பி.எல்.என்.எல். இரண்டு மாத கால ஆன்லைன் சான்றிதழ் படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
சென்னை தொலைபேசி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இன்டர்நெட் போர்ட்டல், நெட்வொர்க்கிங் மற்றும் சைபர் பாதுகாப்பு, மொபைல் தகவல்தொடர்பு, அகண்ட அலைவரிசை தொழில்நுட்பம், ஆப்ட்டிகல் ஃபைபர் சிஸ்டம்ஸ், டிஜிட்டல் ஸ்விட்சிங் மற்றும் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம்ஸ், தொலைத்தொடர்புக்குத் தேவையான உள்கட்டமைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஆன்-லைன் சான்றிதழ் படிப்பை பி.எஸ்.என்.எல். வழங்குகிறது.
மாணவர்களும், தொலைத்தொடர்புத் துறையில் வேலைவாய்ப்பைத் தேடுபவர்களும் இந்தப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெற முடியும். செய்முறை பயிற்சியும் இந்த படிப்பில் அடங்கும். வார விடுமுறை நாள்களில் பல கோடி ரூபாய் மதிப்புடைய இயந்திரங்களில் இந்த செய்முறைப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
சென்னை மறைமலை நகர் பெரியார் சாலையில் சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள சென்னை தொலைபேசியின் மண்டல பயிற்சி மையத்திலும், மேலும் சில மையங்களிலும் பயிற்சிகள் நடத்தப்படும். இந்த படிப்புக்கான கட்டணம் ரூ. 5,000. படிப்பு அறிமுகச் சலுகையாக கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும். இந்த படிப்பின் முதல் பேட்ச் வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. மேலும் விவரங்களை www.learntelecom.bsnl.co.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்