அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு - American Adirai Forum [A A F]
சிறப்புரை: ஷைக் நஜீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்.
அமெரிக்கா வாழ் அதிரையர்களின் கூட்டமைப்பு வெற்றிகரமாக இன்று 28-Oct-2012
(ஞாயிற்றுக் கிழமை) துவங்கப்பட்டது. இந்நிகழ்வு மிகச் சிறப்பாக
நடந்தேறியதற்கு வல்லமை நிறைந்த அல்லாஹ்வின் உதவியே காரணம் அன்றி வேறில்லை.
முக்கிய இந்நிகழ்வுக்கு குடும்பத்துடன் வந்து சிறப்பித்த அனைத்து அதிரை
சகோதரர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன் ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
மேலும் வல்லேஹோ மஸ்ஜிதில் சிறப்புடன் ஏற்பாடு செய்த சகோதரர்கள் அப்துல்
மாலிக், மதீனா, ஷேக் அலி இவர்களின் முயற்சிக்கும் பங்களிப்பிற்கும் எனது
தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர்களின் சந்திப்பின் நிறைவாக கீழ்கண்ட சகோதரர்கள் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:-
அமெரிக்கா அதிரை சகோதரர்களின் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள்
தலைவர் : சகோ. ஹக்கீம்
துணைத் தலைவர் : சகோ. ஷிப்ளி முஹம்மது
செயலாளர் : சகோ. ஷைக் நஸீர்
இணை செயலாளர் : சகோ. தமீம்
பொருளாளர் : சகோ. இக்பால் M.ஸாலிஹ்
Peer Assistant Leader : சகோ. ஜுபைர்
இறைவன் நாட்டப்படி விரைவில் மண்டல பொறுப்பாளர்களை அந்தந்த பகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்படும்.
கூட் டமைப்பின் நெறிமுறைகள்:-
1. நம் சமூகத்திற்கு (அமெரிக்க அதிரையர்கள்) சேவை செய்வதே முக்கிய குறிக்கோளாகும்.
2. சந்தாதாரர் மட்டுமே கூட்டமைப்பின் சகல
வசதிகளையும் பெறமுடியும், சந்தாதாரர் அல்லாதவர்களுக்கு கூட்டமைப்பின்
நலன்களில் பங்களிப்பு இல்லை.
3. மாதம் டாலர் 25/- சந்தாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
4. அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு, நம்
சமூக சகோதரர்களின் இறப்பு மற்றும் அதற்கான இறுதிக் கடமைக்கான (கஃபன்,
நல்லடக்கம்] செலவினங்களை சந்தாதரர்களுக்கு மட்டுமே ஏற்கும்.
5. உறுப்பினர்களுக்கிடையே ஒருவருக்கொரு உதவிபுரிதல், எதிர்பாராத விபத்துக்கள் அல்லது இடர்களுக்கு உதவுதல்.
6. அதிராம்பட்டினத்தில் வாழும் நலிந்த மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரம் செழிக்க பாடுபடும்
7. A.A.F..தனது முழு ஒத்துழைப்பு மற்றும்
பங்களிப்பை அதிரை பைத்துல் மால் வழியாகவே செய்யும் அதுவும் AAFன் செயற்குழு
அனுமதி பெற்ற பின்னரே செயல்படுத்தும்.
8. ஜகாத், தர்மங்கள், ஃபித்ரு சதக்கா முறையாக வசூல் செய்யப்பட்டு அதனை தேவையுடைய மக்களுக்கு வழங்குவ து.
9. ஆகுமாக்கப்பட்ட (ஹலால்) சம்பாத்தியமே நிரந்தரம் என்பதை உறுப்பினர்களுக்கு கட்டாயமாக வழியுறுத்தி அதன்படியே செயல்பட தூண்டுவது.
10. AAF புதிதாக அமெரிக்கா வரும் அதிரை
சகோதரர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் தங்குமிட வசதி, வேலை வாய்ப்பு
ஆகியவைகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்னின்று உதவுவது.
11. சமூக கட்டமைப்பு உருவாக்குவது (சமூக கூடல், பொழுது போக்கு விடயங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் ஒன்று கூடல்)
12. இளைஞர்களுக்கு அவர்களின் எதிர்காலத்தினை செப்பனிட வழிகாட்டுவது.
13. AAF எவ்வகையிலும் நேரடியாக பள்ளிவாசல்
கட்டிட நிதிக்காக பொருளாதார உதவியினை அதன் பொருளாதரத்திலிருந்து வழங்காது.
உறுப்பினர்கள் தங்களின் சொந்த முயற்சியில் தனியாகவோ அலல்து கூட்டாகவோ
நேரடியாக நிதி திரட்டுவதில் AAF எவ்வகையிலும் தலையிடாது.
14. AAF ஏழைக் குமர்களுக்கு அல்லது திருமண நிதி உதவிகள் செய்யாது.
15. அதிரை அல்லாத சகோதரர்கள் கூட்டமைப்பில்
இணைந்து செயல்படலாம், அவர்கள் அமெரிக்காவில் அதிரையர்களுக்கு என்ன சலுகைகளோ
அவையனைத்தும் பெறுவார்கள். ஆனால், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அந்த உதவி
நீட்டிக்கப்படமாட்டாது.
16. கூட்டமைப்பின் நிகழ்வுகளை யாரும் முன்
அனுமதியின்றி நேரடியாக மீடியாவிற்கு அனுப்பக்கூடாது அல்லது மின்னஞ்சல்
பகிர்வுகள் செய்யக்கூடாது.
17. இறைவன் நாடினால், ஒவ்வொரு வருடமும் (முஹர்ரம் - துல்ஹஜ்) இஸ்லாமிய கால அட்டவணைப்படி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
நிழ்வின் நிரலாக:- Meeting minutes:
நிகழ்வு சரியாக லுஹர் தொழுகைக்கு பின்னர் துவங்கியது. அனைவருக்கும் கோழி
பிரியானி மற்றும் தந்தூர் கறி (ஃப்ரிமோண்ட்லிருந்து ) ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
ஜசாகல்லாஹு கைரன்!
தகவல் : இக்பால் M.ஸாலிஹ்
Alhamdulillaah
பதிலளிநீக்குஆழகான வெளியிடு தொடரட்டும் அவர்களின் சமுதாய சமூகம சார்ந்த பணி
பதிலளிநீக்குவாழ்த்துக்களுடன்
ஜமால் முகம்மது
சீசல்ஸ்