நடைபெற உள்ளாட்சித் தேர்தலில் அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக ஆதம்.செய்யத் அவர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
அதிரையின் பேரூராட்சி தலைவர் பதவிக்கு, யார் வரவேண்டும்? என்ற கேள்விகளுடன் கடந்த பத்து நாட்களாக அதிரை மக்கள் பலரையும் சந்தித்து கருத்து கேட்டுவருகிறோம்.
அந்த கருத்து கணிப்பில் 60 சதவிகிதம் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆதரவு இருப்பதையும் அதில் ஆதம்.செய்யத் அவர்களை அதிகமான மக்கள் முன்மொழிந்ததையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக ஆதம்.செய்யத் அவர்களை அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவித்திருந்தாலும் தேர்தல் அறிவிக்கும் பலநாட்களுக்கு முன்பாகவே, மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு, போட்டியிட்டு தலைவர் பதவியை கைப்பற்றி 50ஆண்டுகாலம் பின் தங்கியிருக்கும் அதிரை முன்னேற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் துஆவும் செய்து, பலர் அதிரையிலும் வெளிநாட்டில் வாழும் அதிரை சகோதர, சகோதரிகள் ஆர்வமுடன் பேசிவந்தார்கள் என்பதை இங்கு விரும்புகிறோம்!
நமது வேண்டுகோள்!
ஊர்,வெளியூர்,வெளிநாடு என வாழும் அதிரை சகோதர சகோதரிகளே!தமுமுக,மனிதநேய மக்கள் கட்சி முழுமையான சமுதாய சேவை இயக்கம் என்பதையும் அது சமுதாயத்தின் உரிமைகளுக்காக வீதிகள்,ஊடகம், சட்டமன்றம் என எல்லா இடங்களிலும் போர் குரலெழுப்பி வருகிறது என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.
நமதூர் கடந்த 50ஆண்டுகாலம் மிகவும் பிந்தங்கிய நிலையில் உள்ளது என்பதையும் அதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பதவியை கையப்படுத்தினால் முன்னேறும் என்பதையும் அறிவீர்கள். தலைவர் பதவியுடன் அதிக அளவிலான மன்ற உறுப்பினர்களையும் பெற்றால்தான் சிறப்பக பேரூராட்சி நிர்வாகத்தை நடத்த இயலும் என்பதை அறிவீர்கள்!
இவற்றை வெல்ல இப்போதைய தேவை துஆவும், பொருளாதாரமும்தான்.இந்த இரண்டையும் தாராளமாக அதிரை மனிதநேய மக்கள் கட்சிக்கு வழங்கி ஆதரவு கொடுங்கள்!!
அதிரையில் மாற்றம் தேவை!உங்களால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்!! இன்ஷாஅல்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்