இலவச தொழில் பயிற்சி விண்ணப்பம் வினியோகம்
சென்னை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், இலவச தொழிற்பயிற்சி பெற காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படவுள்ளன.கிண்டி தொழிற்பயிற்சி நிலையத்தில், கம்மியர், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆபரேட்டர், எண்ணியல் நிழற்பட கலைஞர், விருந்தோம்பல் மேலாண்மை உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. இவை, வரும் 26, 27ம் தேதிகளில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. 14 வயது முதல் 40 வயது வரையுள்ள ஆண்கள் இதில் சேரலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. இந்த பயிற்சியில் சேருவோருக்கு கட்டணம் இல்லை.பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர், முதல்வர், அரசு தொழில் பயிற்சி நிறுவனம், கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெறலாம். மேலும் தகவலுக்கு, 044-2250 1530, 2250-1538 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.
fantastic for all youth unemployed.i really thank for your post.
பதிலளிநீக்கு