அமெரிக்காவில் கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் வங்கியில் கொள்ளை
அமெரிக்கா நாஷ்வெல் (Nashville) நகரில் உள்ள சன் ட்ரஸ்ட் வங்கியில் (SunTrust Bank) கிறிஸ்மஸ் தாத்தா வேடத்தில் ஒருவர் நுழைந்துள்ளார். அமெரக்காவில் கிறிஸ்துமஸ் காலங்களில் கிறிஸ்மஸ் தாத்தா போல் மக்கள் வேடம் அணிவது இயல்பான செயல் ஆதலால் யாரும் அவரை சந்தேகப்படவில்லை.
ஆனால் வங்கி ஊழியரை நெருங்கி துப்பாக்கி முனையில் அவரை மிரட்டியுள்ளார். பயந்த ஊழியர் எடுத்துத் தந்த பணத்துடன் ஒரு காரில் அவர் தப்பியோடிவிட்டார். பதிவாகியுள்ள செக்யூரிட்டி காமெராவில் கிறிஸ்மஸ் தாத்தா உருவம் மட்டும் தெரிவதால் அவரை எப்படி கண்டுபிடிப்பது என்று போலீஸ் குழம்பி வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
'
'இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்