சென்னைத்தமிழர் , இனிய நண்பர் ,ஜித்தா நகரத்து நெடுநாளைய வாசி,பன்னாட்டுப் பள்ளியில் பொறுப்புகள் வகித்தவர்,குழந்தை நல மருத்துவர் டாக்டர் கரீமுத்தீன் அவர்களுக்கு இவ்வளுவு பெரிய
விருது கிடைத்தது அறிந்து ஆச்சரியமும் -ஆனந்தமும் கைகுலுக்க அவரின் இல்லம் நோக்கி JTS அன்பர்கள் விரைந்து சென்று வாழ்த்தி வந்தோம்.
இந்த புகைப்படம் எங்கள் பார்வைக்கே கிடைக்கும் முன்னர் செய்தியுடன் துரிதமாக adiraipost -ல் பகிர்ந்த
முதுவை ஹிதாயத் தங்களக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.
வெளிநாட்டில் வாழும் இந்தியருக்கு வழங்கப்பட்டுள்ள 'பிரவாசி அவார்டு ' மிக பிரம்மாண்ட ஏற்பாட்டுடன் குடியரசுத்தலைவர் ,பிரதமர் .அமைச்சர்கள் மற்றும் வெளிநாட்டு வேந்தர்கள் புடை சூழ
தங்கப் பட்டயமும் - சான்றிதழுடன் வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் அவர்கள் மற்ற நாட்டினருடன் உரையாடிய சில விசயங்களை நாம் உங்களுடன் பகிர்வதில் அக மகிழ்கின்றேன்.'சீனா மற்றும் ஜப்பான் போன்ற குடும்பக் கட்டுப் பாட்டுத் திட்டத்தை வெகுவாக கடை பிடிக்கும் நாடுகளில் பிந்திய காலத்தில் குழந்தைகள் - மாணவர்கள் தட்டுப் பாடு வருமாம். தொழிற் சாலைகளில் லேபர் பிரச்சினை வருமாம். மானர்வகள் பயில் வதே ஆன் லைனில் தான் ,கல்விக்கூடங்கள் மூடப்படும், எதிர் காலத்தில் இந்தியா தான் நல்ல சந்தையாகும் என வல்லுனர்கள் கூறுகிறார்களாம்.உணர்சிப்பொங்க மருத்துவரின் கையை இருகப்பற்றினேன்.
.தமிழ் தழைக்க வேண்டும்!இஸ்லாமியனின் இன்னல்கள் ஒழியவேண்டும்!!உலக அரங்கிலே இந்தியா உயரவேண்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்