Breaking News
recent

இஸ்லாம் ஒரு பார்வை - 2

மனிதனின் ஆன்மிக,சமுக மற்றும் கலாச்சாரத் துறைகளில் தேவைப்படும் கொள்கைகளை நிறைவு செய்திடுவதற்க்காக இறைவன் மனித இனத்திலிருந்தே தனது திருத்தூதர்களை எழுப்பினான். இந்த திருத்தூதர்கள் வாயிலாக இறைவன் தனது வழிகாட்டுதலை தன் வேதவெளிப்பாடக ( Devine Revelation) அளித்தான்.

அந்த இறைவழிகாட்டுதல், முழுமையான ஒரு வாழ்க்கை திட்டமாகும். அந்த வாழ்க்கை திட்டத்தின் பெயர்தான் இஸ்லாம்.

இஸ்லாம் என்பது ஓர் அரபி சொல்லாகும். கீழ்படிதல்,சரணடைதல்,அடிபணிதல் ஆகிய பொருள்களை குறிக்கிறது. ஒரு நெறி எனும் முறையில் இஸ்லாம்,ஒரே இறைவனுக்கு அடிபணிந்து அவனுக்கு முழுமையாய் கீழ்படிந்து நடக்கும்படி வலியுறுத்துகின்றது. இறைவனுக்கு முழுமையாகக் கீழ்படிந்து வாழ்வதே இஸ்லாத்தின் குறிக்கோளாகும். இஸ்லாம் எனும் சொல்லுக்குரிய மற்றொரு அகராதி பொருள் அமைதி என்பதாகும்; உண்மையான ஒரே இறைவனிடம் சரணடைந்து அவனுக்கே கீழ்படிவதால் மட்டுமே ஒருவன் உடல் மற்றும் ஆன்ம அமைதியை அடைந்துவிட்ட முடியும் எனபதை இது அறிவுறுத்துகிறது.

(தொடரும்)
muslimmalar

muslimmalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.