தமிழ்நாடு முழுவதும் சீட்பெல்ட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்: ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ.

மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னையில் கார்களில் பயணம் செய்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை கண்டிப்புடன் கடைபிடிக்கப் போவதாக அறிவித்த காவல்துறையின் முடிவை வரவேற்கிறேன்.
சீட்பெல்ட் அணியும் விதிமுறையை சென்னை மாநகர காவல்துறையினர் கட்டாயமாக செயல்படுத்த முன்வந்திருப்பது போல் தமிழகம் முழுவதும் இச்சட்டத்தை அமுல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இதன்மூலம் கார் விபத்துகளில் இறப்போரின் எண் ணிக்கை பெரும் அளவில் குறையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில்  எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் சிக்கி உயிர்தப்பினார். அப்போதும் சீட் பெட்டை வலியுறுத்தினார்.
Unknown

Unknown

Related Posts:

1 கருத்து:

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.