Breaking News
recent

அதிரை பேரூராட்சியின் செயல்படாத கவுன்சிலர் ஆப்பிள் இப்ராஹிம்;ராஜினாமா செய்ய வேண்டும்!

அதிராம்பட்டினம் பேரூராட்சியின் 21வது வார்டு சி.எம்.பி லேன் பகுதியில் இன்று காலை(14/01/10) எடுக்கப்பட்ட புகைப்படம் இது!

நாம் எழுத வேண்டிய செய்திகளையெல்லாம் இந்த புகைப்படம் சொல்லிக்காட்டுகிறது!

21வது வார்டு மக்கள் குறிப்பாக சி.எம்.பி லேன் பகுதி மக்கள் என்ன பாவம் செய்தார்கள்?
"எனக்கு ஓட்டுப்போட்டு கவுன்சிலராக்கினால் அதை நிறைவேற்றுவேன் இதைநிறைவேற்றுவேன்" என்றதை நம்பி ஓட்டுப்போட்டதை தவிர??

கவுன்சிலர் ஆப்பிள் இப்ராஹிம்:

கவுன்சிலர் ஆப்பிள் இப்ராஹிம் அவர்கள்தான் இந்த 21வது வார்டின் கவுன்சிலர்!
அவர்மீது நமக்கு எந்த கோபமோ மனக்கசப்போ இல்லை.(சகோதரர் இப்ராஹிம் அவர்கள் சமூக சேவகர் என்பதில் நமக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை- ஆனால்,இப்போது என்ன ஹாலாத்(நிலை)?
ஆனால் மக்கள் பிரச்சினை என்று வரும்போது சுட்டிக்காட்டுவது,கண்டிப்பது நமது கடமை. எனவே, சகோதரர் இப்ராஹிம் அவர்கள் இதனை வீம்பாகவோ கோபமாகவோ எடுத்துக்கொள்ளாமல் ஆரோக்கியமாக எடுத்துக்கொண்டு மக்கள் பிரச்சினைகளை நிறைவேற்ற வேண்டும்!
இல்லையெனில் ராஜினாமா செய்துவிட்டுப்போகட்டும்!!

(சமூக சேவையே தனது கடமையென மனிதநேய மக்கள் கட்சியினரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினரும் நல்ல அரசியல் செய்ய தயாராக இருக்கிறார்கள். அவர்களில் யாரையாவது கவுன்சிலராக தேர்வு செய்துக்கொள்வார்கள்)

கவுன்சிலர் இப்ராஹிம் அவர்களிடம் சில கேள்விகள்:

1)நீங்கள் இப்பகுதியின் பிரச்சினைகளை பேரூராட்சி நிர்வாகத்திற்கு கொண்டுசென்றீர்களா?

2)பேரூராட்சியில் இது சம்மந்தமாக தீர்மானம் எதாவது கொண்டுவந்ததுண்டா?

3)நீங்கள் பேரூராட்சியின் கவணத்திற்கு கொண்டு சென்று அதை அவர்கள் நிறைவேற்றாத நிலையில் நீங்கள் பிரச்சினைகளை தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன?

உங்கள் பதில் என்ன...?











என்ன செய்யப்போகிறார் ஆப்பிள் இப்ராஹிம் அவர்கள் (மறந்துபோன) சமூக சேவையா?
அல்லது தன்னால் முடியாது என ராஜினாமாவா??

பொருத்திருந்துப்பார்ப்போம்!



தொடரும்...
Unknown

Unknown

21 கருத்துகள்:

  1. நல்ல சமுதாய ஆர்வலராகத்தான் இவரை அறிமுகம்.

    இவருக்காக ஓட்டிட எனது வீட்டிலும் குடும்பத்திலும் வாதிட்டவனில் ஒருவன்.

    அதிகம் பாத்திப்பு அடைந்தவர்களில் எனது வீடும் ஒன்று. இந்த வரிசையிலேயே இருக்கும் ஒன்று(ம்)

    பார்த்து எதுனா செய்ங்க இப்றாகிம்.

