Breaking News
recent

ஒரு கடலோரக் கிராமத்தின் கதை' உருவான கதை தோப்பில் முஹம்மது மீரான்

தோப்பில் முஹம்மது மீரான்


‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’ என்ற சமூக நாவல் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமான தோப்பில் முஹம்மது மீரான் தமிழ்நாட்டின் தேங் காய்ப் பட்டணத்தை பிறப்பிடமாகக் கொண்ட வர். தற்பொழுது திருநெல் வேலியில் வசித்து வருகிறார். தோப்பில் மீரான் எழுத்தை தன் சமூகத் தின் சிக்கல்களுக்குள் இருந்து தேர்ந்தெடுப்பவர். தான் காணும் உலகை தன்னிடமி ருக்கும் இயல்பான மொழியில் பதிவு செய்யும் திறமை அவரின் தனித் தன் மைகளில் ஒன்று. தனக்கு முன்னால் நிகழும் சமூக அவலங்களை தைரியத் துடன் வெளிப்படையாக உரத் துப் பேசும் தோப்பில் மீரான், தமிழை எழுதத் தெரியாத நிலையிலேயே நாவல் உலகத்தினுள் பிரவேசித்தார்.......




தற்பொழுது அவரின் ஐந்து நாவல்களும் ஆறு சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன. சமீபத்தில் வெளிவந்த அவரது ‘அஞ்சு வண்ணம் தெரு’ என்ற நாவலுடன் சென்ற வாரம் இலங்கை வந்திருந்தார். அவரை ஒரு பிரத்தியேக கலந்துரை யாடலுக்காக மீள்பார்வை சந்தித்தது. அக்கலந்துரை யாட லின் முதல் பகுதியை மீள்பார்வை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கி றோம்.



ஒரு நிலப் பிரப்புத்துவத்திற்கு எதிரான குரல் எனது குடும்பத்திலிருந்து எழுகிறது. அந்த வாரிசின் கடைசியாக நான் வருகிறேன். இந்த சமூக அமைப்பு எனக்குள் ஓர் குமுறலை ஏற்படுத்தியது. நம்மை யாருமே அங்கீ கரிப்பதில்லை. காரணம் நாம் தோப்பில் வசிப்பவர்கள். இந்தச் சூழலில்தான் நாங்கள் வளர்ந்தோம். என் மனசுக்குள் எதிர்ப்பு வளர்ந்து கொண்டே வந்தது. உள்ளுக்குள் ஒரு குமுறல் எழுந்தது. அது அடக்கி அடக்கி வைக்கப்பட்டது. அது வெடித்துச் சிதறியதுதான் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை.’

சந்தித்தவர்கள்: சிராஜ் மஷ்ஹூர், ஏ.ஸீ.எம். நதீர், நாஸிக் மஜீத், இன்ஸாப் ஸலாஹுதீன்




அறிமுகமும் எழுத்துலகப் பிரவேசமும்

எனக்குப் பிறந்த திகதி கிடையாது. அதாவது நான் எப்போது பிறந்தேன் என்பது எனக்குத் தெரியாது. அதனை யாரும் எழுதி வைக்கவில்லை. ஏனெ னில், அப்போது கல்வியறிவு எனது சமூகத்தில் அறவே இருக்கவில்லை. தமிழ் நாட் டின் தேங்காய்ப் பட்டணத்தில் தோப்பு என்பது எனது ஊரின் பெயர். ஊரில் ஒரு ஒதுக்குப் புற மாகத்தான் எனது இடமிருந்தது.




அன்று எமது சூழலில் தமிழ் படிக்க வாய்ப்பிருக்கவில்லை. மலை யாளம் படிக்கவே சந்தர்ப்பம் இருந் தது. மெட்ராஸ் பல்கலைக்கழகத் தில் மலை யாளம் பயின்றேன். அப் போது எனக்கு தமிழ் அவ்வளவாக ஓடாது. தமிழைப் பேச முடியும். ஆனால், எழுத முடியாது. எனது முதல் நாவலை எழுதும்போது நான் எந்தத் தமிழ் நாவலையும் வாசித் திருக்கவில்லை. எந்தத் தமிழ்ப் படைப்பாளிகளையும் எனக்குத் தெரியாது. சுந்தர ராமசாமி என்று ஒருத்தர் உண்டு என்பது மட்டும் தான் எனக்குத் தெரிந்திருந்தது. இன்னும் சொன்னால் நான் ஜெய காந்தனை வாசித்ததே இல்லை.



