Breaking News
recent

ஐடி துறை சார்ந்த துணை படிப்புகள் என்னன்ன?

இன்றைய காலகட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கியத்துவம் குறித்து காண்போம். தகவல் தொழில்நுட்ப துறைதான் அதிக அளவிலான நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் துறை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு பரவலான உண்மை. ஆனால் ஐடி நிறுவனங்களுக்கு அதிகளவில் மனிதவளம் தேவைப்படுகையில் அது கிடைப்பதில்லை என்பது ஒரு முக்கியமான உண்மை.
ஒரு ஐடி தொழில் நிபுணர் என்ற நிலையை தவிர்த்து அலுவலகங்களில் பணிபுரியும் ஒவ்வொருவருக்குமே அடிப்படையாக கணித அறிவு அவசியமாகிறது. இன்றைய நிலையில் ஒரு கல்லூரி மாணவன் படிப்பு முடிந்து பணிக்குச் செல்லும் முன்பாக அவனுக்கு அடிப்படையான கணினி அறிவு நிச்சயம் தேவையாக இருக்கிறது.
ஐடி துறைக்குள் 3 விதமான பணி பிரிவுகள் உள்ளன. அவை 1.மென்பொருள் மேம்பாடு (Software Development), 2.தகவல் தொடர்பு அமைப்புகள் மேலாண்மை (Information Systems Management) 3. வன்பொருள் நெட்வர்க்கிங் (Hardware Networking) எனவே, ஒருவர் கணினி பயிற்சியை முடித்தவுடன் மென்பொருள் புரோகிராமிங் பணி (Software Programming Job), எம்.ஐ.எஸ் பணி (MIS Job) அல்லது நெட்வர்க்கிங் வகை பணி (Networking kind of Job) ஆகிய ஏதேனும் ஒன்றை பெறுகிறார். இத்தகைய பணிகளில் உயர் நிலைகளும், கீழ் நிலைகளும் உண்டு. எனவே நீங்கள் முடித்த படிப்பின் கால அளவு மற்றும் உங்களின் திறமையைப் பொறுத்து பணிகள் வேறுபடுகின்றன. பொதுவாக குறுகிய கால படிப்புகள் மற்றும் நீண்டகால படிப்புகள் என்று இரு வகைகள் உள்ளன.
குறுகிய கால படிப்புகள் 2 முதல் 5 மாதங்கள் கால அளவுகளைக் கொண்டு சான்றிதழ் அல்லது டிப்ளமோ நிலையில் உள்ளன. இந்த குறுகியகால படிப்புகள் ஒருவருக்கு அடிப்படை கணினி அறிவை வழங்குவது முதல் ஒன்று அல்லது பிற கணினி அம்சங்களில் சிறப்பு திறன்களை பயிற்றுவிப்பது வரை உள்ளன.
பல பொறியியல் கல்லூரிகளில், இந்த வகை படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு அவர்களின் வருங்காலப் பணிக்குத் தேவையான திறன்களை வழங்குவதற்கு உதவி புரிகின்றன. கம்ப்யூட்டிங் என்பதைப் பொறுத்த வரை பல கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் உள்ளன. ஆனால் போதுமான தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லை மற்றும் இதுபோன்ற பல சிக்கல்கள் அங்கே உள்ளன. ஆனால் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இதுபோன்ற திறன்களையே முக்கியமாக எதிர்பார்க்கப்படுகின்றன. இது போன்ற சிக்கலான நிலையயில்தான் மேற்கூறிய குறுகிறகால படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் முக்கியப் பணியாற்றுகின்றன.
நீண்டகால படிப்புகள் என்பவை 1 முதல் 3 வருடங்கள் வரையான கால கட்டத்தினை கொண்டது. வகுப்புகள் ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரங்கள் நடைபெறும் மற்றும் வாரம் 5 நாட்கள். சில படிப்புகள் ஒரு நாளைக்கு 2 மணி நேரங்கள்  மற்றும் வாரத்திற்கு 3 நாட்கள் நடைபெறும். இந்த வகைப் படிபப்புகளில் எலக்ட்ரானிக் புத்தகங்கள், மற்ற மாணவர்களுடன் அளவீடுகள், பயிற்சி திட்டங்கள், பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள் மற்றும் நேரடி விரிவுரைகள் போன்ற அம்சங்கள் இருக்கும். மாணவர்களுக்கு டேட்டா கார்டுடன் லேப்-டாப் வழங்குவதால் மேற்கூறிய வசதிகளை அவர் எப்போதும் எந்த இடத்திலிருந்து ம் பெற முடியும். மேலும் பாடங்களை லேப்-டாப்பிலேயே இறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.
மைக்ரோசாப்ட் சான்றிதழ் என்பது ஐடி தொழில்துறை  நிபுணர்களுக்கான ஒரு சிறந்த சான்றாகும். இந்த சான்றிதழ் ஒருவர் சிக்கல் வாய்ந்த ஐடி தொழில்நுட்பங்களை கையாளும் விதத்தில் அவருக்கு பயிற்சியளிக்கிறது. இவைத்தவிர வேறு பல முக்கிய சான்றளிப்புகளும் உள்ளன. அவை Microsoft Certified Architect (MCA). Microsoft Certified Master (MCM). Microsoft Certified IT Professional (MCITP), Microsoft Certified Technology Specialist (MCTS) போன்றவையாகும்.
மேலும் மல்டிமீடியா, ஏவியேஷன் மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை போன்ற பல பிரிவுகளும் உள்ளன. இதற்காக தமிழகத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்துடன் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஆப்டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் பொறியாளராக இருந்தாலோ அல்லது ஒரு பொறியாளராக பணியாற்றப் போகிறவராக இருந்தாலோ சில கூடுதல் டிப்ளமோ படிப்புகள் தேவைப்படுகின்றன. எனவே கூடுதல் கணினி படிப்புகள் பெற்றிருந்தால் தாங்கள் விரும்பிய தொழில்நுட்ப துறைகளில் பணியாற்ற உதவியாக இருக்கும்.
 நன்றி:தினமணி
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.