    பதிலளிநீக்கு
  2. படத்தை பார்த்தவுடன் அதிர்ச்சியாக உள்ளது.உடன் நடவடிக்கை தேவை. எங்கூடும் அங்கனதான்.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. இது போன்ற படங்களை பார்க்கும் போது ஏதோ ஆப்பிரிக்கா கண்டத்தில் எடுத்த படம் மாதிரி இருக்கிறது. ஒரு காலத்தில் சி.எம்.பி லேன் ஒன்றுதான் அதிரையில் சுத்தமாக இருந்த்தது. இதற்க்கு பெரிய அளவில் கம்ப்லெய்ன்ட்,[பல அதிகாரிகளுக்கு] எழுதினால் ஒழிய ஒன்றும் நடக்காது. மெம்பர் எல்லாம் தொடர்ந்து ஏதாவது நல்ல்து செய்வார்களா என்பது கேள்விக்குறிதான்.

    ZAKIR HUSSAIN

    பதிலளிநீக்கு
  5. எம்பியே வரை படித்துவிட்டு கவுன்சிலரான தம்பி இப்ராஹிம் இப்பிடி அசிங்கமாக ஊர்சிரிக்க புகைப்படம் போட்டு சொல்லும் அளவில் உள்ளாயே. உனக்கே நல்லாயிருக்காப்பா? இந்த பதவியை நீ ராஜினாமா செய்றது தான் சரி.

    பைத்துல்மால் நிர்வாகத்தில் இருப்பதலால் நீ நல்லவனாகிவிடமுடியாது. ஊருக்கு ஒன்றும் செய்யாமல் கவுன்சிலர் பதவியை மட்டும் வெத்துக்கொள்வதலால் யாருக்குப் பயன்.

    பதிலளிநீக்கு
  6. பொது சேவையிலுள்ளவர்களாக விரும்புவர்கள் தனது தொழிலை விட மக்கள் நலம் பேண வேண்டும்;நண்பர் இப்றாஹிம் அவர்கட்கு தான் நின்ற "ஆப்பிள்" சின்னத்தையே அடையாளமாக அழைக்கப்படும் அளவுக்கு வாக்களித்த தாய்க்குலத்திற்கு துரோகம் செய்ய எப்படி மனம் வந்தது? ஒரு முஸ்லிம் வாக்குறுதி மீறமாட்டான் என்பதை நிரூபிப்பீர்களா? நண்பர் இப்ராஹிம்!

    "கவியன்பன்" , கலாம், அதிராம்பட்டினம்

    இருப்பிடம்: அபு தபி

    பதிலளிநீக்கு
  7. முஹை(அரபு வளைகுடா)17 ஜனவரி, 2010 அன்று AM 6:03

    அதிரை போஸ்ட் கேட்ட
    3 கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே
    ஆப்பிள் இப்ராகிம்.

    எப்படிச்சொல்வார் செய்தி மட்டும்
    வந்திருந்தால் எதுவும் சொல்லியிருக்லாம்.
    போட்டோவுடன் வந்ததால் கள்ள மெளனம்
    சாதிக்கிறார்.

    ஆனா ஒன்னு, இனி நீங்கள் எந்த வார்டில் நின்றாலும்,
    அதிரை போஸ்ட் புகைப்பட செய்தி,கருத்தோட நோட்டீஸ்
    கொடுத்து உங்களுக்கு ஓட்டுப்போட(?) சொல்வோம்.

    cmplane முஹை(அரபு வளைகுடா)

    பதிலளிநீக்கு
  8. இஸ்மாயில்,மன்சூர்.UK17 ஜனவரி, 2010 அன்று AM 7:22

    அதிரை போஸ்டுக்கு ஒரு கேள்வி?

    அதிரை போஸ்ட் சி எம் பி லேன் பகுதி பிரச்சினைகளை மட்டும் தான் வெளியிடுமா?

    பதிலளிநீக்கு
  9. அஸ்ஸலாமு அலைக்கும்

    தம்பி இபுறாஹிம் ஒன்னும் யாரும் போயி பார்க்கமுடியாத ஆளில்லை. இங்கு எழுதுறத்துக்கு முன்னாடி அவரிடம் நேர்ல கேட்டிருக்கலாம். சந்தர்ப்பம் கொடுத்து செய்யத்தவறி இருந்தால் இதுமாதிரி பொதுவுல போட்டு இருக்கலாம். ஆனா ஒன்னு இதேமாதிரி எல்லா கவுன்ஸிலரையும் செய்யனும். செய்வீங்களா? இதுதான் முறை.

