Breaking News
recent

சுதந்திர இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள்

சுதந்திர இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள்
சி.எம்.என். சலீம்

நாட்டின் ஜனாதிபதியால் தேர்வு செளிணியப்படுபவர் தான் தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி. இந்த தேர்தல் ஆணையம் தான் நாட்டின் மிக உயரிய பஞ்சாயத்து அமைப்புகளான பாராளுமன்றம், மாநில சட்டமன்றம், போன்றவற்றிற்கு தேர்தல் நடத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி பதவிக்கும், துணை ஜனாதிபதி பதவிக்கும் கூட தேர்தல் நடத்தும் பொறுப்பு இந்த ஆணையத்திற்கு உண்டு. தேர்தலில் சட்ட திட்டங்களை வகுப்பது, அரசியல் கட்சிகளை பதிவு செளிணிவது, போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதியை நிர்ணயிப்பது, அவர்களுக்கு சின்னம் வழங்குவது, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்குச் சாவடிகளை கண்காணிப்பது, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது, தகுதியிழக்கும் உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் ஆளுநர் ஆகியோரிடம் பரிந்துரைப்பது, அனைத்து தேர்தல் நடவடிக்கைகளுக்கும் இந்த அமைப்புதான் பொறுப்பு. சுருங்கச் சொன்னால் இந்தியாவில் வாழும் 110 கோடி மக்களை ஆளுகின்ற வர்க்கத்தை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை (தேவை ஏற்படின் இடையில்) தேர்வு செய்ய அரசியல் சாசன சட்டம் 324ன் கீழ் அமைக்கப்பட்ட தன்னாட்சிப் பெற்ற அமைப்புதான் இந்த இந்தியத் தேர்தல் ஆணையம். இந்த தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரிகஷீமீ பட்டியலைப் பார்ப்போம். நாடு விடுதலை பெற்றதிலிருந்து இது வரையில் பொறுப்பில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.

1. சுகுமார் சென் - 1950 - 1958
2. கே.வி.கே.. சுந்தரம் - 1958 - 1967
3. எஸ்.பி. சென் வர்மா - 1967 - 1972
4. டாக்டர் நாகேந்திர சிங் - 1972 - 1973
5. டி. சாமிநாதன் - 1973 - 1977
6. எஸ்.கே. ஷாக்தார் - 1977 - 1982
7. ஆர்.கே. திரிவேதி - 1982 - 1985
8. ஆர்.வி.எஸ். பெரிசாஸ்திரி - 1986 - 1990
9. வி.எஸ். ரமாதேவி - 1990 நவ26 - டிச 26வரை.
10. டி.என். சேசன் - 1990 - 1996
11. எம்.எஸ். கில் - 1996 - 2001
12. ஜே.எம். லிங்டோ - 2001 - 2004
13. டி.எஸ். கிருட்டிணமூர்த்தி - 2004 - 2005
14. பி.பி. டாண்டன் - 2005 - 2006
15. என். கோபாலசாமி - 2006 - இன்று வரை

நாடு விடுதலை பெற்று 61 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகளில் இதுவரையிலும் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக உஷீமீள முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒருவர்
கூட நியமிக்கப்படவில்லையே ஏன்? இத்தகைய உயரிய பொறுப்புகளுக்கு ஏற்ற தகுதி மிக்கவர்களாக முஸ்லிம் சமூகத்தவர் போதுமான அளவில் இருந்தும் மத்திய அரசின் உயர் பதவிகளில் கூட நியமிக்கப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு அதிர்ச்சித் தகவலும் உண்டு. மத்திய அரசின் துறை வாரியான செயலகங்கள் மொத்தம் 83. இதில் தற்போது செயலர்களாக இருப்பவர்களில் ஒரு முஸ்லிமையும் நியமிக்கவில்லை.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் இடம் பெற வேண்டும். அப்படி இடம் பெற்றால் தான் அது ஒரு முழுமை பெற்ற ஜனநாயகமாகத் திகழும். தேசிய நீரோட்டத்தில் பங்களிப்பு செளிணியாத எந்த சமூகமும் காலப் போக்கில் ஒதுக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும். அத்தகைய நிலையில் தான் இன்றைய முஸ்லிம் சமூகம் இருக்கிறது. முஸ்லிம்கள் கால மாற்றத்தை உணர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


இனி வருங்காலங்களில் இது போன்ற நிலையிலிருந்து மாற வேண்டும். இத்தகைய உயரிய பொறுப்புகளுக்கும் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தையும் வேட்கையையும் இளம் உள்ளங்களில் விதைத்திட வேண்டும். அவர்களுக்கு வழிக்காட்டிட வேண்டும். அதை இந்தச் சமூகமும் சமூக ஆர்வலர்களும் தான் செய்ய வேண்டும்.
முகவைத்தமிழன்

முகவைத்தமிழன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.