முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மஸ்ஜிதை திரும்பக்கட்டக்கோரியும்,மஸ்ஜிதை இடித்த கயவர்களை சட்டப்படி தண்டிக்கவும் வலியுறுத்தி,தஞ்சையில் நடந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிரையர்களுடன் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பங்கேற்றார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தஞ்சை மாவட்டம் (தெற்கு) சார்பில் ஆப்ரகாம் பண்டிதர் சாலையில் நேற்று முன்தினம் (06-12-2013) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல்ஜப்பார் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் அகமதுஹாஜா,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது கபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துல்ரஹ்மான் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில தொழிற்சங்க செயலாளர் சுல்தான்அமீர் கண்டன உரையாற்றினார்.
இதில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், பாப்பாநாடு ஜமாத் செயலாளர் அகமதுகபீர் மற்றும் 250க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து முடித்து, தீர்ப்பு வழங்கவும், பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கவும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.முடிவில் மாவட்ட பொருளாளர் சேக்அலாவுதீன் நன்றி கூறினார்.
நன்றி: தினத்தந்தி (08-12-2013)
ஒரு புறம் கடற்கரை ஜாமத்தின் கந்தூரி திருவிழா.மறுபுறம் த.த.ஜ வின் சமாதி வழிபாட்டிற்கு எதிரான மார்க்க சொற்பொழிவு.இதற்கு இடயில் த.மு.மு.க மற்றும் sdpi இன் சமுதாய போராட்டங்கள் என அதிரை இனைய தளங்கள் நடுநிலையான பங்களிப்பு பாராட்டிற்குறியது .
பதிலளிநீக்குஒரு புறம் கடற்கரை ஜாமத்தின் கந்தூரி திருவிழா.மறுபுறம் த.த.ஜ வின் சமாதி வழிபாட்டிற்கு எதிரான மார்க்க சொற்பொழிவு.இதற்கு இடயில் த.மு.மு.க மற்றும் sdpi இன் சமுதாய போராட்டங்கள் என அதிரை இனைய தளங்கள் நடுநிலையான பங்களிப்பு பாராட்டிற்குறியது .
பதிலளிநீக்கு