Breaking News
recent

அதிரையில் வறண்டு கிடக்கும் குளங்களுக்கு நீர் நிரப்ப அதிமுகவினர் களம் இறங்கினர்!

அதிரையில் வறண்டு கிடக்கும் குளங்களுக்கு நீர் நிரப்ப அதிரை அதிமுகவினர் களம் இறங்கினர். மிலாரி காடு, வள்ளியம்மை நகர், CMP வாய்கால் வழியாக அதிரையின் பெரும்பாலாண குளங்களுக்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 
மேலும் அதிரையின் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டுவரும் முயற்சியாக நமது மாவட்ட அமைச்சர் அவர்களை தொடர்ந்து தொடர்புக் கொண்டு வருகின்றனர்.
அதிரை அதிமுக நகர நிர்வாகிகள், அதிரைக்கு தண்ணீர் வரும் ஆறுகளில் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் களத்தி இறங்கி அவர்கள் அடைப்புகளை அப்புறப்படுத்தும் காட்சிதான் இவைகள்! 
















Unknown

Unknown

3 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அழைக்கும்,
    பலரின் முயற்சியால் தண்ணீர் கொண்டுவரும் பணி அதி வேகமாக நடைபெறுகின்றது வாழ்த்துக்கள்... முயற்ச்சி செய்த அனைவருக்கும் என்றென்றும் வாழ்த்துக்களுடன்... துஆ வும் ஆமீன்..

    பதிலளிநீக்கு
  3. அதிரை சேர்மனுடன் தன்னார்வலர்களும் இணைந்து அதிரையின் வாழ்விழந்த நீர் நிலைகளுக்கு வாழ்வளிக்கும் முயற்ச்சியை மேற்கொண்டு வருவது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றுதான் இதில் நமதூர் மக்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான் இருப்பினும் நமதூர் அதிமுகவினர் அவசர அவசரமாக இரவு நேரத்தில் வறண்ட குளங்களுக்கு வாழ்வளிக்க முனைந்துள்ளது ஏன் இந்த சிறப்புமிக்க வேலையை செய்தால் அவர்களுக்கு நல்லபெயர் கிடைக்கும் இதனால் அவர்கள் நல்ல பெயர் வாங்கி விடுவாரகள் என்றா?
    தயவு செய்து இன்னும் எவ்வளவோ வேலைகள் இருக்கு அத செய்யுங்க நன்மையா முடியும் அத விட்டுட்டு சேர்மன் எது செய்தாலும் நாங்களும் கச்ச கட்டிட்டு நின்னு பேரு வாங்க நினைக்காதீங்க. அடுத்தவன் பெத்த புள்ளைய என் புள்ளைன்னு சொல்லுற்றதுக்கு சமம்.

    ஊர் நிலவரம் தெரியாத அதிமுகவினருக்கு சில வேலைகள் உண்டு கீழ்காணுபவற்றை போராடி பெற்று தாங்க.

    1. செல்லியம்மன் கோவில் அருகில் உள்ள சமுதாய நலகூடத்தில் இஸ்லாமியர்களும் அவர்களது சடங்குகளை நடத்த அனுமதி வாங்கி தாங்க .

    2. அதிரையில் குண்டும் குழியுமான சாலைகளை செப்பனிட்டு தாங்க.

    3.அரசு மருத்துவ மனையில் 24 மணி நேர சேவை செய்திட உத்தரவு வாங்கி தாங்க .

    4.அம்மா உணவகம் கொண்டு வாங்க.

    5.அம்மா குடிநீர் கொண்டு வாங்க.

    6.பாதாள சாக்கடை திட்டம் என்னாச்சு ?அத கொண்டு வாங்க.

    7.கடைதெரு ரோடு சி எம் பி லைன் ரோடு என்னாச்சு?அத கொண்டு வாங்க

    8.இலவச ஆடு மாடு என்னாச்சு? அத வாங்கி தாங்க

    9.முதியோர் ஓய்வுதிய திட்டத்தின் கீழ் எத்தனை முதியோருக்கு இத்திட்டத்தின் படி சிபாரிசு செய்துள்ளீர்கள் அத செய்யுங்க .

    10.எல்லாத்தையும் விட கடந்த முறை வாக்குறுதி கொடுத்த விலையில்லா பொருட்கள வீடு வீடா சப்ளை பண்ணுக .

    இவ்வளவு வேலைகளையும் விட்டுபுட்டு யாரையோ கொளைசெய்துப்புட்டு இரவோடு இரவா புதைகிறது மாதிரி அவ்வளவு ஏன்னா அவசரம்.

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.