Breaking News
recent

வேலூர் மக்களவைத் தொகுதி: ஆர்க்காடு நவாப் குடும்பத்தை சேர்ந்தவர் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டி

வேலூர் மக்களவைத் தொகுதி: ஆர்க்காடு நவாப் குடும்பத்தை சேர்ந்தவர் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டி


வேலூர், மார்ச் 29: வேலூர் மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஆர்க்காடு நவாப் குடும்பத்தைச் சேர்ந்த நவாப் மன்சூர் அஹ்மத் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

வேலூர் நாதன் பேலஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கு கட்சியின் இஸ்லாமிய சகோதரத்துவ குழுவின் மாவட்டத் தலைவர் மு. இஷ்தியாக் அஹ்மத் தலைமை தாங்கினார். பொதுச்செயலர் எச். ஷரீப் பாஷா வரவேற்றார்.

மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, துணைத் தலைவர் பேராசிரியர் தீரன், வடக்கு மண்டல அமைப்பாளர் பி. சம்சுதீன், ஆம்பூர் பி. ராஜேந்திரன், இ. கருணாநிதி, பி.என். மொஹசின் அலி, எம். ஷவுகத் அலி, எஸ். அமான், வி. ஜான்பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

வேட்பாளர் நவாப் மன்சூர் அஹ்மத் நிருபர்களிடம் கூறியது:

எம்பிபிஎஸ் படித்துள்ள நான் மருந்து வியாபாரம் உள்ளிட்ட விற்பனையில் ஈடுபட்டுள்ளேன். பெங்களூர், மைசூர், சென்னை ஆகிய இடங்களில் கட்டுமானத் தொழிலும் செய்து வருகிறேன்.

நான் ஆர்க்காடு நவாப் குடும்பத்தைச் சேர்ந்தவர் (மருமகன்). எங்கள் குடும்பத்துக்கு இந்த மாவட்டத்துடன் 300 ஆண்டுகால உறவு உள்ளது. இந்த மாவட்டத்தில் பீடி, தோல் தொழிற்சாலைகள் தவிர வேறில்லை. எனவே மாற்றுத் தொழிலும், தொழிற்சாலைகளும் தொடங்க திட்டமிட்டுள்ளேன்.

இந்த மாவட்ட மக்கள் அதிக வட்டிக்கு வாங்கி சிரமப்படுகிறார்கள். எனவே "மைக்ரோ கிரிடிட் சிஸ்டம்' என்ற குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவேன். இந்த திட்டம் வங்க தேசத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன், எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் முழு வளர்ச்சிக்கு வித்திடுவேன் என்றார்.
முதுவை ஹிதாயத்

முதுவை ஹிதாயத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.