Breaking News
recent

நான்காம் தமிழின் தந்தை தேனீ உமருதம்பிக்குமரியாதை செய்யுமா தமிழுலகம்?

தமிழ்மொழி இன்று இணையத்தில்தான் அதிக அளவில் வளர்ந்து வருகிறது; அதில் முத்தமிழும் சேர்த்தே வளர்கிறது!
இணையத்தமிழைத்தான் நான்காம் தமிழ் என அழைக்கிறோம்!
நான்காம் தமிழ் உருவாக்கத்தின் வளர்ச்சிக்கு,தன‌து உடல் நலனையும் பொருட்படுத்தாது தன்னை முழுமையாக அர்பணித்தவர்தான்
நான்காம் தமிழின் தந்தைதான்  தேனீ உமர்தம்பி அவர்கள்!

சிறு பொருளையும் காசாக்கும் உலகில், தமிழ் மேல் கொண்டபற்றால் தனது கண்டு பிடிப்பை இலவசமாக தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கி  மறைந்தும், மறையாமலும் இருகிறார்கள் நான்காம் தமிழ் தந்தை உமர்தம்பி அவர்கள்;
செத்தும் கொடை கொடுத்த சீதாக்காதி அவர்களுக்கு பின் தமிழ் இணைய சீதக்காதி!

முத்தமிழ் அறிஞர், காவலர்,காதலர் கலைஞர் அவர்கள் ஆட்சியில், அவர்கள் நடத்தும் தமிழ் செம்மொழி மாநாட்டில் நான்காம் தமிழின் தந்தை  தேனீ உமர்தம்பி அவர்களை  கவுரவிப்பது பொருத்தமான ஒன்று!

கலைஞர் அவர்களே!

இதனை நீங்கள் செய்யாவிட்டால் யார் செய்வார்கள்?
நீங்கள் அரசியல்வாதி, முதல்வர் மட்டுமல்ல;முத்தமிழ் தமிழறிஞர்!
ஆட்சி பீடத்தை விடவும், தமிழ் காதலன்!


கலைஞர் அவர்களே!

உங்கள் இளமை காலத்தில் அதிராம்பட்டினத்திற்கு அடிக்கடி வருவீர்களாம்;உங்கள் அதிரை நன்பர்கள் சொல்லக்கேட்டதுண்டு.

அதிரைவாசிகளின் தமிழ் மேல் உங்களுக்கு ஒரு ஈர்ப்பு!

"உங்கள் தமிழ் உச்சரிப்பு அழுத்தமானவை;அழுகிய வார்த்தைகளை; கோபத்தில் கூட நல்ல வார்த்தைகள் உபயோகப்படுதுகிறீர்கள்" என்பதெல்லாம் உங்கள்  வார்த்தைகள்.

அன்று எங்கள் தமிழ் உச்சரிப்புகளுக்கு வாழ்த்து சொன்னீர்கள்....

இன்று அதே அதிரையின் தவப்புதல்வன்,நான்காம் தமிழ் தந்தை தேனீ உமர்தம்பி அவர்களுக்கு நீங்கள் நடத்தும் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி அங்கிகாரம் தருவீர்கள் என நாங்கள் அழுத்தமாக நம்புகிறோம்.
Unknown

Unknown

2 கருத்துகள்:

  1. உமரு என்ற உத்தமர்
    உருவாக்கிய தேனீ எழுத்துக்கள்
    கணினி உலகில் தமிழின் தலையெழுத்தை எழுத உதவியது.
    ஆதாயம் தேடும் உலகில் தமிழுக்காய் ஊதியம் பெறாமலே உழைத்த தேனீ அவர்.
    புகழெல்லாம் படைத்தவனுக்கே சொந்தம் என்பதனால் ..
    இதன் புகழ் தமக்கு சொந்தமில்லை யென்பதைச் சொல்லாமல் சொன்னவர்.
    அதிரையின் மேல் பலத்திரை வீழ்ந்திருக்க,
    அத்திரை விலக நல்லவை செய்தவர் நீங்கள்.
    எல்லாப்புகழும் அல்லாஹுக்கே உங்கள் எழுத்தை கொண்டே நாங்கள் செய்திட்ட நல்ல சொல் ஆக்கங்களுக்கு ஆகிரத்தில் உங்களுக்கு சுவனப்பதவித்தர வேண்டுகிறோம்.
    MohamedThasthageer

    பதிலளிநீக்கு
  2. உமர் தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் தந்தால் அது சரியான - உரிமையுள்ள செயல்தான்,கோரிக்கைதான் தவறில்லை.தன்னலம் பாராமல் உழைத்த, அவர் கண்டுபிடித்த அந்த எழுத்துரு மூலம் இன்ஷா அல்லாஹ் எண்ணற்ற பலர் இஸ்லாம் பற்றிய செய்தியை எழுதும்போது அந்த சகோதரருக்கும் நன்மை கிடைக்கும்,அல்ஹம்துலில்லாஹ்.
    கட்டுரை நன்றாக எழுதப்பட்டுள்ளது.ஆனால் கருணாநிதியை இப்படி போற்றி எழுதியதைக் கண்டு,அசிங்கமாக இருக்கிறது.இதற்காக வேண்டி,இப்படி ஐஸ் வைப்பது சரியல்ல.அதிரை போஸ்ட் திருத்திக்கொள்ள்வேண்டும்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.