Breaking News
recent

மூன்றாம் உலகப்போர் அதிரையிலிருந்தா ??

அல்லாஹ் இந்த உலகிற்கு அளித்த அருட்கொடைகளில் ஒன்றான தண்ணீர், நாளுக்குநாள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.எந்த அளவுக்கெனில் இனியொரு உலகப்போர் அதாவது - மூன்றாம் உலகப்போர் வருமானால் அது தண்ணீருக்காகதான் என விஞ்ஞானிகள் சமூகவியளாலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

குடிநீர், சுகாதாரம், விவசாயம், கால்நடைகளுக்கு என பல வழிகளில் தண்ணீரின் பயன்பாடு அதிகம், ஏன் இந்த நீர் இல்லையேல் உலகில்லை. இதைத்தான் "நீரின்றி அமையாது உலகு” என்பார்கள். அந்த நீர்தான் இன்று கானல் நீராகி வருகிறது.

பாசனத்திற்கு, கண்மாய்கள்; பொதுப் பயன்பாட்டுக்கு, குளங்கள்; குடிநீர் தேவைக்கு, ஊருணிகள் என்று, இனம்பிரித்து வளமாக வாழ்ந்தனர் அன்றைய மக்கள். இன்று..? எல்லாம் தலைகீழ் மாற்றம். மேற்சொன்னவைகள் இன்றைய தலைமுறைகளுக்கு என்னவென்றே தெரியாது!

அதிரையின் நிலை?

அதிரையில் முன்னொரு காலத்தில் குளத்தில் குடிநீர் எடுத்து வருவார்கள். அந்த குளங்கள் அவ்வளவு சுத்தமாகவும் முழு பாதுகாப்பு வசதி கொண்டதாகவும் இருக்கும். காலம் மாறியது. குளங்களின் சுத்தமும் போனது; வரண்டும் போனது. வீட்டிற்கு வீடு கிணறு வெட்டி அதில் வீட்டுத் தேவைகளுக்கும் குடிநீருக்கும் பயன் படுத்தினார்கள். இருபது வருடங்களுக்குமுன் அதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு, அப்போது நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது. இதனால் ஆள்துளை கிணறுகளை வீடுகள் தோறும் போட்டு நீர் உரிஞ்சினார்கள். தேவைகளை விடவும் அதிகமாகவே பயன்படுத்தினார்கள் விழலுக்கு இறைத்த நீராகிப் போனது.

மீண்டும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட துவங்கியுள்ளது. இப்போதும் நாம் விழிந்துக் கொள்ளவில்லை என்றால்... நீருக்காக பெரும் கஷ்ட்டத்தை அனுபவிக்க வேண்டி வரும் என்பது நிதர்சனமான உண்மை!

அதிரையில் இப்போது இருக்கும் நிலத்தடி நீர் அளவு (இந்த அளவுகோளில் ஏற்ற / இறக்கமான அளவு அல்லது இதில் சில அடிகள் கூடலாம் குறையலாம்)

சி.எம்.பி.லேன், மிலாரிக்காடு அதை சுற்றியுள்ள பகுதிகள்  100-110 அடியும்

செக்கடிப் பள்ளிவாசலை சுற்றியும் புதிய,பழைய ஆலடிக்குளம் பகுதிகளில் 90-100 அடியும்

ஆஸ்பத்திரித் தெரு, புதுத்தெரு, பழஞ்செட்டித் தெரு பகுதிகளில் 50-60 அடியும்

கடைத்தெரு, நடுத்தெரு கீழ் மற்றும் மேல் பகுதிகளிலும் மேலத்தெரு, சானவயல் பகுதிகளில் 65-75 அடியும்,

கீழத்தெரு, பிலால் நகர் பகுதிகளில் 40-50 அடிகள்

ஆதம் நகர், அதன் தாழ்வானப் பகுதிகள் மற்றும் கடற்கரைத் தெரு தரகர் தெரு பகுதிகளில் 40-30 அடிகள் இருப்பதாக ஆள்துளை கிணறு போடுபவர்கள், பிள்மபிங் வேலை செய்பவர்கள் சொல்கிறார்கள்.

இந்த பகுதிகளில் ஏற்கனவே அதாவது 2,3 வருடங்களுக்கு முன்பு வரை இப்போதுள்ள நிலத்தடிநீர் மட்டம் இருபத்தைந்து,முப்பது அடிகள் உயர்ந்திருந்தது என்பது இங்கு கவனிக்க வேண்டியது அவசியமாகும்!

அல்லாஹ் தனது திருமறையில் எடுத்துரைக்கிறான்:

"மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்." (அத்தியாயம் : 23 வசனம் : 18)

நிலத்தடி நீர் குறைவதற்கு மழை பற்றாக்குறை என்பது உண்மைதான். ஆனால், அதற்காக அதையே காரணம் சொல்லி கொண்டிருப்பது அறிவுடமையாகாது.

வீட்டிற்கு வீடு இதற்கான முயற்சி எடுத்தாலே குறைந்து வரும் நீர் மட்டத்தை காக்க முடியும்! இன்ஷா அல்லாஹ்!! 

நம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் கிணறு, ஆள்துளை கிணறு பக்கத்தில் நாம் பயன்படுத்தும் நீர்களை (மழை நீர் சேகரிப்பு தொட்டி போன்று) தொட்டி அமைத்து அதில் விடலாம். தேவையற்ற முறையில் தண்ணீர் பயன்படுத்தாமலும் இருக்க வேண்டும்.

இன்னும் சில வழிமுறைகள் உள்ளன.எல்லாவற்றிர்க்கும் மேலாக இறையருள் நிறம்பிய இந்த ரமளான் மாததில் அல்லாஹ்விடம் கையேந்துவோம்! இன்ஷா அல்லாஹ் !

 அ.ர.ஹிதாயத்துல்லாஹ்
Unknown

Unknown

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.