு மார்க்கம் போய் சேர இவர்கள் எந்த முயற்சியும் செய்ய வில்லை. இவர்களின் தவ்ஹீத் மஸ்ஜித்களில் நிர்வாகிகள், போருப்புதாரிகளாக இருப்பவர்கள் எல்லாம் யார் தெர்யுமா? எல்லாம் மேல் ஜாதி கூட்டம் தான். நான் ஜாதி என்று சொல்ல காரணம் இருக்கிறது. மேல் குறிப்பிட்ட இந்த ஊர்களில் இன்று வரை இவன் மேலத்தெரு வாசி, இவன் கீழத்தெரு காரன் என்று பிரித்து உளார்கள் இது அதிரை, கீழை க்கு பொருந்தும். அதே போல காயல்பட்டினத்தில் ஒரு முஸ்லிம் பெண்மணி பரிமார் தெரு, அல்லது பைபாஸ் ரோடு போன்ற பகுதியில் இருந்து காபிரோடு ஓடினால் அது ஊரில் பெருசாக தெரியாது. ஊரில் யவனும் பேச மாட்டான், அது நேரம் அலியார் தெரு, அப்பா பள்ளி தெரு போன்ற பகுதியில் இருந்து ஓடினால் ஊரே பேசும். காரணம் அது கீழ் ஜாதி குடும்பங்கள்? இது மேல் ஜாதி குடும்பங்கள்? இப்படி பிரித்து பார்ப்பது யாரின் வேலை அன்றைய காபிர்களின் வேலை. அதே போல் இன்றும் இந்த ஊர்களில் குலப்பெருமை நடைமுறையில் இருக்கிறது என்று என்னால் ஆணித்தரமாக சொல்ல முடியும். இப்படி குலம் பேசும் ஒரு ஊரில் (அதிரை ) நீண்ட காலம் பின்பு இப்போது தான் ஷிர்க்கு எதிராக ஒரு பிரச்னை வந்து உள்ளது. வரணும் , வந்து சத்தியத்தை சொல்லி அடி வாங்கணும். போட்டுள்ள வெண்மை ஆடை கலையாமல் பள்ளிக்கும் , வீட்டுக்கும் வந்து போவது மட்டும் தவ்ஹீத் அல்ல. அல்லது ஒரு சில இயக்கங்களில் இருந்து கொண்டு தலைவர், மாநிலம், மாவட்டம் என்று பொறுப்புகளை பெற்று பெருமை அடிப்பது தவ்ஹீத் அல்ல. இன்னும் ஒரு படி மேல போய் இந்த சாக்கடை அரசியலில் இறங்கி, சிலரின் மனதை நோகடிக்க கூடாது என்று உக்காந்து கொண்டு தவ்ஹீதை மறக்கும் காலம் இந்த காலம் . இப்படி தவ்ஹீதை பேசவே நேரம் இல்லாத காலத்தில் அதிரையில் சகோதர் அஹ்மத் ஹாஜா க்கு அல்லாஹ் கிருபை புரிவானாக.. இது அப்படியே விட்டு விடாமல் தொடர்ந்து பிரசாரத்தை பழைய படி மிக விரைவாக செய்யுங்கள். முதலில் பல ஊர்களில் உள்ள குலப்பெருமையை விடுங்கள் அனைத்து மக்களையும் ஒரே மாதிரி பாவயுங்கள்...உங்கள் பணிகள் தொடரட்டும். ஷிர்க் அழியும். தவ்ஹீத் இந்த உலகை ஆளும்.......

  பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.