போலி வக்கீல்கள் மோசடிகளை தவிர்க்க தமிழ்நாடு பார் கவுன்சில் இணையதளம் தொடக்கம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், www.barcounciloftamilnadupuducherry.com என்ற புதிதாக ஒரு இணையதளத்தை தொடங்கியுள்ளது. இந்த இணையதளத்தை கடந்த 20–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் தொடங்கி வைத்துள்ளார்.
வக்கீல்கள் பெயர், பிறந்த தேதி, வக்கீலாக பதிவு செய்த நாள், தற்போது எந்த கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றுகிறார் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.
பொதுமக்கள் ஒரு வக்கீல் குறித்து விவரங்கள் அனைத்தும் இந்த இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் போலி வக்கீல்களிடம் வழக்கினை கொடுத்து பொதுமக்கள் ஏமாறாத நிலை உருவாகும்.
எனவே, வக்கீல்கள் தங்களை பற்றி அனைத்து விவரங்கள், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றை பார் கவுன்சிலிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பார் கவுன்சிலில் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் வக்கீல்களை பற்றி இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Unknown

Unknown

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.