அண்மைக் காலத்தில் தமிழில் கொஞ்சம் வாசித்துள்ளேன். எந்தக் கதையும் எந்த எழுத்தாளனும் என்னைப் பாதித்ததில்லை; எனக் குள் தாக்கத்தை உண்டு பண்ணிய தில்லை. சில நேர்காணல்களில் கேட்பார்கள், உங்கள் முன்மாதிரி எழுத்தாளர் யார் என்று? எனக்கு அப்படி ஒருவரும் கிடையாது. என்னை யாருமே பாதித்ததில்லை. நான் நானாகவே இருக்கிறேன். மக்களுடைய கதையை அவர் களுடைய மொழியில் எனக்குத் தெரிந்த படி எழுதுகிறேன்.

ஒரு கடலோரக் கிராமத்தின் கதை உருவான பின்னணி

தேங்காய்ப் பட்டணம் நான்கு அடுக்குகளைக் கொண்டது. தங்கள், நிலப்பிரபுக் கள், மத்திய தர வர்க்கத் தினர், தொழிலாளர்கள் என நான்கு வகையான பிரி வினர்களைக் கொண் டது. தங்கள் என்பவர்கள் உயர்ந்த வர்க்கத்தினர். தங்க ளுக்கும் பிற ஜனங்களுக்கும் தொடர்பு இல்லை. நிலப் பிரபுக்களுக்கும் இவர் களுக் கும்தான் தொடர்பு இருந்தது. அதே போல நிலப்பிரபுக்களுக்கும் மத்திய வர்க்கத்தினருக்கும் தொடர்பு கிடை யாது. இதுதான் அன்றைய சமூக அமைப்பு.



தோப்பு என்பதுதான் நான் இருந்த இடம். அது எனது ஊரின் கிழக்குப் பகுதி. அது ஒரு ஒதுக்குப் பகுதி. ஊரின் மேற்குப் பகுதியில் மாலிக் பின் தீனார் கட் டிய பள்ளிவாயல் இருக்கிறது. இந்தப் பள்ளியைச் சுற்றி முஸ்லிம் குடியி ருப்புக்கள் இருந்தன. தங்கள், நிலவுடமையாளர்கள், நடுத்தர வர்க்கத்தினரின் வீடுகள் இங்குதான் இருக்கும். ஆனால் நான் காவது பிரிவான தொழிலா ளர்கள் ஆற்றோரம், கடற்கரை, மற்றும் கிழக்குப் பகுதிகளில் இருப்பார்கள்.



தோப்பில் உள்ளவர்கள் எந்த விடயத்திற்கும் அழைக்கப்பட மாட்டார்கள். தோப்பில் உள்ளவர் களை தீண்டத் தகாதவர்கள் என்றே அவர்கள் கருதினார் கள். இங்குள்ள மரண வீட்டிற்கும் அவர்கள் வர மாட்டார்கள்.



நிலச் சுவாந்தர்கள் பிற சமூகங் கள் இரண்டையும் அடக்கி ஆண் டார்கள். பள்ளிவாசல் நிருவாகம் இவர்களிடம்தான் இருந்தது. இங்கு எழுதாத பல சட்டங்கள் உண்டு. சட்டங்களை மீறுபவர்களை கட்டி வைத்து அடிப்பார்கள்.



ஒரு கல்யாணம் நடந்தால் அதனை ஊருக்குச் சொல்ல வேண்டு மானால் நிலச் சுவாந்தர்கள் போய் முதலாளி வீட்டுக்குச் சொல்வார்கள். அது ஊருக் குச் சொன்னது போலத் தான். அதனை அங்கீகரிக்க வேண்டு மானால் கல் யாண வீட்டில் அறுக்கப் படும் ஆட்டின் முழு ஈரலையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கொடுத்தால்தான் நிகாஹுக்கு லெப்பை அனுப்பப்ப டுவார்.


