Breaking News
recent

சென்னையில் ஹமீதிய்யா அரபிக்கல்லூரி துவக்கம்!

கீழக்கரை கண்ணாடி வாப்பா ட்ரஸ்ட் சார்பில், சென்னை பவளக்காரத் தெருவில் ஹமீதிய்யா அரபிக்கல்லூரி என்ற பெயரில், திருக்குர்ஆன் மனனம் (ஹிஃப்ழு), 5 ஆண்டு பாடத்திட்டத்தைக் கொண்ட ஆலிம் - ஆலிமா படிப்பு மற்றும் அஃப்ஸலுல் உலமா படிப்பு ஆகியவற்றை உலகாதாயக் கல்வியுடன் இணைத்தளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரி 07.06.2009 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, மார்க்க சிறப்பு சொற்பொழிவுகளுடன் துவக்கப்படவுள்ளது.

மவ்லவீ முனைவர் தைக்கா ஷ{அய்ப் ஆலிம், சென்னை கைராத்துல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எம்.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலீ, சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவீ ஓ.எஸ்.எம்.முஹம்மத் இல்யாஸ் காஸிமீ உள்ளிட்டோர் இத்துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்.

நுழைவு, அனுமதி, கல்விக்கட்டணம் முற்றிலும் இலவசம், கணினி மற்றும் ஆங்கில பேச்சுப் பயிற்சி, மாணவ-மாணவியருக்கு தனித்தனி வசதிகள், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஆங்கிலவழிக் கல்வி, இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள், அனைத்து மாணவர்களுக்கும் மாதாந்திர ஊக்கத் தொகை, 8ஆம், 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு எழுத ஏற்பாடு, அனைவருக்கும் தேனீர் வசதிகள், நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் உள்ளிட்ட பல சிறப்புத் திட்டங்களுடன் துவக்கப்படவுள்ள இக்கல்லூரியின் துவக்க விழாவில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு, கல்லூரி முதல்வர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கல்லூரியில் சேர்க்கை பெற்றுள்ள அனைத்து மாணவ-மாணவியரும் 08.06.2009 திங்கட்கிழமை முதல் தினமும் காலை 8.30 மணிக்கு வந்துவிட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தகவல்: மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ,இமாம், இ.டி.ஏ., துபை, ஐக்கிய அரபு அமீரகம.

லால்பேட்டை . காம்

லால்பேட்டை . காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.