Breaking News
recent

என்கவுன்டருக்கு தயாராகும் நெய்வேலி போலீஸ்

என்கவுன்டருக்கு தயாராகும் நெய்வலி போலீஸ்


நெய்வேலி, மார்ச் 30: நெய்வேலியில் பெருகிவரும் ரவுடிகளின் அட்டகாசத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் என்கவுன்டர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள நெய்வேலி போலீஸôர் திட்டம் வகுத்துள்ளனர்.

நெய்வேலியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் என்.எல்.சி. ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். இதுதவிர 1000-த்துக்கும் மேற்பட்ட வியாபாரிகளும் உள்ளனர்.

இந்நிலையில் நெய்வேலி நகரினுள் ரவுடி கும்பல் ஒன்று அவ்வப்போது, பெண்களிடம் தாலிச் செயின்களை பறிப்பது, வியாபாரிகளிடம் மாமூல் கேட்பது, தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, ஹோட்டல்களில் புகுந்து ரகளை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் நெய்வேலிக்கு தொழில் செய்யவரும் வியாபாரிகளும், தொழிலதிபர்களும் பயப்படத் தொடங்கின்ர். குறிப்பாக நெய்வேலி இந்திரா நகரில் குற்றச் செயல்கள் அதிகரித்ததோடு நில்லாமல் அவ்வழியே செல்வோரிடம் பணம் பறிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள காவல் நிலையங்களில் புகார் செய்தனர். போலீஸôரும் நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்தாலும், ரவுடிகள் ஜாமீனில் வெளியே வந்து தொடர்ந்து தங்களது குற்றச் செயல்களை செய்து வந்தனர்.

அண்மையில் நெய்வேலியில் புறக்காவல் நிலையம் திறக்க வந்த விழுப்புரம் சரக டிஐஜி மாசாணமுத்து, நெய்வேலி காவல் அதிகாரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.

நெய்வேலியில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக தனக்கு நிறைய புகார்கள் வருவதாகவும், இது குறித்து போலீஸôரை கடிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ரவுடிகளின் பட்டியல்களை தயார் செய்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், என்கவுன்டர் குறித்தும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து நெய்வேலி டிஎஸ்பி மதுரைச்சாமி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, ரவுடிகளை கைது செய்ய காவல் அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளார்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை நெய்வேலி வேலுடையான்பட்டு கோயில் வழியே செல்வோர் போவோரிடம் பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, பணம் பறிக்க ஒரு கும்பல் முயல்வதாக நெய்வேலி டவுன்ஷிப் குற்றப்பிரிவு எஸ்ஐ நடராஜனுக்கு கிடைத்துள்ளது.

எஸ்ஐ நடராஜன் தலைமையிலான போலீஸôர் அங்கு சென்று கொள்ளைக் கும்பலை பிடிக்க முயற்சித்தப்போது, போலீஸôரைக் கண்டதும் அக்கும்பல் தாங்கள் பயன்படுத்தி ஜீப்பையும், ஆயுதங்களையும் கீழே போட்டு தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து நெய்வேலியை அடுத்த வடக்குமேலூரைச் சேர்ந்த தனகாந்தன் (31), மணிவர்மா (27), ஐயப்பன் (24), தொப்பையன் என்ற தர்மராஜ் (24), மாயக்கிருஷ்ணன் (24), ஆறுமுகம் உள்ளட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸôர், அவர்கள் பயன்படுத்திய ஜீப்பையும், ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.