பள்ளியில் கூட கௌரவமாய்ப் போய் உட்கார முடியாத ஒரு நிலை இருந் தது. முதலாளி பள்ளிவாய லுக்கு வந்தால்தான் குத்பா ஓதப் படும். அவர் பள்ளிவாசலுக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை இருந்தால் அவரது செருப்பு அங்கு வர வேண் டும் அல்லது தலைப்பாகை. முஅத்தின் தலைப்பாகையைக் கொண்டுபோய் மிம்பரில் வைப்பார். அதன் பிறகுதான் குத்பா. இப்படிப் பட்ட ஒரு சமூக அமைப்பு.



எனது உப்பா (வாப்பாவின் வாப்பா) ஒரு கலகக்காரர். அவர் யாருக்கும் பயப் படவில்லை. அப் போது எனது மாமிக்கு திருமணம் நடந்தது. அன்றுதான் முதல் எதிர்ப் புக் குரல் எனது வீட்டிலிருந்து எழுந்தது. ஈரலைக் கொடுக்க வேண் டாம்; ஜனங்களுக்கு சாப்பிடக் கொடுங்கள் என அவர் சொன்னார். ஈரல் அங்கு போகாததால் என் மாமியின் கல்யாணம் ஊரில் பதியப் படவில்லை.



ஒரு நிலப் பிரப்புத்துவத்திற்கு எதிரான குரல் எனது குடும்பத் திலிருந்து எழுகிறது. அந்த வாரிசின் கடைசியாக நான் வருகிறேன். இந்த சமூக அமைப்பு எனக்குள் குமுறலை ஏற்படுத்தியது. எம்மை யாருமே அங் கீகரிப் பதில்லை. காரணம் நாங்கள் தோப்பில் வசிப்பவர்கள்.



எங்கள் வீடு தோப்பில் கடைசி எல்லையில் இருக்கும். அதைத் தள்ளி பொற் கொல்லர்களின் சுடு காடு. சவம் சுடும் புகை எங்கள் வீட்டுக்கு அடிக்கும். மண்டையோடு (கபாலம்) வெடிக்கும் சத்தம் கேட்கும்.



இந்தச் சூழலில்தான் நாங்கள் வளர்ந்தோம். என் மனசுக்குள் எதிர்ப்பு வளர்ந்து கொண்டே வந் தது. உள்ளுக்குள் ஒரு குமுறல் எழுந்தது. அது அடக்கி அடக்கி வைக்கப்பட் டது. அது வெடித்துச் சிதறியது தான் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை.’



முஸ்லிமாக இருந்தாலும் நாங் கள் அடிமையாக இருந்தோம். அந்த அடக்கப் பட்ட வாழ்க்கையை மறு த்து எனக்குள் ஒரு கலகக்காரன் எழுந்துகொண் டான். அந்த மனக் குமுறலை நான் மலையாள மொழி யில் பதிந்து வைத் தேன். பிறகுதான் அதை தமிழில் எழுதினேன். நான் தமிழில் சொல்லச் சொல்ல 20 பேர்கள் அதனை எழுதியிருப்பார் கள். இப்போது என்னால் தமிழில் எழுத முடியும். ஊர் மக்களுக்கு அன்றைய அந்த வாழ்க்கை சகஜமா கிப் போய் விட்டது. யாரும் அதனை எதிர்க்க வில்லை. நான்தான் அதனை வெளி யில் கொண்டு வந்தேன்.



முதல் நாவல் வெளியீடும் அதற்குப் பிறகும்

இந்த நாவல் எழுதப்பட்டு ‘முஸ்லிம் முரசில்’ வெளிவந்து பத்து ஆண்டு களுக்குப் பின்னரே நூல் வடிவம் பெற்றது. முஸ்லிம் முரசில் தொடராக வெளிவந்து முடிந்ததன் பின்னர் நிறைய எதிர்ப்புக் கடிதங் கள் பிரசுரமாகின.




