Breaking News
recent

தனக்கு வந்தால் தாம், தூம் ஆட்டம்.

செஞ்சி கோதண்டராமர் கோவில் பிரச்சினையில் முதல் அமைச்சர் கருணாநிதி தலையிட்டு இந்துக்களின் ராம.கோபாலன் வழிப்பட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று கூறியுள்ளான்.

இதுகுறித்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த செஞ்சி கோதண்டராமர் கோவில் ஆற்காடு நவாப் ஆக்கிரமிப்பால் பாழடைந்து போனது. அதன்பிறகு வந்த ஆக்கிரமிப்பான ஆங்கிலேய, பிரெஞ்சு போன்ற அரசுகளாலும் செஞ்சி புறக்கணிக்கப்பட்டு வந்தது.

இத்தனை சோதனைகளுக்குப்பிறகும் செஞ்சி கோதண்டராமர் கோவிலில் வருடந்தோறும் தீர்த்தவாரி வெகுவிமரிசையாக பிப்ரவரி மாதத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 7 ந் தேதி கோவில் இடம் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமானது என செஞ்சி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது நடந்த சமாதான கூட்டத்தில் 1878 ம் ஆண்டு கிரய பத்திரத்தை காட்டிய கிறிஸ்தவர்கள், அதில் குறிப்பிட்டிருந்த கோவில்மண்டபம், மயில் கோபுரம், கிளி கோபுரம் நீங்கலாக என்று குறிப்பிட்டிருப்பதை மறைத்ததுடன், அத்துடன் கூடிய மூலப்பத்திரத்தையும், கோவில் டிரஸ்ட் சம்பந்தமான பத்திரம் பற்றி மூலப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளவற்றையும் சமர்ப்பிக்கவில்லை.

இதுபோன்ற வழிபாட்டு தலங்களை பாதுகாக்க போதுமான சட்டங்கள் மத்திய, மாநில அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோவிலை யாருக்காவது விற்பது சட்டப்படி செல்லாது. இந்துக்கள் வழிபட அனுமதி மறுத்த தாசில்தார், அத்துமீறி கோவிலுக்குள் சென்று இந்துக்களை கேவலப்படுத்தி மனம் புண்படுத்திய பாதிரி ஜேம்ஸ் ஆல்பிரட் ஆகியோர் மீது காவல்துறை கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல் அமைச்சர் கருணாநிதி, தலையிட்டு உடனடியாக இந்துக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியுள்ளான்.
நன்றி:நக்கீரன்.
பாபர் மசூதி இடிக்கும் போது எங்கே போச்சு இந்த பேச்சு.தனக்கு ஒரு நீதி மத்தவங்களுக்கு ஒரு (அ) நீதி!காவி ஓனாய்களே காலம்பதில் சொல்லும் ஒவ்வொரு வில்லங்கச்செயலுக்கும் விலை உண்டாகும் .அன்றுத்தெரியும் .அரசன் அன்று கொல்வான்.அரசெற்கெல்லாம் அரசன் இறைவன் நின்று கொல்வான்.
crown
crown

crown

1 கருத்து:

  1. பாம்பு(இந்து முன்னனி ....) விசமிக்கது என்று சொல்லவேண்டியதில்லை என்றாலும்,அது இருப்பதை நினைவூட்டும் எச்சரிக்கை செய்வது சரியே! அதேயே உங்கள் கட்டுரை சுட்டிகாட்டுகிறது.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.