அதிரையில் நாளை இஃப்தார் நிகழ்ச்சி: சலசலப்பில் அதிரை!

நாளை (4/8/12 ஞாயிறு) இஃப்தார் நிகழ்ச்சியை மேலத்தெரு காட்டுப்பபள்ளி தர்கா கமிட்டி ஏற்பாடு செய்துள்ளது. அதனை மத நல்லிணக்க விழாவாகவும் அறிவித்து மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் அவர்களை அழைத்துள்ளனர்.

இந்நிலையில் மேலத்தெரு காட்டுப்பபள்ளி தர்கா வளாகத்தில் இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவிக்க துவங்கியுள்ளனர்.

”இல்லை, அறிவித்தபடி இஃப்தார் நிகழ்ச்சி நடந்தேதீரும்” என்று ஏற்பாட்டாளர் சொல்கிறார்கள்.

”இஃப்தார் நிகழ்ச்சியில், அனைவரும் கலந்துகொள்ளவேண்டும்”என்று அதிரை பேரூராட்சித்தலைவர் எஸ்.ஹெச்.அஸ்லம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எது எப்படியோ, இஸ்லாமிய புனித ரமழான் மாதத்தில், அதன் பெயராலேயே சலசலப்பு-சச்சரவில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதே நமது விருப்பம்!
Unknown

Unknown

Related Posts:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.