ஒரு கடலோரக் கிராமத்தின் கதை நாவலாக வெளிவர இருக் கிறது; தேவை யானவர்கள் அறிவிக்க வும் என ஒரு விளம்பரம் கொடுத் தேன். எனது நாவ லுக்கு முஸ்லிம் களிடத்தில் பெரும் வரவேற்புக் கிடைக்கும் என நினைத் தேன். ஆனால், நான்கு பேரிடமிருந்து மட் டுமே கேள்வி வந்தது. பிறகு அந்த எண்ணத்தை விட்டுவிட்டேன்.



திருநெல்வேலியில் எனக்கு ஒரு கடையிருந்தது. அங்கு பால் விற்கக் கூடிய ஒரு செட்டியார் இருந்தான். அவன் என்னிடம் வாசிக்க ஏதாவது கேட்டபோது என்னிடமிருந்த முஸ்லிம் முரசு பத்திரிகைக் கட்டைக் கொடுத்தேன்.



அவன் அதிலுள்ள எனது நாவ லைப் படித்துவிட்டு அதனை பைன்ட் செய்து கொண்டு வந்து தந்தான். அவனை எந்த வார்த்தையில் பாராட் டுவது என்று தெரியவில்லை. ஏனெ னில் அவன் ஒரு சாதாரண ஆள். இவனே இந்தக் கதையை உள்வாங்கி யிருக்கின்றான். இது முஸ்லிம் சமூ கத்திற்கு வெளியில் நிச்சயம் புரியப் படும் என ஒரு நம்பிக்கை எனக்குள் எழுந்தது.




எழுதி பத்து ஆண்டுகளின் பின் னர்தான் இது நிகழ்கிறது. எனது சொந்தச் செலவில் புத்தகத்தை அச் சிட்டு ஊரில் ஒரு வெளியீட்டு விழா வைத்தேன். அங்கு பேசியவர்கள் இதில் எமது கிராமத்தின் கதை சொல்லப்பட்டிருப்பதால் அதை ஒரு வரலாற்று நூல் எனக் கருதிக் கொண்டு பேசினார்கள்.




அன்று 70 புத்தகங்கள் விற்கப் பட்டன. அடுத்த நாள் ஒரு புரளி கிளப்பி விடப்பட்டது. இது நமது ஊர் வரலாறல்ல. தங்கள்மார்களை யும் முதலாளிக ளையும் திட்டி எழு திய புத்தகம் என்பதே அந்தப் புரளி. ஊரில் ஜதுபு பிடித்த ஒரு தங்கள் இருந்தார். அவருக்கு இடைக்கிடை யே ஜதுபு வரும். சாதாரண மக்க ளுக்கு வந்தால் அது பைத்தியம். அவர்களுக்கு வந்தால் அது ‘ஜதுபு ஹால்’ என்று சொல்லப்படும். அது ஒரு அந்தஸ்தான பைத்தியம். அந்தத் தங்களிடம் எவனோ விசயத்தைச் சொல்லிவிட்டான். அவர் கொஞ்சம் பெருத்த ஆள். கம்பீரமான தோற்ற முடையவர். அவர் மக்களோடு கிளம்பி வந்தபோது நான் திருநெல் வேலிக்கு ஓடிவிட்டேன்.



சுந்தர ராமசாமி தனது நண்பர் களுக்கு எழுதிய எல்லாக் கடிதங் களிலும் ‘இப்படியொரு சிறப்பான நாவல் வந்துள்ளது; கட்டாயம் படியுங்கள்’ என ஒரு வரி எழுதினார். இதனால் நாவல் விற்றது. 1999ம் ஆண்டு இஸ்லாமிய இலக்கிய மாநாடு இந்தியாவில் நடந்தது. இந்த மாநாடு நடக்க முன்பே இந்தியாவின் சாகித்திய அகடமி விருதை நான் பெற்றிருந்தேன். இந்தியாவில் ஒரு முஸ்லிம் வாங்கிய முதல் விருது இது.




அந்த மாநாட்டில் 35 பேருக்கு பாராட்டு வழங்கப்பட்டது. அதில் ஐந்து பேர் கலாநிதிப் பட்டம் பெற்ற வர்கள். அவர்கள் மூன்று பேர் எனது நாவலை வைத்துத்தான் ஆய்வைச் செய்திருந்தார்கள். எனக்கு எதுவும் கிடைக்க வில்லை. ‘ஒரு கோவணமா வது தரக் கூடாதா?’ என வேண்டிக் கையாகக் கேட்டேன்.



