அதிரை எக்ஸ்பிரஸ்,அதிரை போஸ்ட் இரட்டை இரட்டைக்குழல் துப்பாக்கி!


அதிரை எக்ஸ்பிரஸின் இந்த பதிவிற்கு பிறகே
சில வரிகளை முன் வைக்கிறோம்!

அதிரை எக்ஸ்பிரஸ்(Xpress) அதிரையின் மூத்த தளம்-
அதிரை போஸ்டை முன்னிலைப்படுத்தி, ஊக்கப்படுத்தி வழி நடாத்தியவர்கள் என்ற மதிப்பும் மரியாதையும் அதிரை போஸ்டிற்கு உண்டு;
அது என்றும் இருக்கும்!
நாம் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயல்படுவோம்!!

அதிரையில் மாற வேண்டிய-மாற்ற வேண்டிய விடயங்கள் கணக்கில் அடங்கா!
சில நேரங்களில் சில(ர்)துகள் விளையாடுகிறார்கள்; அதை இரு தளங்களுமே ஒன்று சேர்ந்து முறியடிப்போம்!!

நமக்குள் நட்பையும், அன்பையும், சகோதரத்துவத்தையும் எப்போதுமே பரிமாறிக்கொள்வோம்!
இன்னும், பல செய்திகளில், கூட்டு முயற்சியில் வெளியிடுவோம்!!

அதிரையின் தவிற்க முடியாத ஊடகமாக நாம் மாறவேண்டியது காலத்தின் கட்டாயம்!

அதிரை எக்ஸ்பிரஸ் எப்படி ஒரு கூட்டு முயற்சியோ அதுபோலவே, அதிரை போஸ்ட்டும் ஒரு கூட்டு முயற்சியே!

தனி நபர் தளமல்ல; அதிரை போஸ்ட் தனி நபர் தளம் போன்று
ஒரு தோற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள்- சிலர்!

ஊடகம் என்னும் ஆயுதம் தனி நபர்களிடம்
சிக்குவது பெரும் ஆபத்து!!


ஆனால், யாரோ யாரையோ குளிர வைப்பதற்காகவும், சில்லரை(பணம்,பதவி,இத்யாதி...) பெறவும் இன்னார்தான் அதிரை போஸ்டின் நடத்துனர்- நிர்வாகி எனக்கு அவரைத்தெரியும் என சப்பு கொட்டி தங்லிஷில் இணைய அரட்டையில் வெளுத்து கட்டினர்!

(இப்போது இணைய அரட்டை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எங்குப்போய் முட்டிக்கொண்டு இருக்கிறார்களோ...?தெரியவில்லை!)

(அரட்டையை முழுமையாக நீக்க வேண்டும்;டிவிட்டர் பயனுள்ளதாக இருக்கும்-என்று அன்பு வேண்டுகோளை அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திற்கு வைக்கிறோம்)


மொத்தத்தில் அதிரை எக்ஸ்பிரஸ்,அதிரை போஸ்ட் இரட்டை இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக செயல் படவேண்டியது காலக்கடமை!
Unknown

Unknown

    3 கருத்துகள்:

    1. அநியாயம் கலைவதற்கும்,அநீதியை சுடுவதற்கும்.இரட்டைகுழல் துப்பாக்கியாய் மாறுவது சமூதாயத்திற்குள்ளேயே இருந்து சமுதாயதை சீரழுக்கும் சிலருக்கு அச்சுறுத்தவும் காலதத்தின் கட்டாயம்.வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு
    2. நன்மைக்கு ஒருவர்கொருவர் உதவியாக இருப்பது நல்ல செய்திதான். தொடரட்டும் உங்கள் பணி.

      பதிலளிநீக்கு
    3. ஒன்றே செய்தாலும் அதை நன்றே செய்க,இரட்டைக் குழல் துப்பாக்கி(களுக்கு) வாழ்த்துக்கள்.

      பதிலளிநீக்கு

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.