தகவல் பரிமாற்றத்தில் நூதன முறையைக் கையாண்ட ஹெட்லி

தனது கூட்டாளிகளுடன் தகவல்களை பரிமாறிக் கொள்வதில் டேவிட் ஹெட்லி நூதன முறையைக் கையாண்டதாக அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர் என்ற உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்கா, பாகிஸ்தானில் உள்ள தனது கூட்டாளிகளுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள மின்னஞ்சல்களை ஹெட்லி பயன்படுத்தியுள்ளார். ஆனால், மின்னஞ்சலை மற்றொருவருக்கு அனுப்பினால் அதனை உளவு பார்க்க முடியும் என்பதை உணர்ந்திருந்த ஹெட்லி, தனது மின்னஞ்சல் முகவரியிலேயே தேவையான தகவல்களைப் பதிவு செய்து சேமித்தார்.

அதன் பின்னர் அதே மின்னஞ்சல் முகவரியில் உள்நுழைந்து அவரின் கூட்டாளிகள் ஹெட்லி பதிவு செய்த தகவல்களை தெரிந்து கொண்டனர். இந்த 'electronic dead drop' என்ற நூதன முறையை ஹெட்லி பயன்படுத்தியதால் அவரது மின்னஞ்சல் தகவல்களை உளவுத்துறையால் கண்டறிய முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
PUTHIYATHENRAL

PUTHIYATHENRAL

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    '
    'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

    Blogger இயக்குவது.