இன்னும் சமுதாயம் மத்தியில் எனக்குப் போதிய அங்கீகாரம் இல்லை. முஸ்லிம்களது எந்த மாநாட்டிற்கும் என்னை அழைத்த தில்லை. இது எனக்குப் பெரிய விடயமல்ல. நான் எல்லோரையும் மக்களாகவே பார்க்கி றேன்.




தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான கலாசாரப் பரிவர்த்தனை
எங்கள் ஊரிலுள்ள அதே கலா சாரம் இங்கும் இருக்கிறது. எங்கள் தேங்காய்ப் பட்டணத்தில் பேசக் கூடிய அதே மொழி இங்கும் பேசப் படுகிறது. தென்னிந் தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வியா பாரத் தொடர்பும் மதத் தொடர்பும் அதிகமாகக் காணப்படுகின்றது. அங்கிருந்து மத அறிஞர்கள் இங்கு வருவார்கள். இங்கிருந்து மத அறி ஞர்கள் அங்கு செல்வார்கள். அத் தோடு மொழித் தொடர்பும் இருக் கின்றது.





அறபிகளுக்கும் இலங்கையி லுள்ளவர்களுக்கும், தென்னிந்தியா விலுள்ளவர் களுக்கும் வியாபாரத் தொடர்பு காணப்பட்டது. இலங்கை யிலிருந்து நிறைய படைப்புக்கள் வந்திருக்கின்றன. இங்கு நிறைய கவிஞர்கள் தோன்றியிருக்கி றார்கள். இவர்களுடைய கவிதைகள் அங்கு வரும். அறபுத் தமிழ் நூல்கள் இங் கிருந்துதான் வெளிவந்தன. முஸ் லிம்களின் முதல் நாவலும் இங்கி ருந்துதான் (இலங்கை) வெளிவந்தது.


துறைமுகம் எனும் நாவல்


துறைமுகம் முழுக்க முழுக்க என் குடும்ப அனுபவம். அதில் வரும் காஸிம் புள்ள எனும் பாத்திரம் நானாக இருக்கலாம், என் தம்பியாக இருக்கலாம் அல்லது என் அண்ண னாக இருக்கலாம். அதில் மீரான் பிள்ளை என்பது என் தகப்பனார். ‘சம்ப’ என்றால் கருவாடு. சம்பக் கட்டு 120 இறாத்தல் கொண்ட ஒரு கருவாட்டுக் கட்டு. அதை வியாபா ரத்துக்காக அங்கிருந்து தூத்துக் குடிக்கு அனுப்புவோம்.
ஒருமுறை கருவாட்டை ஏற்றிச் செல்லும் கப்பல் மூழ்கப் பார்த்தது. அந்தக் கப்பலின் மேற்பகுதியில் எங்களது அறுக்குலா கருவாடு இருந்தது. அதைத் தூக்கி கடலில் வீசினார்கள். அன்றுடன் எங்கள் வியாபாரம் வீழ்ந்து போனது. அந்த அனுபவம்தான் துறைமுகம்.


தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வரங்கு


தமிழ் பேசும் முஸ்லிம்களின் கலாசாரம், பண்பாடு, மொழி என் பன பற்றித் தான் அந்த மாநாடு நடைபெற இருக்கிறது. தமிழ் பேசும் முஸ்லிம்கள் இந் தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளில் வசிக்கிறார்கள். அவர்களது பண்பாடும் மொழியும் கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டி யவை. இது பற்றி ஜேர்மனி யைச் சேர்ந்த தேர்ஸ்டன் என்பவர் ஆய்வு செய் திருக்கிறார். மொழிப் பரிமாற்றங்கள் எப்படி ஏற்பட்டன? மொழிச் சிதைவுகள் எப்படி நிகழ்ந் தன? அவர்களது பண்பாடுகளில் மாற்றங்கள் காணப்பட்டாலும் அதன் அடிநீரோட்டம் ஒன்றாகத் தான் காணப்படுகின்றது. இது பற்றிய ஒரு மிகப் பெரிய ஆய்வு நமக்குத் தேவை. இன்று முஸ்லிம் கள் பல இடங் களிலும் சிதறியிருக்கி றார்கள். அவர்களது அடிநீரோட்டத் தில் எப்படி ஒற்றுமை ஏற்பட்டது? என்பது பற்றி நாம் அறிய வேண் டும். இதுபோன்ற ஆய்வுகள் அதற்கு நிச்சயம் பயன்படும் என்று நம்பு கின்றேன்.



