Breaking News
recent

ரமழானின் இலக்குகளை இலகுவாக அடைந்து கொள்ள எளிய வழிமுறைகள். ஷெய்க் உஸ்தாத் மன்சூர்


ரமழானின் இலக்குகளை இலகுவாக அடைந்து கொள்ள எளிய வழிமுறைகள்

-ஷெய்க் உஸ்தாத் மன்சூர்-

அருள் நிறைந்த ரமழானிலிருந்து எவ்வாறு சிறந்த பயன்பெற முடியும்? என்பதற்கான ஒரு திட்ட மாதிரியை முன்வைக்க இங்கு முயல்கிறோம். வணக்க வழி பாடுகளில்ஆழ்ந்த ஈடுபாடும், இஸ்லாமியப் போக்கில் ஆழ்ந்துள்ளோரை கவனத்திற் கொண்டு இது வரையப்படவில்லை. சாதாரண முஸ்லிம்களே இங்கு கவனத்திற் கொள்ளப்படுகிறார்கள்.

ரமழான் முடிந்ததன் பின்னர் நாம் என்ன இலக்கை அடையப் போகிறோம் என்பது முக்கியம். எனவே, கீழ்வருமாறு எம் திட்டத்தை வரைகிறோம்.

இலக்கு:

பெரும் பாவச் செயல்களிலிருந்து விடபட்டு இறையச்சமுள்ள இஸ்லாமியப் போக்குள்ளவராக மாறல்.
(பெரும்பாவச் செயல்கள் என்பது தொழுகையில் கவனயீனம், பெருமை, பொறாமை, போன்ற வற்றையும் குறிக்கும் என்பதை கவனத்திற் கொள்க.)

இதன் நோக்கங்கள்

                1.            தொழுகைகளில் நல்ல ஈடுபாடு
                2.            அல்குர்ஆனுடனான தொடர்பு
                3.            பாவமன்னிப்புக் கேட்பதை பழக்கமாகக்கொள்ளல்
                4.            இஸ்லாத்தை நன்கு தெளிவுற அறிந்து கொள்ளலில் ஈடுபாடு    காட்டல்
                5.            ஆன்மீகத் தர்பிய்யத்தை தொடர்ந்து பேணல்

நோன்பு முடிந்ததன் பிறகும் மேற்கூறிய ஐந்து நிலை களையும் பேணிவரல்.

நோக்கங்கள் பற்றிய விளக்கம்

அல்குர்ஆனுடனான தொடர்பு:
             -              ஒவ்வொரு நாளும் அல்குர்ஆனின் இரண்டு பக்கமேனும் ஆரம்பத்திலிருந்து ஓதிவரல்
                -              அல்குர்ஆன் விளக்க நூல்கள் (தப்ஸீர்), அல்குர்ஆன் பற்றிய நூல்களை படித்தல்
                -              அல்குர்ஆன் விளக்க வகுப்புகளுக்குச் செல்லல்
                -              நல்ல காரிகளின் கிராஅத்களுக்கு செவிமடுத்தல்

பாவமன்னிப்புக் கேட்பதை பழக்கமாகக் கொள்ளல்

-              ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் பாவமன்னிப் பில் ஈடுபடல்.
               (உ-ம்: ஐந்து நேரத்   தொழுகைகளில் ஒரு நேரமாவது)

இஸ்லாத்தை நன்கு தெளிவுற அறிந்து கொள்ளலில் ஈடுபாடு காட்டல்

-              இஸ்லாம் பற்றிய நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகளை வாசித்தல். இஸ்லாம்  
                பற்றியநூல்கள் உள்ளடக்கிய சிறிய ஒரு வாசிகசாலையை உருவாக்கிக் கொள்ளல்

-  இது பற்றிய வகுப்புக்களுக்குச் செல்லல்

ஆன்மீகத் தர்பிய்யத்தை தொடர்ந்து பேணல்

                -              மாதம் ஒரு முறையேனும் நோன்பு பிடித்தல்.அந்த நாளில் ஒரு சிறிய நேரமேனும் (15-20 நிமிடங்கள்) தஹஜ்ஜத் தொழல், பாவமன்னிப்பு கேட்டல். அத்துடன் முழு நாளும் மிகுந்த பக்குவமாக இருத்தல்.

தொழுகைகளில் ஈடுபாடு

                -              எத்தொழுகையும் தவறிவிடாது மிகுந்த கவனமாக இருத்தல். இதற்காக சுருக்கி, 
                               சேர்த்துத் தொழல், தயமும் போன்ற தொழுகையில் சலுகை தரும் 
                                சட்டதிட்டங்களை நன்கு விளங்கி இருத்தல்.

                -              ஜமாஅத் தொழுகையை முடிந்தளவு பேணல்.சுபஹுத் தொழுகையை ஓரிரு
                               முறையாவது ஜமாஅத்தோடு தொழல்.

நோன்புத் தர்பிய்யத்தின் இலக்கு இதுவே. இந்த இலக்கை எப்படி அடையலாம்? என்பதற்கான வழி முறை கீழே தரப்படுகின்றது.

