Breaking News
recent

tamil.thehindu.com இன்று உதயமானது தி இந்து தமிழில்...

இன்று 16-09-13 முதல் தி இந்து தமிழ் நாளிதழ் உதயமானது அதன் இணைய சுட்டிhttp://tamil.thehindu.com/

த இந்து நாளிதழ் பற்றி சில தகவல்கள்:

த இந்து அல்லது த ஹிந்து (The Hindu) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தித்தாள் தினம் சுமார் பதினான்கரை லட்சம் 14.5 பிரதிகள் விற்பனையாகிறது.

இச்செய்தித்தாளை பதிப்பிக்கும் இந்து குழுமம், கஸ்தூரி அன் சன்ஸ் என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும், படிப்பவர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.


இந்து செய்தித்தாள் முதன் முதலாக செப்டம்பர் 20, 1878 இல் வெளியானது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு முதன் முதலில் இந்தியர் ஒருவர் நியமிக்கப் பட்டதைக் கண்டித்து பிரிட்டிஷ் ஆதரவு ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. 

இதனால் கோபமடைந்த திருவல்லிக்கேணி இலக்கிய வட்டத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், இந்தியர்கள் கருத்தை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டுமென முடிவு செய்தனர். ஜி. சுப்ரமணிய ஐயரை ஆசிரியராகக் கொண்டு தி இந்து என்ற செய்தித்தாளைத் தொடங்கினர். 

ஆரம்பத்தில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஒரு வார இதழாகவே இந்து வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிக்கைகளை கண்டித்து எழுதினாலும், ஆங்கில அரசை வெளிப்படையாக எதிர்க்காமல் பாராட்டி செய்தி வெளியிட்டது. 1883 முதல் வாரம் மும்முறை வெளியாகத் தொடங்கியது.

1887 இல் சென்னையில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்தர மாநாடு நடந்தது. அதிலிருந்து இந்துவில் தேசிய அரசியல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கின. 1898 இல் சுப்ரமணிய ஐயர், இந்துவிலிருந்து விலகி வீரராகவாச்சாரியார் உரிமையாளரானார். 

1900 களில் இந்துவின் விற்பனை குறைந்து நிதி நெருக்கடி உண்டானது. 1905 ஆம் ஆண்டு வீர்ராகவாச்சாரியார் இந்துவை கஸ்தூரிரங்க அய்யங்காரிடம் விற்று விட்டார். அன்று முதல் இன்று வரை கஸ்தூரிரங்க அய்யங்காரின் குடும்பத்தினரே இந்துவை நிர்வகித்து வருகிறார்கள்.

தி இந்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாள்தோறும் வெளியாகத் தொடங்கியது. 1910 களில் அன்னி பெசன்ட் அம்மையாரின் சுயாட்சி போராட்டத்திற்கு இந்து ஆதரவளித்தது. நீதிக்கட்சியின் தலைவர்கள் டி. எம் . நாயர், தியாகராய செட்டி ஆகியோர்,சட்டமன்றத்தில் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரிய போது இந்து அதை கடுமையாக எதிர்த்தது. 

இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும் பிரிட்டிஷ் அரசுக்குஎதிராகவும் செய்திகளை வெளியிட்டது. 1948 இல் முதல் பக்கத்தில் முழு விளம்பரம் பிரசுரிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டு மறுவடிவம் செய்யப்பட்டது. 

1995 முதல் இணையத்திலும் வெளிவரத் துவங்கியது. 1965 முதல் 1993 வரை ஜி. கஸ்தூரியும், 1993 – 2001 இல் என். ரவியும் இந்து குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தனர். 2003 முதல் என். ராம் இந்துவின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை ஆசிரியராகவும் இருக்கின்றார்.

த இந்து குழுமம் வெளியிடும் மற்ற இதழ்கள்
  • பிசினஸ் லைன் (பொருளியல் மற்றும் வணிக இதழ்)
  • இந்து சர்வதேசப் பதிப்பு (வார இதழ்)
  • ஸ்போர்ட்ஸ்டார் (விளையாட்டு செய்திகள் வார இதழ்)
  • ஃப்ரன்ட்லைன் ( மாதம் இருமுறை வெளியாகும் அரசியல், சமூக இதழ்)
  • ப்ராக்சிஸ் (மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் மேலாண்மை இதழ்)
  • எர்கோ இணைய இதழ்
  • த இந்து தமிழ்

தொகுப்பு: முகமது ரிஃபாத்

Unknown

Unknown

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.