Breaking News
recent

நம்பர் 13??????

சலீம் நானாவுக்கு திடீரென ஒரு சந்தேகம்,"13 ஆம் தேதி கெட்ட நாளா? மக்களிடையே எப்படியெல்லாம் மூடநம்பிக்கை நிலவுகிறது.இது சம்பந்தமா பஷீர் காக்காவிடம் கேட்டு விட வேண்டியதுதான்",கங்கணம் கட்டிக்கொண்டார்.

"என்ன சலீமு,என்னவோ பலத்த யோசனையில இருக்காபுல தெரியுது?கேட்டுக்கொண்டே வந்த பஷீர் காக்காவை,ஆமோதிப்பதுபோல பார்த்துவிட்டு சொன்னார் சலீம் நானா,"ஆமா,காக்கா,ஒரு சந்தேகம்,13ம் நம்பர் பத்தி நிறைய மூட நம்பிக்கை உலாவுது,அது சம்பந்தமா உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சு கிடலாமேன்னுதான்".

"அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் 13 ஆம் எண்ணை துரதிர்ஷ்டமாக கருதுகின்றனர். இதனால் 13 ஆம் தேதியன்று எந்த நல்ல காரியத்தையும் அவர்கள் தொடங்குவதில்லை.ஓட்டல்களில் 13 ஆம் எண் உள்ள அறைகள் இல்லை. விமானங் களில் 13 ஆம் எண் இருக்கை இருப்பதில்லை. மருத்துவ மனைகளில் 13 ஆம் எண் படுக்கை கிடையாது. மிக உயரமான கட்டடங்களைக் கட்டுபவர்கள் 13 ஆம் தளத்திற்கு எண் தருவதில்லை. 12-க்குப் பிறகு 14 என்றே எண் தந்துவிடுகிறார்கள். ஏனென் றால், 13 ஆம் எண் மீது பயம்."

"டில்லியில் ஓர் உச்சநீதிமன்ற நீதிபதி உடல் நிலை சரியில் லாமல் மருத்துவமனையின் சிறப்பு அறையில் அனுமதிக்கப் பட்டபோது, அதன் எண் 13 என்பதைப் பார்த்துவிட்டு, தான் வர முடியாது என்று கூறிவிட்டார். வேறு அறையில் தான் அவரைச் சேர்த்தார்கள்."

"ஆனால், இங்கிலாந்திலும், ஜப்பானிலும் இது அதிர்ஷ்ட எண் என்கிறார்கள். பிரிட்டனின் அரச குடும்பத்தவரான லார்டு மவுன்ட் பேட் டன் 13 ஆம் எண் அறையில் தான் தங்குவார். நல்ல எண் என்று நம்பியதாலோ? இந்த இரண்டு நாட்டு மக்களைத் தவிர மற்றவர்களுக்கு எப்படிக் கெட்ட நாளாகியது? மூட நம்பிக்கைதான்".

இதல்லாம் கடைஞ்செடுத்த மூடத்தனம்.இஸ்லாத்துல மட்டுந்தான் இதுக்கெல்லாம் இடமில்லை,இஸ்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கமாசே!,ஸுப்ஹாநல்லாஹ்".அல்லாஹ்வை புகழ்ந்தார் பஷீர் காக்கா.

**************************************************
اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ 009.031

இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். (அல்குர்அன் 9:31)

அதீ ஆப்னு ஹாதிம் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி அவர்கள் இவ்வசனத்தை ஒதிக் காட்டியபோது "கிறிஸ்துவர்கள் தங்கள் பாதிரிகளையும் சந்நியாசிகளையும் வணங்கவில்லையே' என்று நான் கேட்டேன். அதற்கு நபி அவர்கள் "ஆம்! எனினும் அல்லாஹ் விலக்கியதை பாதிரிகள் ஆகுமாக்கி வைக்கும்போது அதை மற்றவர்களும் ஆகுமானதாக எண்ணுகிறார்கள். அல்லாஹ் ஆகுமாக்கியதை அப்பாதிரிகள் விலக்கும்போது அதை மக்கள் விலக்கப்பட்டதாக எற்றுக் கொள்கிறார்கள். எனவே இதுதான் கிறிஸ்துவர்கள் தங்களது பாதிரிகளுக்கும் துறவிகளுக்கும் செய்த (இபாதத்) வணக்கமாகும்.'' என்றும் கூறினார்கள். (ஸுனனுத் திர்மிதி)
இப்னு அப்துல் ரஜாக்

இப்னு அப்துல் ரஜாக்

1 கருத்து:

  1. அமெரிக்கா மட்டுமல்ல இங்கு [மலேசியாவில்] சீனர்களிடம் உள்ள மூட நம்பிக்கை நிறைய. 13 ம் நம்பருக்கு பதிலாக இங்கு லிப்ட்டில் கூட 13A என்று இருக்கும். இதைப்பற்றி 200 வார்த்தைக்கு மிகாமல் ஒரு கட்டுரை வரையலாம். இதில் கொடுமை என்னவென்றால் எண்கலை கண்டுபிடித்தது மனிதன்தான் என்று இவர்கள் யோசிப்பது கிடையாது, அதற்கு பதில் இவர்கள் கஷ்டப்படு சம்பாத்தித பணத்தை எல்லாம் இது போன்ற விரயங்களில் செலவு செய்ய தயார்.

    Zakir Hussain

    பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.