மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. மத்திய சென்னை, மயிலாடுதுறை மற்றும் இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகின்றது.
தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்,
மயிலாடுதுறையில் தமுமுக தலைவர்
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி,
மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர். கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்விரண்டு கட்சிகள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்.
தமுமுக பி.ஜே.பி யுடன் கூட்டணியா?
மேலே உள்ள செய்தியின் படி தமுமுக - மனிதநேய மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக தாங்கள் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்துள்ளார்கள். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் உள்ளது. அப்படியானால் தமுமுக வின் நிலைப்பாடு என்ன?
ஒரு வேலை தவறுதலாக வெப்மாஸ்ட்டர் கட்சிபெயரை பிழையாக அடித்துவிட்டாரா? தெளிவுபடுத்தினால் சரி!!
பாஜக-வுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி: சரத்குமார்
சென்னை, மார்ச் 23 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 15 இடங்களில் போட்டியிடப் போவதாகவும், சிவகங்கை தொகுதியில் நடிகை ராதிகா போட்டியிட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி : மக்கள் முரசு
பொருமையாக கவனிப்போம்.. சகோ. முகவைத்தமிழன்.பதவிக்காக பி ஜெ பி யுடன் கூட்டனி வைக்கமாட்டார்கள். தமிழ் நாட்டில் உள்ள இயக்கங்கலிலேயே சமுதாய பற்று அதிகம் உள்ளவர்கள் த மு மு க வினர். எது எப்படியொ நாம் நமக்கே உலை வைத்துக்கொள்வதை நிருத்திக்கொள்வோம். இறைவன் நம்முடன் இருக்கிறான்
பதிலளிநீக்கு