Breaking News
recent

மக்களை குழப்பும்... கருத்து தி(க)ணிப்புகள்! கேம்பஸ் டுடே ஆசிரியர் முகமது தம்பி

கட்டுரையாளர்: Z. முகமது தம்பி,

கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர், 

முன்னாள் தமிழ்மாநில தலைவர்,

கேம்பஸ் டுடே இதழில் ஆசிரியர்.

அதிகம் பணம் கொடுக்கும் கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப கணிப்பு முடிவுகளை மாற்றி வெளியிட கருத்து கணிப்பு நிறுவனங்கள் தயாராக இருப்பிருப்பதாக   அண்மையில் நியுஸ் எக்ஸ்ப்ரஸ் என்ற இந்தி செய்தி தொலைகாட்சியின் ஆசிரியர் செய்தியாளர்களிடம் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டார். தங்கள் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷனின் மூலம்  இது தெரிய வந்திருப்பதாகவும் இதில் ‘டைம்ஸ் நவ்’ உள்ளிட்ட மிகப்பிரபலமான செய்தி சேனல்களுக்காக கருத்து கணிப்பு நடத்தும் சி வோட்டர்ஸ்உட்பட 11  நிறுவனங்கள் அடங்கும் என்றும் கூறினார்.
செயற்கையான மக்கள் கருத்தை உருவாக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகளும் நாட்டை சுரண்டிகொண்டிருக்கும் முதலாளிகளும் கூட்டு சேர்ந்துள்ளனர். இதற்காக பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஊடகங்களுக்கு அள்ளிக்கொடுகின்றனர். தேசம் முழுவதும் மோடி அலைவீசுகிறது என்பது போன்ற பொய்யான செய்திகளை ஊடகங்களில் கொண்டு வர பாஜக பணத்தை வாரியிரைக்கிறது. தங்கள் நலம் நாடும் கட்சிகளுக்கு பண உதவி செய்ய  அம்பானிகளும் டாட்டாக்களும் இருப்பதை, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் முன்  கேஜ்ரிவால் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்தை உருவாக்குவதில் இன்று ஊடகங்கள் முன்னணியில் உள்ளன. பெரும்பான்மையான மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய முன்வாராமல் தாங்கள் உருவாக்கும் கருத்துக்களை மக்கள் மத்தியில் திணிக்கவே முயல்கின்றன. தங்கள் எஜமானர்கள் அல்லது இனத்தவர்களுக்கு சேவகம் செய்வதில் ஊடகங்களுக்கு இடையே போட்டி நிகழ்வதை காண முடிகிறது. இதன் வெளிப்பாடே கருத்து கணிப்பு நாடகங்கள். தங்களுக்கு ஆதரவான கட்சி தலைமைகளின் மனதைகுளிர வைப்பதற்காக வெளியிடப்படும் கருத்து கணிப்புகளால் மக்களிடையே குழப்பாமான மனநிலையை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களது எண்ணம். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு தான் என்பது போல் இவர்களது போலியான கருத்து கணிப்புகள் தோல்வியடைந்ததை  கடந்த தேர்தல்களில் கண்டோம். இருப்பினும் தேர்தலுக்கு முன் மக்களிடையே குழப்பாமான நிலையை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது.
பி ஜே பி கடந்த 2009 லோக் சபை தேர்தலில் 116 இடங்களில் வென்றது இதில் வேடிக்கை என்ன வென்றால் கிட்டத்தட்ட 140 தொகுதியில் டெபொசிட் இழந்தது அது மட்டும்மல்ல 15 மாநிலங்களில் ஒரு எம் பி கூட பெற முடியவில்லை 6 யூனியன் பிரதேசங்களில் ஒன்று கூட
வெற்றி பெற வில்லை இந்த புண்ணாக்கை தான் NDTV கடந்த தேர்தலில் 250 தொகுதிகளில்
வெற்றி பெறும் என மார்தட்டியது

மக்களை குழப்பும் விதமாக தவறான கருத்துக் கணிப்புகளை வெளியிடும் நிறுவனங்கள் மீதோ சமூக வலைத்தளங்களில் போலியான அரசியல்  பிரச்சாரங்கள் செய்யும் நிறுவனங்கள் மீதோ கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படாததால் இவர்களின்  வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது.
நேர்மையான தேச நலனில் அக்கறை கொண்ட ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாக கொண்ட நாகரீக சமூகத்தை கட்டமைக்க வேண்டிய பொறுப்புள்ள அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் தங்கள் சமூக கடமையை மறந்து மதி மயக்கத்தில் மூழ்கிருக்கும் இவ்வேளையில், தேர்தலில் தக்க பாடம் கற்று கொடுப்பதன் மூலமே மாற்றத்தை ஏற்படுத்த இயலும்.
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.