Breaking News
recent

இதழியல் பாடம் 02 ARH

ஆதித்தனாரின் பத்து கட்டளைகள்:

1. சிறு சிறு வாக்கியமாக எழுதுங்கள்.
2. எழுத்தில் எளிய சொற்களே இருக்கட்டும்.
3. புரியும் சொற்களில் மட்டுமே எழுதுங்கள்.
4. தேவையற்ற சொற்களை கட்டாயமாக நீக்குங்கள்.
5. வாசகர்களைக் கவரும் வகையில் சொற்களில் துடிப்பு இருக்க வேண்டும்.
6. வாசகர்களுடன் நேரில் பேசுவதுபோல எழுதுங்கள்.
7. படம் பார்ப்பது போன்று உங்கள் எழுத்து இருக்க வேண்டும்.
8. உங்கள் எழுத்து வாசகர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.
9. உங்கள் எழுத்தில் தரம் இருக்க வேண்டும்.
10. வாசகர்களுக்கு விளக்குவதற்காக எழுதுங்கள்.

ஆதித்தனாரின் இந்த பத்து கட்டளைகளையும் தினத்தந்தியில் சேரும் பயிற்சி நிரூபர்களுக்கும் உதவி ஆசிரியர்களுக்கும் முதல் நாளிலேயே ‘நம் ஆசிரியர் ஆதித்தனாரின் பத்து கட்டளைகள்’ என்று தலைப்பிட்டு தன் கைப்படவே எழுதிக் கொடுப்பாராம் செய்தி ஆசிரியர்.

ஆதித்தனாரின் இந்த 'எளிய எழுத்து' இலக்கணம்தான் தினத்தந்தியை இன்றும் வெற்றி நடை போடவைக்கிறது. சாதாரண டீக்கடை முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை அனைத்து இடங்களிலும் தனது செய்திகளால் நிரப்புகிறது.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்...

இதழியல் பாடம் 01 ARH

Unknown

Unknown

4 கருத்துகள்:

  1. தொடரவும்...

    ஆதித்தனாரின் கருத்துப்படியே...

    ஒவ்வொரு பாடமும் சுருக்கமாக எளிமையாக இருக்கிறதே !

    பதிலளிநீக்கு
  2. ஆதித்தனாருடைய கருத்தெல்லாம் நமக்கு தேவை இல்லை

    பதிலளிநீக்கு
  3. //ஆதித்தனாருடைய கருத்தெல்லாம் நமக்கு தேவை இல்லை//

    இந்தக் சிறு குறிப்புக் கட்டுரையைத்தான் சொன்னேன் அதனை முன்னுதாரனமாக தொடவரவல்ல !

    பதிலளிநீக்கு
  4. ஆதித்தனார் ஊடகத்துரையில் பழம் தின்று கொட்டை போட்டவர் என்றாலும் ஒருவனின் அடிமை சொல்வதுபோல் அவர் கருத்து அப்படி ஒன்றும் சிறந்தவையாகவோ வழிகாட்டுதலாகவோ எனக்கும் தோன்றவில்லை.

    இதழியல் இன்டெரெஸ்டிங்காகவே தொடர்கிறது. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.