நோக்கங்களை அடையும் வழிமுறைகள்

1.            இலக்கை தெளிவாக எழுதி தொங்கவிடுதல்
               இலக்கை நன்கு தெளிவாக எழுதி அதிகமாக கண்ணுக் குப் படுமிடத்தில் வைக்க வேண்டும்.

உ-ம்: கீழ்வருமாறு எழுதலாம்.

                (அ)  தொழுகையில் நல்ல ஈடுபாடுள்ளவனாக நான் மாறுவேன்.
                (ஆ) பாவமன்னிப்புக் கேட்பதை என் பழக்கமாகக் கொள்வேன்.

இப்படி அனைத்தையும் எழுதி ஒவ்வொரு நாளும் மனதில் பதிவதற்கு பார்த்து வாசிக்க வேண்டும்.

2.            உறுதியான எண்ணம் கொள்ளல்:
உள்ளத்தின் ஆழ்ந்த விருப்பமாக இதனைக் கொள்ள வேண்டும். முதலில் விளக்கப்பட்ட பகுதி அதனையே சொல்கிறது.

3.            பிரார்த்தனை:
இந்தக் குறிப்பிட்ட இலக்குகளை அடையச் செய்யு மாறு திருப்பித் திருப்பி மிகுந்த மன உருக்கத்துடன் பிரார்த்தித்தல் குறிப்பாக:
                -              நோன்பு துறக்கும் நேரத்தில்
                -              தஹஜ்ஜுத் தொழுகையின் பின்னர்
                -              லைலதுல் கத்ர் எனக் கருதப்படும் நாட்கள்

(இறுதிப் பத்தின் ஒற்றைப்பட வரும் நாட்கள்)
பொதுவாக நோன்புடன் இருக்கும் காலை முதல் மாலை வரை உள்ள நேரங்களில்

4.            பாவமன்னிப்பு:

நோன்பு துவங்கியதிலிருந்து பாவமன்னிப்புக் கேட் பதில் மிகுந்த கவனம் செலுத்தல். (இதற்காக நாம் ஏற்கனவே குறிப்பிட்ட நேரங்களைப் பயன்படுத் தலாம்.) பிரார்த்தனையின் ஒரு பகுதியாக பாவமன்னி ப்பு அமையும்.

5.            நம்பிக்கையை உறுதிப்படுத்தல்: குறிப்பாக இறை நம்பிக்கை மறுமை நாள் நம்பிக்கை.

கீழ்வரும் நூல்களை ஆழ்ந்து வாசித்தல், படித்தல்

                1.            இறைவன் இருக்கின்றான் - யூஸுப் அல்கர்ழாவி
                2.            மரணத்திற்குப் பின் - அபுல் அஃலா மௌதூதி
                3.            ஜுஸ்உ அம்மவைப் படித்தல் – அல்குர்ஆனின் நிழலில்                                                         
                                ஸையத் குதுப்
                4.            திருமறையின் தோற்றுவாய் -அபுல் கலாம் ஆஸாத்

மேற்குறிப்பிட்ட ஐந்து விடயங்களையும் நன்கு கவனத்திற்கொண்டதன் பின்னர் நோன்பின் விஷேட வணக்கங்களை பயனப்டுத்துவதற்கான திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம். அதற்கான ஆலோசனைகள் சில கீழே தரப்படுகின்றன.

நோன்பின் விஷேட வணக்கங்கள்

-              தராவீஹ் தொழுகை:

இது உண்மையில் தஹஜ்ஜுத் அல்லது கியாமுல் லைல் தொழுகையேயாகும். இலகு படுத்தலுக்காக இஷாவின் பின்னர் நோன்பு காலத்தில் இது ஆக்கப்பட் டுள்ளது. இயன்றளவு ஜமாஅத்தாக தொழப்படும் இத் தொழுகையில் கலந்து கொள்வதோடு முக்கியமாக வீட்டிலே தனது சக்திக்கேற்ப தனியாக தொழும் விட யத்திலும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.

இது ஸஹருக்கு முன்னர் எழுந்து 1/2 - 1 மணிநேரம் தொழல் சிறந்தது. இந் நிலையில் ஜுஸ்உ அம்ம விலுள்ள சிறிய ஸுராக்களை படித்து, பொருள் விளக் கம் பார்த்து, மனதில் கொண்டு ஓதித் தொழல்.

அப்பொழுது பாவமன்னிப்பு, பிரார்த்தனை என்ப வற்றைச் சேர்த்துக்கொள்ளல். முதலாம் நோன்பிலிரு ந்து விடுபடாமல் மிகுந்த கரிசனையுடன் இதனைச் செய்து வர முடியுமானால் நிச்சயமாக இது மேற்குறிப் பிட்ட இலக்கை அடைவதில் பெரும் பங்களிப்பு செய்யும்.