    ஏம்மா தம்பிகளா நம்ம ஊர்ல சிஎம்பி தெரு மட்டும்தான் குப்பையும் கூளமுமா இருக்குதா? ஏன் உங்கட மொபைல் கேமரா அதையெல்லாம் போட்டோ எடுக்காதா? அல்லது அது சரியா இருந்தால் எல்லாம் சரியாயிடுமா?

    நம்ம கவுன்ஸிலர்களில் அல்லாஹ்வுக்கு அஞ்சி செயல்படுபவர்கள் எத்தனை பேர்? தம்பி இபுறாஹீம் முற்றிலும் செயல்படாத கவுன்ஸிலர் அல்ல. ஏதோ அவரால் முடிந்தளவு அணுகவேண்டிய அதிகாரிகளை முறையாக அணுகி செய்ய வேண்டியதை செய்துள்ளார்.

    இங்கு (அதிரை பேஸ்டில்) எழுதியிருப்பவருக்கு சொந்தபகை அல்லது காழ்ப்புணர்வு இருக்க வேண்டும் என்றே தெரியுது. நீங்க உண்மையானவராக இருந்தால் நம்ம ஊர் எல்லா கவுன்ஸிலர்களின் செயலையும் ஒப்பிட்டு, தம்பி இபுறாஹிமை ராஜினாமா செய்யச் சொன்னால் நேர்மையும் நாயமும் இருக்கும்.அல்லாதான் எல்லாருக்கும் நல்ல புத்தியக் குடுக்கணும்.

    தவறாக எழுதி இருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னித்துக் கொள்ளுங்கமா.

    பதிலளிநீக்கு
  10. IVVALAVU ASINGAMAHA CMP LINE AAHUM ALAVUUKU IRUPPADAI VIDA PADAVIYAI THOOKKI VEESIVITTU UNGALAI EDIRKKUM MAKKALODU SERNDU NEENGALUM PORIDALAAM PANCHAYATTHU BOARDUKKU EDIRAAHA INDA AVALA NILAIYAI EDIRTTHU.

    பதிலளிநீக்கு
  11. அஸ்லாமளைகும்
    இப்ராகிம், இது உன்னுடைய நண்பன் கீலத்தெரு தாமீம் எழுதிகொண்டது நாம் படிக்கும்போது அதிகம் அதிகம் பொதுநலம் பொதுநலம் என்று சொல்லிகொண்டு திரிவாய் உன்தெரு வாசிகளுக்கு எலக்ட்ரி பில்லிளிருந்து கரி வாங்கி கொடுப்பதுவரை செய்தாய் அவர்களுக்கு நல்லது செய்வதற்காக எவ்வலாவு பாடுபட்டாய் எவ்வலவு கஷ்டப்பட்டு உழைத்ததை எவ்வலவு பேர்களை நீ எதிர்த்து நின்றதை நான் அறிவேன் உன்தெரு வாசிகள் அல்லாது மற்றதெரு வாசிகளுக்கும் உதவிகள் செய்வாய் நீ படிப்பில் நாட்டம் செளுத்திநியோ இல்லயோ பொதுநலத்தில் அதிக அக்கறை காட்டிகொண்டிருந்தாய் தர்பொழுது உன்மீது உன்தெருருவாசிகளே குற்றம்சுமத்துகின்றார்கள் என்ன ஏது என்று பார்த்து அதனை சரிசெய்து விடு என்ன இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது பொதுநலத்தினை அல்லாஹுக்காக என்று செய் அல்லாஹுடைய உதவீகிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  12. அதிரை போஸ்டில் வந்த செய்தியில் எதுவும் தொப்பிருப்பதாக தெரியவில்லை.இதை நான் லைன் சென்று பார்தபிரகுதான் எழுதிகிரேன்.கபீர்

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் கொடுத்துல்ல 7வது படம் சிஎம்பி லைன் கூப்பன் கடை எதிரில் உள்ளது தானே? இப்ராகீம் காகா இது 21வது வார்டு இல்லையா? கபீர்

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. அஸ்ஸலாமு அழைக்கும்
    நான் உருக்கு போகலாம்னு பார்த்தேன் ..
    ஆனா இந்த புகை படங்களை பார்த்த பிறகு ..

    பதிலளிநீக்கு
  21. அஸ்ஸலாமு அழைக்கும்
    நான் ஊருக்கு போகலாம்னு பார்த்தேன் ..
    ஆனா இந்த புகை படங்களை பார்த்த பிறகு ..

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.