Breaking News
recent

இஸ்லாத்தின் ஒளியில் அமைச்சர்.இந்தியா-ஜப்பான் வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் கட்டமைப்புகளின் நிலை குறித்த தேசிய கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.இந்த விழாவில் மத்திய ரெயில்வே இணை மந்திரியும், கேரளா முஸ்லிம் லீக் தலைவருமான இ.அகமது கலந்து கொண்டார்.

பாரம்பரிய வழக்கப்படி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது. ஆனால் மத்திய மந்திரி அகமது குத்துவிளக்கு ஏற்ற மறுத்து விட்டார்.

இது தொடர்பாக விழா அமைப்பாளர் ஒருவர் கூறும் போது முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குத்து விளக்கு ஏற்ற மாட்டார்கள். அவர் இஸ்லாமியர் என்பதால் குத்துவிளக்கு ஏற்ற மறுத்து விட்டார் என்றார்.

இந்த விழாவில் பாடகர் கே.ஜே.ஜேசுதாசும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்து கொண்டார். மத்திய மந்திரியின் செயலை கண்டித்து அவர் வெளிநடப்பு செய்தார்
crown

crown

3 கருத்துகள்:

 1. அப்துல் காலாம்களும்,முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் இன்ன பிற முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் அரசியல் வா(வியா)திகளும் கண்டு செயல் பட இது ஒரு நல்லுதாரணம்.

  பதிலளிநீக்கு
 2. பாடகர் ஜேசுதாசுக்கு கொள்கை எதுவும் கிடையாது.காசுக்காக கச்சேரி செய்பவர்களிடம் கொள்கையை எதிர்பார்க்க முடியாது. இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.
  மத்திய அமைச்சரின் கொள்தை உறுதியை மனமார பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு
 3. குத்துவிளக்கு ஏற்றுவது இந்திய பாரம்பரிய வழக்கங்களில் ஒன்று. விழா நடந்தது இந்தியாவில். அஹமது ஒன்றும் பாகிஸ்தான் நாட்டுக்கு மந்திரி அல்ல. இந்தியனாக இந்திய இறையாண்மையை காப்பேன் என்று கூறி தான் பதவி பிரமாணம் எடுத்திருப்பார். நடப்பது வெளிநாட்டு பிரஜைகளும் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் ஒரு நாட்டின் பாரம்பரிய வழக்கம் நடக்கும்போது மதத்தை உள்ளே கொண்டு வந்து வெளி நாட்டினர் முன்னிலையில் அந்த வழக்கத்தை புறக்கணிப்பது எவ்வளவு கேவலமானது என்று 'அறிவு உள்ள' எல்லோருக்கும் தெரியும். இஸ்லாமியர்கள் யாருக்கும் இல்லாதது எனக்கு மட்டுமா இருக்க போகிறது என்பதை அமைச்சர் தெளிவாக காட்டி விட்டார். இந்த அமைச்சர் இடம் பெற்றிருக்கும் 'முஸ்லிம் லீக்' எல்லா தேர்தலிலும் இடம் பெற்று இருப்பது மதசார்பற்ற கட்சிகளின் கூட்டணியில். ஆனால் இவருக்கு குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சியில் மதம் பெரிதாக போய்விட்டது. இந்த நாட்டின் பாரம்பரிய வழக்கம் இவருக்கு வேண்டாம் ஆனால் இந்த காபிர் நாட்டின் அமைச்சர் பதவி மட்டும் வேண்டும். அந்த மேடையில் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு குத்து விளக்கு ஏற்றுவதை புறக்கணித்து இருந்தால் அமைச்சரின் கொள்கை உறுதியை மனமார பாராட்டி நீங்கள் ஜிங்கி அடித்திருப்பதை ஏற்று கொண்டிருக்கலாம். ஆனால் இது?
  அமைச்சர் ஒரு மேல் மாடி காலி ஆசாமி அந்த கேவலத்தை பதிவாக போட்டு ஜிங்கு சா போட்டு கொண்டிருக்கும் நீங்கள்? இப்படி வெளிவேடம் போடுபவர்கள் எப்படி இந்த நாட்டிற்கு உணமையானவர்களாக இருப்பார்கள். இப்படி பதவிக்கு ஒரு சொல்லும் மதத்திற்காக ஒரு செயலும் செய்பவர்கள் உங்கள் பாஷையில் எந்த வகையான கொள்கை உடையவர்கள் திரு மஸ்தூக்கா அவர்களே.
  ஒரு குத்துவிளக்கு ஏற்றுவதால் உங்கள் அல்லா தண்டித்து விடுவாரா எனக்கு புரியவில்லை. நாம் வாழ்வது பல பழக்க வழக்கங்களும், பண்பாடு கலாச்சாரங்களும் கொண்ட ஒரு நாட்டில். பாடகர் ஜேசுதாஸ் அதை முழுமையாக புரிந்து கொண்டவர். திரு அப்துல் கலாம் அவர்களும் அப்படியே.
  நான் ஒன்று கேட்கிறேன் ஒரு சாதாரண குத்து விளக்கு ஏற்றும் விசயத்திற்கு இந்த நாட்டின் பழக்கங்களுடன் உங்களால் ஒத்து போக முடியவில்லையே ஏன் அடிக்கடி எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று முழக்கம் இடுகிறீர்கள். இந்த நாடு எங்களை புறக்கணிக்கிறது என்று கூச்சல் இடுகிறீர்கள்.

  அமைச்சரின் இந்த இழிவான செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த யேசுதாஸ் அவர்கள் உண்மையிலேயே உயர்ந்தவர்.
  M. Jaya Prakash

  பதிலளிநீக்கு

'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்

Blogger இயக்குவது.