சாய்வு நாற்காலி


மூதாதையர்களது இரத்தம் பின் தலைமுறையில் எப்படிச் செயற் படுகிறது, பாலியல் ஒரு மனிதனை எப்படி ஆட்டிப் படைக்கிறது என் கின்ற இரண்டுக் கும்தான் அதில் முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். ஏன் இந்தத் தலைப்பை எடுத்தேன் என்றால் எங்களது ஊரில் ‘நான் உழைக்க மாட்டேன். பழைய இடாம்பீகத்தில்தான் வாழுவேன்’ என்ற ஒரு நிலை இருந்தது. மேற்படி இரண்டு அம்சங்களையும் கொண்டு உருவானதுதான் சாய்வு நாற்காலி யின் கதை.
இலங்கைப் படைப்புக்கள்


இலங்கைக் கவிதைகள் மிகுந்த வீரியம் மிக்கவை. அவை மிகச் சிறந்த அமைப்பில் இருக்கின்றன. கவிதைச் சொற்கள் குண்டடிப்பது போன்ற உணர் வைத் தருகின்றன. ஆனால், அந்தளவிற்கு சிறுகதையும் நாவலும் வர வில்லை என்பதே எனது அவதானம். இலங்கையில் எழுத்தாளர்களை அரசு ஊக்குவிப்ப தில்லை. அரசும் தன்னார்வ அமைப் புக்களும் எழுத்தாளர்களை நிச்சயம் ஊக்குவிக்க வேண்டும். இந்தியா வில் அந்த நிலை இருக்கிறது.


அஞ்சுவண்ணம் தெரு


அஞ்சுவண்ணம் தெருவில் முஸ் லிம்களுக்கிடையிலுள்ள பிளவு களைப் பதிவுசெய்திருக்கிறேன். சில இயக்கங்களது நடவடிக்கைகள் மூலம் முஸ்லிம் இலக்கியம், காப்பி யங்கள் அழிந்து போகுமோ என்ற ஒரு அச்சம் எனக்கு ஏற்பட்டது.
ஒரு சமூகத்தின், தேசத்தின் வேராக இருப்பது இலக்கியம்தான். அதன் மூலம் தான் எமது நம்பிக்கை களை வெளிக்காட்ட முடியும். அத் தோடு நாங்கள் ஏற்படுத்துகின்ற பிளவுகள் ஒரு தீவிரவாதக் கண் ணோட்டத்தோடு பிறர் எம் மைப் பார்க்க காரணமாக அமைந்து விடு கிறது என்பதையும் அதில் பதிவு செய்துள்ளேன்.



அஞ்சுவண்ணம் என்றால் ஒரு முஸ்லிம் அடையாளம். மணிகிராம் என்பது யூதர்களின் வர்த்தகச் சங்கத்தினது பெயர். அதுபோல அஞ்சு வண்ணம் என்பது முஸ்லிம்களின் வர்த்தக சங்கம். இது 9ம் நூற்றாண் டில் கேரளாவில் நிலவிய அமைப்பு. அஞ்சுவண்ணத்தார் என்பது முஸ் லிம்கள். அவர்கள் 11 பேர்களது பெயர்கள் செப்புத் தகட்டில் பதியப் பட்டிருந்தன. குமரி மாவட் டத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் எல்லா இடங்களிலும் அஞ்சுவண்ணம் தெரு என்றொரு வீதி காணப்படு கிறது. கேரளாவிலும் இந்த வீதி களைக் காண லாம்.



நன்றி: மீள்பார்வை
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.