அதிரை அல்அமீன் பள்ளியில் நான் பார்த்த அதிர்ச்சி!




இன்று(டிசம்பர்6) லுகர்தொழ அல் அமீன் பள்ளிவாசல் போனேன். ஒலு செய்துவிட்டு போவதற்குள் முதல் ரக்காஅத்தின் சஜ்தாவில் இருந்தார்கள். நான் சஃபில் இணையும் முன் நான் கண்ட காட்சி கடும் அதிர்ச்சியை தந்தது.

இரண்டாவது சஃபில் பாதியளவு நிறைந்திருக்க, அந்த சஃபில் இருவர் நிற்கும் அளவு இடமிருக்க ஒருவர் தள்ளி நின்று தொழுதுக் கொண்டிருந்தார். ஏன் தொழுக்கொண்டிருந்தவர் ஒலு முறிந்ததால், சென்றிருப்பாறோ...? அதான் இடம் காலி என்று நினைத்து பார்த்தபோதுதான் புரிந்தது. அவர் ஃபேன் இருக்கும் இடமாக பார்த்து நிற்கிறார். அதிர்ச்சி ஒரு பக்கம்;கோபம் மறுபக்கம்.

நானும் தொழுது முடித்து விசாரித்தபோதுதான் தெரிந்தது எப்போதுமே இவர் ஃபேன் பிரியர் என்று. அந்த பிரியத்தை "வீட்டில்" வைத்துக்கொள் வேண்டிதுதானே!
இதுப்பற்றி ஹதீஸ்:

உங்கள் ஸஃப்பை சீர்படுத்திக் கொள்ளுங்கள், நிச்சயமாக ஸஃப்பை சீர்ப்படுத்திக் கொள்வது தொழுகையை முழுமைப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஒன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்: (புகாரி, முஸ்லிம்)

புகாரியின் அறிவிப்பில்: ஸஃப்பை சீர் செய்வது தொழுகையை நிலைநாட்டும் விஷயங்களில் ஒன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகாரியின் மற்றொரு அறிவிப்பில்: (ஸஃப்பில் நிற்கும்பொழுது) எங்களில் ஒருவர் தம் தோள்பட்டையை அருகிலுள்ளவரின் தோள்பட்டையுடனும், தம் பாதத்தை அவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்வோம் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
முஹம்மது ரிஃபாத்
Unknown

Unknown

Related Posts:

3 கருத்துகள்:

  1. Pathathodu patham inaikke vendum endra arivippai pulli viverathudan arivikkavum please.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலே உள்ள அறிவிப்பில் ஹதீஸ் ஆதாரம் 'புகாரி' என்றும், அறிவிப்பாளர் 'அனஸ்' என்றும் உள்ளதே! இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டும்?

      நீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.