Breaking News
recent

இஸ்லாமிய சகோதரிக்கு ஒரு கடிதம்!

அல்லாஹ் உன்னையும் என்னையும் இறுதி மூச்சுவரை தஃவாவுடன் நிலைத்திருக்கச் செய்யட்டும்.


உன்னோடு சில விடயங்களைப் பற்றிப் பேச வேண்டுமென்ற எண்ணம் நெடுநாளாகவே எனக்குள் இருக்கின்றது.

இருப்பினும் அதற்கான சந்தர்ப்பம் இன்னும் கிடைக்கவில்லை. அதனால் இந்த மடலினூடாக உன்னைச் சந்திக்கின்றேன்.....



அன்பின் சகோதரியே!


என்னையும் உன்னையும் இஸ்லாத்தில் பிறக்கச் செய்த அந்த அல்லாஹ்வுக்கு நாங்கள் வாழ்நாள் முழுவதும் ஸுஜுத் செய்தாலும் போதாது. ஏனெனில், அவன் எங்களை கண்ணியப் படுத்தியிருக்கிறான். அதேநேரம் அவன் எங்களிடம் எதிர்பார்ப்பது இந்த உலகில் நாம் அவனது பிரதிநிதியாக அவனை வணங்கி செயற்பட வேண்டும் என்பதை தான்.
உனது வாழ்க்கையையே நீ அவனை வணங்குவதற்காக என்றே ஆக்கிக் கொள்.



அதுதான் நாளைக்கு எஞ்சப் போவது. சகோதரியே எனக் கும் உனக்கும் ஒரு கடமை இருக்கிறது. கண்ணியமிக்க இஸ்லாத்தில் பிறந்ததற்காக மட்டும் எமக்கு சுவனம் கிடைப்பதில்லை. நாம் இந்த உலகிலே நிறைய கருமம் ஆற்ற வேண்டியிருக்கிறது. இறை தூதர் (ஸல்) அவர்கள்; "உங்களில் சிறந்தவர் அல்குர்ஆனைக் கற்று அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுப்பவர்" என்று கூறினார்கள். அந்தப் பாக்கி யத்தை அடைய நீயும் நானும் ஏன் முயற்சிக்கக் கூடாது?




இஸ்லாத்தைப் படிப்பதும் அதனைப் பிறருக்கு எத்தி வைப்பதும் ஆண்களுக்கு மட்டுமே உரிய கடமையன்று. அது பெண்களாகிய நமக் கும் உள்ளது. இன்றைய எமது சமுதாயம் சீரழிவை நோக்கிச் செல்வதில் இருந்து நாம் காப்பாற்ற வேண்டும். அது நம் அனைவரினதும் கடமை.
பெண்கள் என்றால் வீட்டுக்குள் இருப்பவர்கள் என்று பொருளல்ல.



அதேநேரம் நாம் வீட்டுக்குரிய கடமைகளைப் புறக்கணிக்கவும் கூடாது. ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இஸ்லாத்தைக் கற்பதன் மூலம் முதலில் எம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்.
பிறகு எம் கணவரை, பிள்ளைகளை, குடும்பத்தை அதன்படி வாழ வைக்க முயற்சிக்க வேண்டும்.




சகோதரியே! குடும்பம் என்பது ஒரு சமூகத்தின் சிறிய வடிவம். ஒவ்வொரு குடும்பமும் சிறந்ததாக இருக்குமானால் அந்த சமூகம் சிறந்ததாக இருக்கின்றது என்று அர்த்தம். ஒவ்வொரு குடும்பத்திலும் வீழ்ச்சி காணப்படுகின்றது என்றால் அந்த சமூகமும் வீழ்ச்சியில் இருக்கின்றது என்றுதான் அர்த்தம். எனவே, நாம் எம்மைக் கவனிக்க வேண்டும். பிறகு குடும்பத்தை சீர்செய்ய வேண்டும்.




நான் மீண்டும் சொல்கிறேன். அனைத்தும் உட்பொதிந்த ஒரு கண்ணியமிக்க மார்க்கத்தில் அல்லாஹ் எம்மைப் பிறக்கச் செய்திருக்கி றான். அந்த மார்க்கம் பூரணமானது. அரசியல், கல்வி, பொருளாதாரம், நீதி என எல்லாத் துறைகளையும் பேசி இருக்கிறது. அவற்றை நாமும் விளங்குவது எம்மீதுள்ள கடமையாகும். அப்போதுதான் எமது பிள்ளை களுக்கு தூய்மையான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கொடுக்கலாம். அதை வைத்து அவர்கள் தம் வாழ்க்கைப் பிரச்சினைக்குத் தீர்வுகளைத் தேடிக் கொள்வார்கள்.




அன்பின் சகோதரியே! நாம் ஒரு நல்ல சமூகத்திற்கான பிரஜைகளை உருவாக்குகின்றவர்கள். எனவே, நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, நீ இஸ்லாத்தின் சிந்தனைகளை, கருத்துக்களை தாங்கிவரும் புத்தகங்களை, சஞ்சிகைகளைப் படி. அதனை உன் சகோதரி களுக்கு, பிள்ளைகளுக்கு, பெற்றோர்களுக்குச் சொல்லிக் கொடு. நாளை உருவாகப் போகும் அந்தச் சிறந்த சமூகத்திற்கு நாமும் அத்திவாரமாய் இருக்க அல்லாஹ் உதவி செய்யட்டும்.




அல்லாஹ் உனக்கு அருள்பாளிப்பானாக

இப்படிக்கு இஸ்லாமிய சகோதரி


அஸ்மா
Unknown

Unknown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.