இஃதிகாப்:

தொடர்புகளை நிறுத்திக் கொண்டு பள்ளியில் தரித்து இறை சிந்தனை, திக்ர் போன்ற வணக்கங்களில் ஈடு படல் என்பதே இதன் பொருள்.
கட்டாயம் ஒரு முழுநாள் அல்லது குறிப்பிட்டளவு நேரம் கழிக்க வேண்டும் என்ற ஷர்த்து இதற்குக் கிடை யாது. எனவே, நோன்பு ஆரம்பத்திலிருந்து குறிப் பிட்ட வசதியான நேரத்தையாவது பள்ளியில் கழித் தல்.

இதன்போது, இறை சிந்தனை, பாவமன்னிப்புக் கேட்டல், பிரார்த்தனை, திக்ர் போன்றவற்றில் ஈடுபடல்.

இறுதிப் பத்து இரவுகள்

“‘லைலதுல் கத்ர்” என்ற மகத்தான இரவு, இப் பகுதியிலேயே இருப்பதனால் விஷேடமாக இந் நாட்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும். ஒரு நாளாவது இஃதிகாப் இருக்க முயலல் அல்லது ஒவ் வொரு நாளும் ஒரு மணி நேரம் அல்லது சில மணி நேரங்கள் இஃதிகாப் இருத்தல்.

ஸதகா செய்தல்

இது இம்மாதத்தின் விஷேட இலக்குகளில் ஒன்று. முடிந்த ஒரு தொகையை இதற்கென தனியாக ஒதுக்கி ஒவ்வொரு நாளும் அல்லது குறிப்பிட்ட சில நாட் களில் ஸதகா செய்து வர வேண்டும். மேலே குறிப்பி ட்ட நிய்யத்துடனேயே இதனையும் செய்ய வேண்டும்

அல்குர்ஆன் ஓதல்

மெதுவாகவும், அழகாகவும் ஓதினால் எவ்வளவு ஓத முடியுமோ அவவ்ளவே ஓத வேண்டும். ஒவ்வொரு

நாளும் இதற்கென 1/2 மணி, 15 நிமிடம் அல்லது எப்படியோ தனக்கு வசதியான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

இஸ்லாம் படித்தல்:

மேலே குறிப்பிட்ட படி அல்குர்ஆனைப் படித்தல். நம் பிக்கையை பலப்படுத்திக்கொள்ள படித்தல் என்பது தவிர இஸ்லாத்தைப் பற்றிப் பொதுவாகப் படிக்க குறி ப்பிட்ட நேரத்தை ஒதுக்கல். கீழ்வரும் அறிஞர்களின் நூல்களைப் படித்தல் மிகவும் பிரயோசனமானது.
                - மௌலான அபுல் அஃலா மௌதூதி
                - மௌலான அபுல் ஹஸன் அலி நத்வி
                - ஷைய்க் யூஸுப் அல் கர்ழாவி
                - ஷைய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி
                - ஷஹீத் ஸையித் குதுப்
போன்ற இன்னும் பல அறிஞர்களது நூல்கள்.

கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிவுறுத்தல்கள்:

1.            மேற்குறிப்பிட்ட விடயங்களைச் செய்வதற்கு நேரத் தைப் பிரித்து ஒரு நேரசூசியை அமைத்துக்           கொள்ளல் வேண்டும். தொழிலிலிருந்து சற்று லீவு பெற முடியுமா? எனவும் இங்கே யோசிக்க வேண்   டும். நோன்புக்கு இரண்டொரு நாட்கள் முன்ன    தாகவே இந்த நேரசூசி தயாராகி விட வேண்டும்.

2.            தரத்திற்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தொகைக்கு அல்ல என்பதை நன்கு மனதில் கொள்ள வேண்டும்.
எத்தனை ரக்அத், எத்தனை ஜுஸ்உ என்பதை விட எவ்வளவு உயிரோட்டமாக, தரமாகத் தொழுதேன் என்பதே முக்கியம்.

3.            கூட்டத்தோடு செய்வது ஒரு புறமிருக்க எனக்குத்   தனியாக செய்யும் வணக்கங்கள் மிக முக்கியம் என்    பதையும் மிகவும் கவனத்திற் கொள்ள வேண்டும்.

4.            ஒவ்வொரு முஸ்லிமும் தனது தற்போதைய நிலை      பற்றிய சிறந்த கணிப்பீட்டுடனேயே திட்டமிடலை      ஆரம்பிக்க வேண்டும்.

பிரார்த்தனையோடும், ஆழ்ந்த மன உறுதியோடும் ஆரம்பிப்போம்...
இந்த நோன்பு எமக்கு வெற்றிகரமாக அமையும் இன்ஷா அல்லாஹ்...
Unknown

Unknown

1 கருத்து:

  1. மதிப்புக்குரிய எனது ஆசானின் தர்பிய்யத் கட்டுரை மிகுந்த பிரயோசனமயுள்ளது இன்ஷா அல்லா இதன் படி நடக்க வல்ல அல்லா அருள் புரிவானாக ஆமீன்

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.